Monday, October 11, 2010

நவராத்திரி  ..கொலு  
ஒவ்வொரு வருஷமும் வரும் கொலு இந்த வருடமும் வந்தது...முதலில் வைக்கலாமா வேண்டாமா ...என்று தயங்கி பிறகு வைத்து விட்டேன்...புதிய பொம்மை ஒன்றும் இல்லை.ஆனால் கொலு வைக்கும் போது ஏன் நினைவுகூடங்களில் வியாபித்து நின்றது கோமள விலாசில் வைத்த கொலு...
கோமள விலாசுக்குக் குடி போனபோது ஒரு சந்தோஷம் ..பெரிய ஹால்.எங்கள் வீட்டில் நிறைய்ய்ய்ய .....பொம்மைகள்..சின்ன சின்ன வீடுகளில் இருந்தபோது கூட அம்மாவும் அப்பாவும் பதினோரு படிகளுக்கு குறைவாக வைத்தது இல்லை.கோமள விலாசில் இன்னொரு advantage  அவர்கள் வீட்டு ரெடிமேடு கொலுப்படி எங்களுக்கு கிடைத்தது.பட்டு மாமி காலி  செய்து போனபிறகு சும்மாவே கிடந்த கொலுப்படி எங்களுக்கு உபயோகித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.கிரேட்.....அப்பா வழக்கம் போல மாணவச் செல்வங்களின் துணை கொண்டு nut  ..bolt  cutting player  துணை கொண்டு அந்த இருபது ஒரு படி கொண்ட stand செட் செய்து விட்டார்.அம்மாடியோவ்....கூரையில் இருந்து முட்டிக்கொண்டு நின்றது ....கொலுப் பெட்டிகள் திறக்கப் பட்டன.பழைய ...கிழிந்த ...துணிகளுக்குள் அடைந்து கிடந்த பொம்மைகள் புதுக் காற்றை சுவாசித்தன.அப்பா ஏணி துணை கொண்டு பொம்மைகளை அடுக்கினார்...உடன் வானரப் படைகள்....சுப்பிரமணி, வேலுச்சாமி, அப்புறம் நரசிம்மன்...எல்லோரும் அவர் அவர் கற்பனைக்கு  ஏற்ப பொம்மைகளை அடுக்கி முடித்தோம் .மணி இரவு பன்னிரண்டு இருக்கும் ....பொம்மைகளை அடுக்கி தனியே நின்று அவ்வளவு பெரிய கொலுவை மலைப்பும் திகைப்பும் சந்தோஷமுமாக பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அந்த பழைய கொளுச்டந்து பாரம் தங்காமல் இடையில் எங்கோ முறிய.....அந்த பிரம்மாண்ட கொலு எங்கள் கண் முன்னால் தட தட என்று சரிந்தது....என்ன செய்வது என்றே தெரியாமல் நின்று பார்த்துக் கொண்டு இருந்தோம்....ஆனால் ஆச்சரியம் ....என்ன தெரியுமா...அவ்வளவு உயரத்தில் இருந்து சரிந்தும் சேதமடைந்த பொம்மைகளின் எண்ணிக்கை குறைவு தான் .அம்மாவுடைய பலப் பல கிருஷ்ணன் பெரியது உடைந்து விட்டது...சிறிய பொம்மை இருக்கிறது...
இப்போது நான் வைக்கும் போதும் அந்தக் காட்சி கண்ணில் படமாய் ஓடுகிறது.
அம்மா சளைக்கவில்லை அந்த ஸ்டாண்டை எடுத்து வைத்து விட்டு பழையபடி drum .டின்,புஸ்தகங்கள் சாமான்அடுக்கும் பலகை கொண்டு பழைய படி பதினோரு படி கொலு உருவாகி விட்டது...அப்போது அம்மா மீது கோபம் வந்தது,,,இப்போது அம்மாவின் வில் பவர் புரிகிறது அம்மா u are  great !

Wednesday, October 6, 2010

வந்ததே   வந்ததே  மழை
நீண்ட     இடைவெளிக்குப் பின் சென்ற வாரம் வானம் பொத்துக் கொண்டது போல் மழை கொட்டித் தீர்த்தது.இது என்னடா பெரிய விஷயம் என்கிறீர்களா ...?இதில் இரு விஷயம் இருக்கிறது. எங்கள் வீட்டுப் பூனையின் குட்டிக்கு இது முதல் மழை .அதன் கண்களில் என்ன ஆச்சரியம்...திடீரென்று பகலில் வானம் இருட்டிய போது அதன் முகத்தில் திகைப்பு...கொஞ்சமே அரைக்கண் திறந்து ஒரு சின்ன ஆராய்ச்சி,அப்போது வெயிலில் சுகமாய் நீட்டிக் கொண்டு இருந்த வாலுக்கு அருகில் பொத் என்று ஒரு மழைத் துளி.(எல்லோரும் பொட் என்று தான் சொல்லுவார்கள்.நான் ஏன் பொத் என்கிறேன் என்றால் அவ்வளவு  பெரிய துளி)
அப்போது வாரிச் சுருட்டிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தது .என்னடா ...இது புதுசா இருக்கே என்று நினைத்தது போலும்...ஜம் என்று சேர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டது.பகல் நேர மழை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது .அதுவும் இல்லாமல் அது ஒரு சோம்பலான ஞாயிற்றுக் கிழமையில் பிற பகலும் கூட....அப்போது பளீர்     என்று வெட்டியது ஒருமின்னல் ......தடதட என்று ஆகாயத்தில் இடி கும்மாளமிட்டது....அவ்வளவு தான் எங்கள் குட்டிப் பூனையின் வால சில்லிர்த்துக் கொண்டு விட்டது....அது வரை அம்மாவைத் தேடாத அந்தக் குட்டி அடைக்கலம் தேடி தாயிடம் ஓடியது.அந்தக் குட்டி காணாமல் போய் முதல் நாள் தான் கிடைத்து இருந்தது,தாய்க்கே உரிய ஜாக்கிரதையுடன் குட்டிப் பூனையை மிரட்டிக் கொண்டு இருந்தது ஆனால் அடம் பிடிக்கும் சின்னக் குழந்தை போல் ஓடிய அந்தக் குட்டி வானம் காட்டிய வெடி வெளிச்ச  வேடிக்கை மீண்டும் அம்மாவிடம் அழைத்து வந்து விட்டது,,,,இயற்கையின் முதல் சீறல் கண்டு சற்றே பயம் காட்டிய சின்னக் குட்டியின் பயம் நிமிடங்களில் தெளிந்து விட்டது.மேலக்  கூரையில்  இருந்து கொட்டிய மழையின் தாரை கயிறு போல் பட்டது போலும் அதைப் பிடிக்க குறி பார்க்க ஆரம்பித்து விட்டது..இதை பார்க்கும் போது சிரிப்பாகவும் இருந்து...மனிதர்களின் பயமும் புரிந்தது.அம்மா பூனை தான் குழந்தையை போகாதே என்று மிரட்டவில்லை மாறாக கண்காணித்தது.ஆனால் ........நாம் விடுவோமா.....?