Thursday, April 3, 2014

VG ரஹீமின் வைர வரிகள் என்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு நான் தேர்வுக்கு தேவையானவற்றை மட்டும் சொல்லிக் கொடுப்பேன்.இந்த முறை தேர்வு எழுதும் மாணவி எல்லா பாடல்களையும் சொல்லிக் கொடுங்கள் என்றாள்.நானும் படித்து சொல்லிக் கொடுக்கிறேன்.என்று படித்தேன். அற்புதமான செய்திகள் உதாரணத்திற்கு இரண்டு தோஹேகள் . टूटे सुजन मनाइये,जो टूटे सौ बार। रहिमन फिरी फिरी पोहिए,टूटे मुक्ता हार।। பொருள் நம்முடைய நடவடிக்கைகளால் கோபபட்டு விலகி நிற்கும் நல்ல நண்பர்களை நூறு முறை ஆனாலும் சரி,வேண்டி மன்னிப்பு கேட்டு அந்த நட்பை உயிர்ப்புடன் வைத்திருங்கள்.ஏனெனில் நல்ல நட்பு விலை மதிக்க முடியாத முத்து மாலையைப் போன்றது.அது எவ்வளவு முறை அறுந்தாலும் முடிச்சு ப்போட்டு பத்திரப படுத்துவோமல்லவா?அது போலத் தான் நல்லவரின் நட்பும். இரணடாவது தோஹா बिगरी बात बने नहीं,लाख करै किन काय। रहिमन फाटे ढूध को,मथैन माखन होय।। பொருள் எப்படி திரிந்த பாலை லட்சம் முறை கடைந்தாலும் வெண்ணை கிடைக்காதோ,அதே போல் கடுஞ்சொற்களால் உடைந்த மனதை ஒட்ட வைக்க முடியாது. -- Sent from Fast notepad

Tuesday, April 1, 2014

மனிதர்களின் நிறங்கள்

அனுபவம் பேசுகிறது இன்று மாலை வாக்கிங் போகும் போது நீண்ட நாள் பழகிய ஓருவரை அவரது வீட்டு வாசலில் பார்த்தேன்.அவர் சமீபத்தில் இலங்கையில் ராமாயணம சம்பந்த பட்ட இடங்களுக்கு ஆன்மீகப் பயணம் சென்று திரும்பியிருந்தார்.அவரது கணவர் சில நாட்களுக்கு முன் பார்த்த போது சொன்னார்.சரி நேரில் பார்த்த பிறகு விசாரிக்க வில்லை என்று நினைத்துக் கொள்வார்களே என்று எண்ணி பயணம் பற்றி விசாரித்தேன்.விபரமாக எல்லாம் கூறியவர் நீங்களும் போய் பார்த்து விட்டு வாருங்கள் என்றும் கூறினார்.பிறகு போய் வருகிறேன் என்று கூறி ஒரு அடி எடுத்து வைத்தேன்.என்ன நினைத்தாரோ அந்த மாமி என் காலடியின் கீழ் இருநத மண்ணை ஒரு பிடி வாரி க்கொண்டு உள்ளே போனார்.அதைப் பார்த்ததும் என் மனம் பதைத்துப் போயிற்று.கோவிலுக்குப் போயும் மனம் இறைவனை நாட வில்லை. இறைவா இந்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்.மனம் கனத்துப் போய் விட்டது. -- Sent from Fast notepad

Sunday, November 25, 2012

ஸ்ரீதரின் நினைவு  ஊர்வலம் என் மனதின் நிலவறையை திறந்துவிட்டது.தீபாவளிக்கு வாங்கிய புடவைகளில் ஒன்று துளசி பண்டிகைக்காக  ஒதுக்கி வைக்கப்படும்.கோமளவிலாஸ்  மல்லிகைப் பந்தல் அருகே கலர் கோலம் போட்டு மழை வரக்கூடாது என்று வருண பகவானை வேண்டிக்கொண்டு கொண்டாடிய துளசிப்பண்டிகை இனி நினைவுகளில் மட்டும் தான் 

Wednesday, December 7, 2011

அம்மா வீடு
பொழுது போகாமல் பழைய அவள் விகடன்களைப் புரட்டிக்கொண்டு இருந்த போது ஒரு புத்தகத்தில் வாசகர் சிறுகதை என்ற தலைப்பில் அம்மா வீடு என்ற ஒரு கதையைப் பார்த்தேன். அட..எப்படி நம்ம கண்ணில் விழாமல் போனது ? என்று எண்ணிய படியே படிக்கத் தொடங்கினேன்..படிக்கப் படிக்க மலைப்பானது.என்னடா இது எல்லா பெண்களுக்குமே இந்த நிலை வரும் போல?என்று நினைத்துக்கொண்டே படித்தேன்.(கதைச் சுருக்கம் இது தான் ...திருமணத்துக்கு முன் அவள் வைத்தது தன சட்டம் என்று எல்லோரும் அவளைசுற்றியே வாழ்கை வட்டத்தை அமைத்துக் கொண்டு இருந்தார்கள்.திருமணத்துக்குப் பின் ..அவளது அம்மா வீட்டுத் தொடர்பு ஒவ்வொன்றாக துண்டிக்கப் பட்டது.அவளது உரிமைகள் அவளைக் கேட்காமலேயே அவளை கையில் இருந்து எடுக்கப் பட்டன.அப்பா அம்மா வின் செல்ல மகள் அவர்கள் மறைவுக்குப் பின் தன துவைத்த துணிகளை வைக்கக் கூட இடம் இல்லாமல் மீண்டும் தான் கொண்டு வந்த பெட்டியில் அவற்றை அடுக்கும் பொது சுட்ட உண்மை வெந்நீர் கோடுகளை கன்னத்தில் வரைந்தன.யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள் தன பையின் ஜிப்பை இழுத்து மூடினாள் கூடவே மனதிற்குள் இருந்த உரிமைக் கனவுகளையும் அழுத்தித் துடைத்தாள்)

   இந்தக் கதையைப் படித்தபின் நிதரிசனமான உண்மைகள் எப்படிச் சுடுகின்றன என்பதை உணர்ந்தேன்?பெண்களுக்கு தாய் வீட்டு உரிமை என்பது இவளவு தானா? நான் தீர்மானம் செய்து விட்டேன். என் மகள் திருமணம் ஆகி கணவன் வீடு சென்றாலும் அவளுடைய அறை எப்போதும் அவளுடையதாகவே இருக்க வேண்டும்....இருக்கும்....

Saturday, October 29, 2011

பருவ மழை
குமுறித் திரண்ட மேகம்
பயந்து மறைந்த சூரியன் 
வெளிச்சம் காட்டிய மின்னல்
இடித்து முழங்கிய இடி 
வெளுத்து வாங்கிய மழை 
மேற்கில் மஞ்சள் வெயில் 
காற்றில் கலைந்த மேகம் 
எட்டிப் பார்த்த சின்ன நிலவு 
நேர்ப் புள்ளியில் ஒற்றை நட்சத்திரம்
மேகத்துக்குள் மறையும் நிலவு
நிலவு துரத்திய மேகச்சிதறல்கள்
இன்பம் துன்பம் மாறி வரும் வாழ்க்கைப் பயணம் 
நினைவுக்கு வந்தது பந்த்ஜி எழுதிய கவிதை

कभी घन में ओझल हो शशि 
फिर शशि में ओझल हो घन
सुख दुख के मधुर मिलन से 
होता जीवन परिपूरण

सुमित्रा नंदन  पंतजी की "सुख दुख " से  

 


Friday, August 5, 2011

பரம்பிக்குளம்
நேற்று மாமாவுடன் பேசினேன்.கருட பஞ்சமி.அம்மாவை நினைத்து மாமா மிகவும் வருத்தத்தில் இருந்தார்.பேச்சு வாக்கில் என் மகன் பரம்பிக்குளம் சென்று எடுத்த போட்டோக்களை facebookil பார்த்து நினைவு ஊஞ்சலை பின்னோக்கி பாய விட்டார்.என்ன ஆச்சரியம்...போட்டோவைப் பார்த்து நான் வியந்த விஷயங்களையே மாமாவும் வியப்புடன் நினைவு கூர்ந்தார்.பரம்பிக்குளம்...என் இளமைக் கால விடுமுறைக் கொண்டாட்டங்களுடன் கழித்த இடம்.ஊட்டியோ....கொடைக்கானலோ ....பார்க்கவேண்டும் என்ற சின்ன ஆசையைக் கூட என் மனதில் தோன்றச் செய்யாத இடம் ..எங்களின் கோடை வாசஸ்தலம்....யானைகளும் கரடிகளும் மான்களும் ...இயற்கையுடன் மக்கள் வாழ்ந்த அந்த அணைக்கட்டுப் பகுதி...பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து எப்போதோ ஒரு முறை வரும் பஸ்சில் பயணப்பட்டு, கொண்டை ஊசி வளைவுகளை பயத்துடன் ஒற்றைக்கண்ணால் ......பார்த்து அப்பாடா.....எப்போது வரும் என்று பஸ் திரும்பி நின்றவுடன் இறங்கி மேடு பள்ளங்களை ....ஏறி இறங்கி ...தாத்தா, மாமா அத்தை, என்று சந்தோசப்பட்ட அந்த காலங்கள் இனி வருமா? நினைவு வரிகள் ஓட .....கனவுக்கட்சிகளை  ரிவைண்ட் செய்து பார்த்து மகிழத் தான் வேண்டும்.....

Wednesday, March 30, 2011

சொந்தமில்லை பந்தமில்லை 

பழைய பாடல் தொகுப்பில் இருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்ட அன்னக்கிளி படப் பாடல்.
சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை ...
அன்பு கொள்ள ஆதரவாய் யாருமில்லை உலகில் 
அக்கக்கோ   ..எனும் பாடல் ..அது தானே ....


மனம் கனக்கிறது
ஒற்றை பறவையின் குரல் கேட்கும் போதெல்லாம் இநத பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.