Thursday, December 23, 2010

அப்பாவின் பிறந்தநாள்
அன்புள்ள அப்பா

நேற்று உங்கள்  பிறந்த நாள்.85 வயது ஆரம்பம்.திருவாதிரைத் திருநாள் என்றால் ஆருத்ரா தரிசனமும் சுவாமி புறப்பாடும் நினைவுக்கு வருவதே இல்லை.மார்கழித் திருவாதிரை என் அப்பாவின் பிறந்த நாள்.அது மட்டும் தான் எனக்கு விசேஷம்...என்னை தனியே தவிக்க விட்டு (அப்பா எனக்கு ஒரு நல்ல friend எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஒரு தோழன் இல்லாமல் )போய் ஆண்டுகள் ஆறு கடந்தாலும்...நேற்று கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்து விட்டு வந்தேன்...அப்பா நீங்கள் எங்கு இருந்தாலும் என்னை ஆசீர்வதிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு ...
(அப்பாவுக்கு கடிதம் எழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டன ....)
உங்கள் அன்பு மகள்
கீதா

Monday, December 20, 2010

ஸ்ருங்கேரி ...ஸ்ருங்க கிரி ......சிதைந்து.....மருவி ..ஸ்ருங்கேரி..ஆகி விட்டது.ஊருக்குள் நுழையும் போது மழை இருட்டில் சிறிது நேரம் வழி தடுமாறினோம்.டிரைவர் சுரேஷ் கொஞ்சம் எரிச்சல் பட்டார். ஒரு வழியாக ஸ்ருங்கேரி அடைந்தோம்...துங்க பத்ரா நதிக் கரையில் விடுதி கிடைத்தது...அமைதியாக நடைபழகிக் கொண்டு இருந்தாள் துங்கா நதி.விடுதியின் ஜன்னல் வழியே தரிசனம்..அவசரமாக அங்கே இருந்து தரிசனத்துக்குப் புறப்பட்டோம்.கொஞ்சம் தாமதம் ஆனதால் மாமா கோபித்துக் கொண்டார்.எனக்கும் கோபம் வந்தது..".நீங்கள் முகம் கழுவி கிளமபிவிட்டால் போதுமா? நாங்கள் பெண்கள் அப்படி புறப்பட முடியுமா? "கேட்டே விட்டேன்.மாமா பதில் பேசாமல் வெளியே போய் விட்டார்.வானம் உடைத்துக் கொண்டாற்போல் கொட்டத் தொடங்கியது..சற்று நனைந்து கொண்டே தேவஸ்தானத்தை அடைந்தோம்...(இங்கே கர்நாடகக் கோவில்களில் ஒரு ஆச்சரியம் பார்த்தேன்..இங்கே தமிழ் நாட்டில் இருந்து காணமல் போன சிட்டுக் குருவிகள் எல்லாம் அங்கே புலம் பெயர்ந்து விட்டன போலும்.எங்கு பார்த்தாலும் குருவிகள்.மனிதர்களின் ஆரவாரம் கும்பல் எதற்கும் பயப்படாமல் கூடு கடடி குலவி மகிழ்ந்து கொண்டு இருக்கின்றன.இயற்கை ஆர்வலர்கள் பயப் படத்தேவையில்லை...)இரவின் கோபம் அதிகம் ஆக ஆக மழையின் வேகமும் அதிகம் ஆகியது...கோவிலுக்குள் நுழைந்து விட்டோம்...அன்னை சாரதாவின் அற்புத  தரிசனம்....இப்போது மாமாவின் கோபம் என்னை பழி வாங்கி விட்டது...எங்களை மட்டும் விட்டு விட்டு நதிக் கரையில் போய் தவளையின் பிரசவத்திற்கு குடை பிடித்த பாம்பு ...இன்னும் என்னென்னவோ ....பார்த்து விட்டு வந்து விட்டார்.மீண்டும் இலவச உணவுக்கு ஒரு முயற்சி ஆனால் அன்னை சாரதா தேவிக்கு மனம் இல்லை போலும்...கிடைக்கவில்லை.குளத்துப்பாளையம் குரூப் எங்களுடன் சேர்ந்து கொண்டது...அதே வெல்லம் போட்ட தோசை...ஏதோ வயிறு நிரம்பியது...சுவாமிஜியின் பூஜை...துங்கா நதியின் அக்கரையில்.....ஏதோ...மனம் ஈடுபடாமல்...உட்கார்ந்து விட்டு வந்தேன்..( இங்கே ஒரு விஷயம் சொல்லவேண்டும்..தலை முடியை வெட்டி விட்டுக் கொண்டு லிப்ஸ்டிக் பூசி நகசாயம் தடவி ஏதோ அந்நிய உலகத்துக்குள் இருக்கும் வெளிநாட்டு பக்தர்கள் மடிசாரும் பஞ்சகச்சமும் கட்டிக் கொண்டு வாய் பொத்திவேஷம் கட்டும் ஆஷாட பூதிதனம் நிறையவே இருந்தது..)மழையின் சாரலில் நனைந்து கொண்டே அறைக்குத் திரும்பினால் கரண்ட் போய் விட்டது...ஏதோ அலைச்சலில் உறக்கமும் விழிப்புமாக கடந்தது இரவு...விடிந்தவுடன் குளிக்காமல் எங்கள் பயணம் தொடர்ந்தது கொல்லூர்  நோக்கி....