தென்மேற்கு பருவக்காற்று
வரலாமா ...வேண்டாமா.....
சற்று யோசித்து....தயங்கி...
இதோ...வந்தே விட்டது...
தென் மேற்கு பருவக்காற்று...
சிலு சிலுவென்று ஈரக்காற்று
யானைக்கூட்டம் போவது போல மேக ஊர்வலம்
ஜன்னலில் பதித்த முகவாயை
எடுக்கவிடாது சில்லிட்டு சுகமளிக்கும்
இரும்புக் கம்பிகள்.
எல்லோரும் தூங்கியபின்னும்
சீறி அடிக்கும் காற்று
திட்டு வாங்கிக்கொண்டு ஜன்னலைத்
திறக்க தூண்டுகிறது.
எங்கோ உடல் மறைத்துக் கூவி குயிலும்
வசந்தம் வந்துவிட்டது என்று
அறிவிப்பு தந்து விட்டது.
இன்னும் சாரல் மழை வருமா .....
என்று ஏங்கித் தவிக்கிறது
என் வீட்டு ரோஜாத் தொட்டி....
மழையே......வா.....வா.....
வந்து விடு.
உன்னை வரவேற்க காத்திருக்கிறேன்.
இப்படிக்கு
தொட்டிச் செடிகள்.
Monday, June 7, 2010
Sunday, May 30, 2010
ஆகாயவிமானம் விபத்துக்குள்ளான செய்தி வயிற்றுக்குள் சிலீரென்று ஒரு அதிர்வு அலையை ஏற்படுத்தி விட்டது.மனம் கனத்துக் கிடந்தது.மேலும் கனமாக்கியது ஹிந்துவில் வந்த அந்த போட்டோ.ஏதும் அறியாப் பருவத்திலே உடல் தந்த உயிர் தந்த உறவுகள் காணாமல் போன அதிர்ச்சி அந்த சின்னக் கண்களுக்குள் என்ன ஆழமாய் தெரிகின்றன.?ஆண்டவன் என்ன நினைத்து அந்தக் குழந்தையின் வாழ்கையில் விளையாடி விட்டான் தெரியவில்லை.
அரை நூற்றாண்டு காலம் அம்மா அப்பாவுடன் வாழ்ந்து நமக்கு என்று கணவன் குழந்தை என்று தனி உலகம் வந்த பின்னும் கூட இதோ எட்டு மதங்களுக்கு முன் அப்பாவைத் தொடர்ந்து அம்மாவும் போன பிறகு ஒரு வெறுமைப் பள்ளம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லையே.!
ஆண்டவா ! அந்த தளிரின் வாழ்வை வளமாக்கு.

Friday, April 23, 2010
கோடை மழை
எங்கோ விழுந்த மழைத் துளி
கிளம்பிய மண்வாசனை
பயணித்து என் நாசித் துளையுள்
தூங்கிய மூளைசெல்கள்
திடுக்கிட்டு விழித்தன.
விழிக்க மறுத்த இமைக்கதவுகள்
கட்டாயமாக திறக்கப்பட்டன
சில்லென்ற மழைக்காற்று
ஜன்னல் வழி தெரிந்து கொண்டுவிட்டது.
சிலிர்த்து விழித்த நொடியில்
பார்வை பயணித்தது வான் நோக்கி
சற்று முன்வரை நீலப்பட்டைக்
கட்டியிருந்த வானப்பெண்ணுக்கு
நிறம் அலுத்துவிட்டது போலும்
கறுத்த சாம்பல்நிற புடவை போர்த்துக் கொண்டிருந்தாள்
ஆங்கங்கே மின்னல் சரிகை வெளிச்சம் காட்டி
கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு இருந்தது
இதோ வருகிறேன்....... வந்து விட்டேன் .........
இடி ஓசையுடன் அறிவித்துக் கொண்டே
பெரும் தூரலாய் மழை !
நனைவோமா .......கொஞ்சம்....
சிறுவயது பிள்ளைகள் போல்
மனம் ஆடியது.
பெரும் துளிகள் சிறு துளிகள் ஆயின
மனம் சலித்தது
வருகிறேன் ........என்று ஆசை காட்டிய மழை
நின்றே விட்டது.
ஆர்பரித்து இடித்து மின்னி முழங்கிய
வானப்பெண் மீண்டும்
நீல ஆடை போர்த்துக்
முறுவல் கொண்டாள்
பூமிப் பெண்ணைப் பார்த்து....
அவளும் இன்னொரு மழை நாளுக்காகக்
காத்து இருக்கிறாள்

Friday, April 16, 2010
Monday, April 12, 2010
Sunday, April 11, 2010
வாசலிலே வேப்பமரம்
பூக்கும்...உதிரும்...
ஆனால்
உதிர்ந்த அம்மா நினைவுப் பூக்களைத்
தெளித்து விட்டு
மீண்டும் மீண்டும்
பூத்துக்கொண்டு இருக்கிறாள்.
வேப்பமரம் மட்டுமா ...
அம்மா வருவாளா .....
என்று காத்துக்கிடக்கிறது....?
நானும் தான்.....
அம்மாவின் வாசம் மட்டும்
அவ்வப்போது மெல்ல மெல்ல
வருடிச் செல்லும் தென்றல் காற்றாய்
நினைவின் வெம்மையைத்
தணித்துக் கொண்டு இருக்கிறது.
நானும் கேட்கிறேன்
அம்மா வருவாயா ?
பூக்கும்...உதிரும்...
ஆனால்
உதிர்ந்த அம்மா நினைவுப் பூக்களைத்
தெளித்து விட்டு
மீண்டும் மீண்டும்
பூத்துக்கொண்டு இருக்கிறாள்.
வேப்பமரம் மட்டுமா ...
அம்மா வருவாளா .....
என்று காத்துக்கிடக்கிறது....?
நானும் தான்.....
அம்மாவின் வாசம் மட்டும்
அவ்வப்போது மெல்ல மெல்ல
வருடிச் செல்லும் தென்றல் காற்றாய்
நினைவின் வெம்மையைத்
தணித்துக் கொண்டு இருக்கிறது.
நானும் கேட்கிறேன்
அம்மா வருவாயா ?
Friday, March 5, 2010
வேலூர் மாரியம்மன் தேர்த் திருவிழா
இன்று குரு கோனியம்மன் தேர் புகைப்படம் facebook ஆல்பம் மூலமாக அனுப்பி இருந்தான். என் நினைவோடை பின்னோக்கிப் பாய ஆரம்பித்து விட்டது. இளமைக் கால தேர்த் திருவிழா........அழியாத கோலங்கள். வேலூர் மாரியம்மன் தேர் திருவிழா கனவுத் திருவிழா. வளர்ந்த கிராமமான வேலூரின் ஸ்பெஷல் விழா .அக்கம் பக்கத்தில் எந்த மாரியம்மன் கோவிலிலும் தேர் கிடையாது.கிழக்குத் தெருவில் உள்ள தேர்முட்டிக்கு செல்வதே ஒரு பெரிய விஷயம். என் தோழி மங்கையின் வீட்டுக்குப் பக்கத்தில் தேர்முட்டி.அவள் வீட்டுக்குப் போகும் சாக்கில் தேரைப் பார்த்தவிட்டு வருவேன்.ஏனோ அலங்காரம் பண்ணாத மரத் தேரின் மீது ஒரு காதல்.
அனேகமாக முழு ஆண்டுத் தேர்வுக்குத் சில நாட்கள் இருக்கும் போது தான் தேர் வரும்.
கோவில் ஆக்ராஹாரத்தின் பக்கத்தில் தான்.அப்பா வீட்டில் அதிகம் சினிமா பாட்டுக்கேட்க விடமாட்டார்.ரேடியோ இருந்தது.ஆனால் ஞாயிற்றுக் கிழமை மதியம் நீங்கள் கேட்டவை தான் ஒரே வழி.(அப்படியும் பாட்டு மியூசிக் ஆரம்பிக்கும் போதே என்ன பாட்டு என்று சரியாகக் கூறிவிடுவேன்).எனவே தேர்த் திருவிழாவின் போது மைக் செட் கட்டி எல்லாப் பாட்டும் கேட்கலாம் என்பதால் எப்போதும் படிப்பதற்கு அதிகம் கஷ்டப்படாத நான் புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஸ்பீக்கர் சத்தம் நன்றாக கேட்கும் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு விடுவேன்.பத்து நாட்களும் திருவிழா தான்.பள்ளிக்கூடத்தில் சினிமா பாட்டுப்புஸ்தகம் கைமாறி வரும் பாடல் வரிகள் மனதில் ஏறிக்கொள்ளும்.(என்னுடைய பெரிய குறை என்னால் மனப்பாடம் செய்ய முடியாது.ஆனால் சினிமாப் பாடல் வரிகள் ஒரு தடவைக் கேட்டால் அப்படியே பதிந்து விடும் .......இன்றும் மாணவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள்.என் இந்த கல்வி இலாக்கா சினிமா மூலமாக பாடம்நடத்தக் கூடாது.)
காப்பு கட்டிய பின் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றப் போவேன்.வாய்க்காலில் தண்ணீர் இருக்காது.காவேரிக்குப் போய் கொண்டு வந்து ஊற்றுவேன்.இதற்கு எல்லாம் ஒன்றும் சொல்லாத் அப்பா தேர் இழுக்கப் போனால் மட்டும் திட்டுவார்.தேர் இழுப்பவர்கள் மீது குடம் குடமாக தண்ணீர் கொட்டுவார்கள்.அப்பாவுக்குத் தெரியாமல் தேர் இழுக்கப் போனால் நனைந்த டிரஸ் காட்டிக் கொடுத்து விடும். பிறகு என்ன ?அர்ச்சனைதான்.மாலையில் தேர்க் கடை உலா.எப்படியும் இரண்டு ரிப்பன் கொஞ்சம் வளையல் ஸ்ரீதருக்கு பந்து என்று ஒரு பத்து ருபாய் செலவு வைத்து விடுவோம்.கோணபுளியங்கை ,கலர் ஐஸ் ராட்டினம்............நான் விளையடுகிறோனோஇல்லையோ கண்டிப்பாக வேடிக்கைப் பார்க்கப் போய் விடுவேன்.என் friends ராட்டினத்தில் விளையாடும் போது பயம் கலந்த ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பேன்.கர்சிப் கீழே வைத்து விட்டு அடுத்த சுற்று வரும் போது எடுக்கும் என் தோழிகள் எனக்கு பெரிய வீராங்கனைகள் தான்.இத்தனை விஷயங்களுக்கும் என்னுடன் துணைக்கு வருவது யார் தெரியுமா.....என் தோழி ராதா.

Subscribe to:
Posts (Atom)