வந்ததே வந்ததே மழை
நீண்ட இடைவெளிக்குப் பின் சென்ற வாரம் வானம் பொத்துக் கொண்டது போல் மழை கொட்டித் தீர்த்தது.இது என்னடா பெரிய விஷயம் என்கிறீர்களா ...?இதில் இரு விஷயம் இருக்கிறது. எங்கள் வீட்டுப் பூனையின் குட்டிக்கு இது முதல் மழை .அதன் கண்களில் என்ன ஆச்சரியம்...திடீரென்று பகலில் வானம் இருட்டிய போது அதன் முகத்தில் திகைப்பு...கொஞ்சமே அரைக்கண் திறந்து ஒரு சின்ன ஆராய்ச்சி,அப்போது வெயிலில் சுகமாய் நீட்டிக் கொண்டு இருந்த வாலுக்கு அருகில் பொத் என்று ஒரு மழைத் துளி.(எல்லோரும் பொட் என்று தான் சொல்லுவார்கள்.நான் ஏன் பொத் என்கிறேன் என்றால் அவ்வளவு பெரிய துளி)
அப்போது வாரிச் சுருட்டிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தது .என்னடா ...இது புதுசா இருக்கே என்று நினைத்தது போலும்...ஜம் என்று சேர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டது.பகல் நேர மழை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது .அதுவும் இல்லாமல் அது ஒரு சோம்பலான ஞாயிற்றுக் கிழமையில் பிற பகலும் கூட....அப்போது பளீர் என்று வெட்டியது ஒருமின்னல் ......தடதட என்று ஆகாயத்தில் இடி கும்மாளமிட்டது....அவ்வளவு தான் எங்கள் குட்டிப் பூனையின் வால சில்லிர்த்துக் கொண்டு விட்டது....அது வரை அம்மாவைத் தேடாத அந்தக் குட்டி அடைக்கலம் தேடி தாயிடம் ஓடியது.அந்தக் குட்டி காணாமல் போய் முதல் நாள் தான் கிடைத்து இருந்தது,தாய்க்கே உரிய ஜாக்கிரதையுடன் குட்டிப் பூனையை மிரட்டிக் கொண்டு இருந்தது ஆனால் அடம் பிடிக்கும் சின்னக் குழந்தை போல் ஓடிய அந்தக் குட்டி வானம் காட்டிய வெடி வெளிச்ச வேடிக்கை மீண்டும் அம்மாவிடம் அழைத்து வந்து விட்டது,,,,இயற்கையின் முதல் சீறல் கண்டு சற்றே பயம் காட்டிய சின்னக் குட்டியின் பயம் நிமிடங்களில் தெளிந்து விட்டது.மேலக் கூரையில் இருந்து கொட்டிய மழையின் தாரை கயிறு போல் பட்டது போலும் அதைப் பிடிக்க குறி பார்க்க ஆரம்பித்து விட்டது..இதை பார்க்கும் போது சிரிப்பாகவும் இருந்து...மனிதர்களின் பயமும் புரிந்தது.அம்மா பூனை தான் குழந்தையை போகாதே என்று மிரட்டவில்லை மாறாக கண்காணித்தது.ஆனால் ........நாம் விடுவோமா.....?
Wednesday, October 6, 2010
Sunday, August 22, 2010
ஒரு வருடம் கழிந்தது.....
சென்ற வருடம் ...கிட்டத்தட்ட இதே நாளில் நான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டேன்.தயங்கித் ..தயங்கி அம்மாவிடம் செய்தி சொன்னபோது பதறி ...நான் வருகிறேன்..என்று கிளம்பி வரத் துடித்தார்கள்."நீங்கள் வந்தால் உங்களுக்கும் கஷ்டம் ரமா இருக்கிறாள்"என்று ஆறுதல் சொல்லி விட்டேன்.பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை "எப்படி இருக்கிறாய் ? "என்று கைபேசியில் விசாரிப்பு.(நானும் அம்மாவும் பத்து பைசா scheme போட்டு இருந்தோம்)சரியாக ஒரு வாரம் கழித்து அம்மா காய்ச்சல் இருக்கிறது .என்று சொன்னார்கள்...மாயாவியைப் போல அந்த காய்ச்சல் என் அம்மாவை என்னிடம் இருந்து பறித்துச் சென்று விட்டது.இதோ....இன்னும் இரண்டு நாட்களில் அம்மாவின் வருஷாப்தீகம் ........கால தேவன் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கிறான்...நம்ப முடியாத உண்மை நடந்து முடிந்து ஒரு வருடமும் ஆகி விட்டது என்பதைத் தான் ஜீரணிக்கவே முடியவில்லை
இன்றும் காலை 10 30 மணி ஆனால் தொலைபேசி சினுங்காதா ? என்று ஒரு எதிர்பார்ப்பு.உண்மை சுடும் போது மனதில் ஒரு விதிர்ப்பு...ஓஓஒ ....அம்மா இனி பேச மாட்டார்கள்.அப்பாவின் வருஷாப்தீகம் நடந்த போது இந்த வலியும் வேதனையும் நான் அனுபவிக்க வில்லை.அம்மா இருந்தார்கள் ..அது என்னவோ எனக்கு யானை பலம் போல..ஆனால் இந்த முறை ஏதோ ஒரு வெறுமை இழப்பின் தாக்கம் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் குபுக் என்று கண்ணீர் துளி எட்டிப் பார்த்து விடுகிறது.
நேற்று இரவில் பார்த்த "ஆனந்த புரத்து வீடு "இன்னும் கொஞ்சம் அழுத்தமாக அம்மா அப்பாவை எதிர்பார்க்க வைக்கிறது.

Thursday, August 5, 2010
ஆடி பெருக்கு
விகடனில் கி வ ஜ எழுதிய ஆடி பதினெட்டு பற்றிய கட்டுரை காலபெட்டகத்தில் படித்தேன்.என் நினைவுகளும் பின்னோக்கி ஓட ஆரம்பித்து விட்டன.
இளமையில் ஆடி மாதம் அழகான மாதமாக வரவேற்கப் பட்ட மாதம்.வரிசையான பண்டிகைகள் கண்டிப்பாக ஆடி அமாவாசைக்குப்புதுத் துணி கிடைக்கும்.கூடவே வளையல் ரிப்பன்....பெரிய எதிர்பார்ப்புடன் கொண்டாட்டம்.
ஆடி முதல் தேதி தலை ஆடி ......பள்ளிக்கூடம் லீவ் ..தேங்காய் சுடும் பண்டிகை வாதநாராயண மரத்தின் குச்சியின் நுனியை சீவி தேங்காய் பொட்டுக்கடலை பொடி வெல்லம் பொடித்துப் போட்டு வெந்நீர் அடுப்பில் சுட்டுத் தின்னும் தேங்காய் கண்டிப்பாக தேவாம்ருதம் தான்.எப்படியாவது அப்பாவிடம் permission வாங்கி விடுவேன்.
அப்புறம் குச்சி ஆட்டம்......தெருதெருவாக குச்சியைத் தட்டி கொண்டு ஓடுவோம்.
அப்புறம் ஆடி 18 காவிரியின் கரை புரளும் வெள்ளம்.வேடிக்கை பார்க்கப் போவது கூட ஒரு இனிமையான அனுபவம் செம்மண் கலரில் நுங்கும் நுரையுமாக வரும் காவிரித் தண்ணீரைப் பற்றி இனி நினைவுகளில் தான் தேட வேண்டும்.
காலையில் இருந்தே வாசலில் மேள சத்தம் கேட்க ஆரம்பித்து விடும் மாரியம்மன் கோயில் வாசலில் இருந்து ஒரு ஊர்வலம் போகும்.(மகாபாரதம் படித்து விட்டு போவர்கள் என்று நினைவு.)தலையில் முளைப்பாரியை எடுத்துக் கொண்டு கொட்டு கொட்டிக்கொண்டு புதுத் துணி சரசரக்க ஊர்வலம் போகும்.புதுப் பெண் மாப்பிளை .....இந்த வேடிக்கை பார்க்கவே முழு நாளும் கழிந்து விடும்
மாலையில் அப்பாவுடன் விளக்கு விடுவதை வேடிக்கைப் பார்க்கப் போவோம்.ஆடி 18 விழாக் கடைகளில் கண்டிப்பாக பேரிக்காய் வாங்குவோம்.
நிறைய.....நிறைய.......நினைவுக்கூட்டம்.....ஓடி வருகின்றன.என் கைகளுக்குத் தான் வேகம் பத்தாது.ஆற்றின் ஈரத்துடன் சிலு சிலுவென்று சாரலும் நனைக்கும்.அந்த பெரிய ஆலமரத்தின் இலைகள் அசையும் போதுமறைந்து கண்ணாமூச்சி காட்டும்சூரியன் வர்ண ஜாலங்களை காவிரியின் நீர்பரப்பின் ஜரிகையாய் நெளிய விடுவான்.இந்த அழகு இனி மேல் நினைவுப் பெட்டகத்தில் மட்டும் தான்,

Tuesday, August 3, 2010
என்னை பாதித்த படம்
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு சோம்பலான ஞாயிற்றுக் கிழமை.இன்று கண்டிப்பாக நான்கு மணிக்கு சன் T V படம் பார்த்தே ஆக வேண்டும் என்று அடமாக உட்கார்ந்து விட்டேன் .என்ன ஸ்பெஷல் தெரியுமா ?மாயாண்டி குடும்பத்தார் படம் போட்டு இருந்தார்கள் .அந்த படத்தின் விஷேசம் என்ன தெரியுமா ? அம்மா கடைசியாய் பார்த்து விட்டு ரொம்பவும் பாராட்டி நீ கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்று மூச்சு இரைப்புக்கு நடுவில் சொன்ன படம்.நானும் பார்க்க வேண்டும் என்று ரொம்பவும் முயற்சி செய்தேன்.திருட்டு cd கொடுக்கும் பூக்கரனிடம் கூட சொல்லி வைத்து இருந்தேன்.அம்மா ஏன் ரொம்பவும் பிடித்தது என்று சொன்னார்கள் என்று படத்தைப் பார்க்கும் போது தான் புரிந்தது.ரொம்பவும் சாதரனம குடும்பக் கதை.ஆனால்....அதில் அந்த கடைசி மகனின் ....கஷ்டங்களில் அம்மா அப்பாவைப் பார்த்திருக்க வேண்டும் அதனால் தான்.
எனக்கு உடல்நிலை சரியில்லாத போது உதவிக்கு வந்திருந்த போதெல்லாம் அப்பா தான் பட்ட கஷ்டங்களை கதை போல் சொல்வார்விடியற்காலை குக்கர் சத்தத்தின் நடுவே அப்பாவின் வரலாறு .....அப்போது அவை ஏதோ அப்பா எனக்கு வாழ்க்கைப் பாடம்சொல்லிக் கொடுக்கிறார் என்று தான் நினைத்தேன்.அப்புறம் அப்பாவின் இழப்பிற்குப் பிறகு அம்மா என்னுடன் இருந்த போது அம்மாவின் நினைவு ஊர்வலக்கோவைகளும் அப்பாவின் கஷ்டங்களை வரிசை படுத்தி இருந்தன.அவை எனது ஆழ மனக் கிணற்றில் இவ்வளவு நாட்கள் தொங்கிக் கொண்டு இருந்திருக்கின்றன.
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு படம் பார்த்து அழுதேன்.மனம் ரொம்ப பாரமாக இருந்தது.அப்பா எல்லா கதையையும் சொல்லிவிட்டு போனால் போகிறார்கள் போ என்று சாவகாசமாக சொல்லுவர்.ஏன் இவ்வளவு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கோபமாக வரும்
இந்த படத்தில் ஒரு உரையாடல் வரும்
"இந்த பிறவியில் பிறந்து விட்டோம்.இந்த அப்பா இந்த அம்மா இந்த அக்கா இந்த அண்ணன் தங்கை இந்த உறவுகள் இனி அடுத்த பிறவியில் வருமா என்பது சந்தேகம்.எனவே இப்போது நம்முடன் வாழ்பவர்க்கு அன்பு சொல்லி வாழ்ந்து வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாம்."
அற்புதமான கருத்துநான் கல்லூரியில் படிக்கும் போது என்தமிழாசிரியர் ஒரு சினிமா பைத்தியம் அவரிடம் படம் எப்படி இருந்தது என்று கேட்டால் நல்ல இருந்தது.எந்த படத்திலும் நமக்குத் தேவையான எதாவது ஒரு செய்தி கிடைக்கும் என்பார்.அது நிஜம் தான்

Friday, July 30, 2010
மழை மழை
நடுவில் நின்று போய் இருந்த மழை சாரல் ஊர்வலம் நேற்று மீண்டும் எட்டிப் பார்த்தது.கலையில் இருந்து வீரிட்டுக்கொண்டு இருந்த தென்னங்காற்று மதியம் ஒய்வு எடுத்துக் கொண்டது.சரி ஜன்னலைத் திறக்கலாம் என்று திறந்தால் வெள்ளி சரிகைத் தூரலாய் மழை சிலிர்த்துக் கொண்டு தூறிக்கொண்டு இருந்தது.அகல விரிய ஜன்னல்களைத் திறந்து வைத்து விட்டேன்.ஒரு சிலிர்ப்பான குளிர் தோலை ஊடுருவிக்கொண்டு மயிர்க் கால்களைக் குத்திட்டு நிற்க வைத்தது.வெளியே போகும் போது பெயருக்குக் குடை எடுத்துக் கொண்டு சாரல் மழையில் நனைந்தேன்.பஸ் ஸ்டாப்பில் நனைந்த மரங்களும் காற்றில் நடுங்கி என்னை நனைத்தன.அப்பா....எவ்வளவு நாட்களுக்குப் பிறகு இந்த மழை குளியல்,இரவில் வரும் அடுக்குத் தும்மலை மறந்து விட்டு நனைந்தேன்.........அருமை......அருமை......

Sunday, July 25, 2010
மிதிலா விலாஸ்
கண் வலியே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம் .உன்னால் தான் எனக்கு ஒய்வு கிடைத்தது.புத்தகக் கடைக்குப் போகவும் நேரம் கிடைத்தது.என் நீண்ட நாள் கனவுப் புத்தகம் லக்ஷ்மியின் மிதிலா விலாஸ் வாங்கினேன்.ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.இப்போது சீரியல் எடுக்கிறேன் பேர்வழி என்று பழிவாங்குதல் கொலை கொள்ளை ...என்று மனதை வருத்தும் காட்சிகள் வீட்டின் வரவேற்பறைக்கே வந்து மனதை கேடுக்கின்றனவே.அந்த இயக்குனர்கள் ஏன்இந்த புத்தகங்களைப் படித்து நாடகமாக எடுக்கக் கூடாது?
கொஞ்சமாவது இந்தக் காலக் குழந்தைகள் வாழ்க்கைப் பாடத்தைப் படிப்பார்களே.....
எந்தவித ஆடம்பரமான வார்த்தை ஜாலங்கள் இல்லாமல் அற்புதமான ஆற்றோட்டமானஎழுத்து.
படிக்கும் ஆர்வம் குறைந்த இந்த காலத்தில் வார இதழ்களும் இந்தக் கதைகளை தொடராக வெளியிடலாம்.

Tuesday, July 20, 2010
திருவரங்கன் உலா
எங்கேயோ மெட்ராஸில் இருந்து வந்த மெட்ராஸ் ஐ எனக்கு கட்டாய ஒய்வு என் ஹிந்தி வகுப்புகளில் இருந்து கொடுத்து விட்டது.கண்ணில் மணல் அள்ளிப் போட்டது போல ஒரு உறுத்தல்.முதல் நாள் வலி கண்ணைத் திறக்க விடவில்லை.டாக்டர் கொடுத்த மருந்து வலியை ஒட்டி விட்டது.என்னடா பண்ணலாம் என்று மனம் துறுதுறு என்று அலைந்த போது என் மகள் என் அக்கா வீட்டில் இருந்து அந்த பொக்கிஷத்தைக் கொண்டு வந்தாள்.
திருவரங்கன் உலா கண்களை இடுக்கிக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.என்ன ஆச்சரியம் வலி உறுத்தல் எல்லாம் மறந்து மரத்துப் போனது.
அப்பா ....அந்த ரங்கன் என்ன பாடு பட்டிருக்கிறான் ?
1974 தினமணிக் கதிரில் தொடராய் வந்தபோது மனதில் பதிந்த குலசேகரன் ,வாசந்திகா
அந்த அழகிய மணவாளன் மீண்டும் அவர்களுடன் வாழத் தொடங்கினேன்.
இப்போது பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் ஸ்ரீரங்கத்து கோட்டை மதில்களை காப்பாற்ற என்ன பாடுபாட்டு இருக்கிறார்கள்,
அப்பா சுல்தான்கள் ஆட்சிகாலத்தைப் பற்றிப் பேசும் போது ஆவேசப் படுவார்,அந்த ஆவேசம் இப்போது எனக்கும் வந்தது.சோம்நாத்பூர் இடிபாடுகளைப் பார்த்து விட்டு வந்து அப்பா சொல்லும் போது அப்படி என்ன பெரிய கஷ்டப் பட்டுவிட்டார்கள் என்று ஒரு சின்ன கேள்வி என் மனதில் எழுந்துள்ளது.?அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை
எனக்கு எப்போதுமே ஸ்ரீரங்கம் மிகவும் பிடித்தமான கோவில் .இப்போது இன்னும்....இன்னும்...பிடித்துப் போய் விட்டது இந்த முறை ஸ்ரீரங்கம் போகும் போது நின்று நிதானமாய் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன் ஆரியபட்டாள் வாசல் குலசேகரன் திரு மதில்....எல்லாமும் பார்க்கவேண்டும்...வீழ்ந்து வணங்கவேண்டும்

Subscribe to:
Posts (Atom)