Sunday, November 29, 2009

ammavin veeram

அம்மாவின் வீரம்
அது ஒரு வழக்கமான கோடை காலம். பகல் முழுவதும் சுட்டேரிதே வெயிலின் தாக்கம் லேசாக குறைந்த முன்னிரவு.பஹளில் அடித்த அனலின் வெக்கை குறைய இயற்கையே கொஞ்சம் முயற்சி எடுத்ததினால் மேலை சூரியன் மறையும் முன்னே சுழன்று வீசிய காற்று வழக்கம் போல மின்சாரத்தை எடுத்துக்கொண்டு போய் இருந்தது. அதை பற்றிய கவலை இல்லாமல் ஆக்ராஹாரத்தின் எல்லா வீடுகச்ளின் முன்பும் கயிற்றுக்கட்டில்கள்வந்து விட்டன. வைகளில் தண்ணீர் குறைந்து விட்டதால் லேசான மீன்வாசம் வீச ஆரம்பித்து இருந்தது.கூரைவீடின் திண்ணைக்கு  அருகில் மெல்ல மெல்ல ஊர்ந்து வந்த ஒரு பெரிய நட்டுவாக்கிளி எங்கள் கண்களில் பட்டு விட்டது .விடுவோமா ? அன்று பாவம் அதன் ஆயுள் முடியும் என்று எமதர்மராஜன் தீர்மானித்து விட்டன போல.கல் குச்சி விளக்குமார் எல்லாம் சேர்ந்து தாக்கியதில் அந்த ஜீவன் உயிரை விட்டது வீர கதைகள் பேசிய படியே அம்மா சின்ன சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் திண்ணையில் கையில் சாதம் பிசைந்து போட்டார்கள் கூடவே இரண்டு கவளம் அதிகமாக உள்ளே போனது. அப்போது பெரியப்பா வீட்டில் இருந்து திருடன் திருடன் என்று அலறல். அவ்வளவு தான் தெருவே கூடி விட்டது எலோரும் (ஆண்கள் மட்டும் ) உள்ளே போனார்கள்.இங்கும் அங்கும் தேடி விட்டு யாரும் இல்லை என்று வந்து விட்டார்கள். ஆளாளுக்கு அட்வைஸ் வேறே .பாத்து நிமிடங்களில் துரு மீண்டும் பழைய நிலைமைக்கு வந்தது.அம்மாவுக்கு மட்டும் மனசு கேட்கவில்லை .பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு அண்ணா வீட்டுக்கு போனார்கள். எப்போதும் போல் நானும் ஒட்டிக்கொண்டேன்.பெரியப்பா திண்ணைக்கு குறுக்கே கட்டிலை போட்டுக்கொண்டு எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார் நானும் அம்மாவும் கட்டிலுக்கு அடியில் குனிந்து உள்ளே போனோம். அண்ணி சமையல் ரூமில் இருந்தார்கள். அம்மாவைபார்த்ததும் யாரோ குதித்தார்கள். என்று சொன்னதும் அம்மா ஒரு மடிகோல்எடுத்துக்கொண்டு பின்புறமாக போனார்கள்.அப்போது பின்கதவின் பக்கத்தில் நல்லா மல்லிகைப்பூவின் வாசம்.அண்ணா வீட்டில் அப்போது தான் ஒரு தண்ணீர் தொட்டி கட்டியிருந்தார்கள். அம்மா தொட்டியின் அடியில் குனிந்து பார்த்தர்கள்.அண்ணா கைளில் ஒரு லாந்தர் மினுக்கிக்கொண்டு இருந்தது திட்டியின் அதில் ஒரு பெரிய்ய பாம்பு வட்டமாக மண்டலம் போட்டுக்கொண்டு படுத்து இருந்தது. நான் மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டேன். அம்மா சத்தம் போடாமல் மெல்ல அண்ணா விடம் சொன்னார்கள்"டேய் பெரிய பாம்பு போய் பசங்களை வரச்சொல்..அண்ணா வெளியே போய் சொன்னதும் இரண்டு மூன்று பேர் சந்தானம் கோபுமட்டும் வந்தர்கள். சந்தானம் குத்துக்கோல் வைத்திருந்தான் அம்மா அவனிடம் "நான் இந்தபக்கம் குத்துகிறேன் நீ அந்தப்பக்கம் தலையில் குத்திவிடு " எண்டு சொல்லி பாம்பைகுத்தினார்கள். அடேயப்பா எவ்வளவு பெரிய பாம்பு மெல்ல பின்பக்கமாக ஊர்ந்தது சந்தானம் குத்தினான் தலையில் இல்லை முதுகில் அவ்வளவு உஸ் என்ற சத்தத்துடன் படம் விரித்து சீறியது அந்த நல்லா பாம்பு .'ஐயோ  நல்லா பாம்பு " என்றபடியே குதுக்கொலை விட்டு விட்டான்.அவனை விட சிரியவனான் கோபு அதிபிடிதுக்கொள்ள அந்த பாம்பு வேறு வழியில்லாம. ஜலதாரையை நோக்கி நகர்ந்தது. அன்று அதற்கும் இறுதிநாள் போல. நாங்கள் எங்கள் குயில் வைத்திருந்த சின்ன சின்ன குச்சிகளால் அதை விடாமல் அடித்தோம் பாவம் செத்துப்போய்விட்டது இத்தனைகலவரத்திலும் எங்களுக்கு வெளிச்சம் தந்தது அண்ணா கையில் இருந்த அந்த சீனா விளக்கு தான் ஒரு வழியாக அந்த பாம்பை வெளியே கொண்டு வந்து போட்டோம்.அம்மாடியோவ் எவ்வளவுபெரிய  படம்
ஒருவழியாக பாம்பு அடித்தாயிற்று அதை எரிக்க வேண்டுமே பக்கத்தில் இருந்த மூங்கில் பட்டிக்கு கொண்டு போய் அதற்கு என்னெமோ செய்து தீ மூட்டினார்கள் அப்போது பட்டோளிவீசிக்கொண்டு இருந்த நிலா மறைந்து ஒரு மணி நேரம் சரியான மழை.ஆச்சரியம் என்னவன்றால் மழை நின்றவுடன் போய் பார்த்தால் பாம்பு அப்படியே இருந்தது. அப்புறம் தான் எல்லோரும் விதம்விதமாய் கதை சொல்ல ஆரம்பித்தார்கள்.சோ ஆக்ராஹாரத்து வீரர்கள் இரவு முழுவதும் பாம்புக்கு காவல் . ஆனால் அம்மாவின் வீரம் யாராலும் பேசப்படவில்லை பாம்பு ஒரு பெண் அடிக்கலாமா என்று குற்றம் பேசப்பட்டது எனக்கு கோபம் வந்து எதிர்த்து பேசினேன். ஆன்னாலும் அன்று அம்மாவின் வீரம் அங்கீகரிக்கப்படவில்லை அண்ணி மட்டும் வந்து அம்மாவிடம் கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள்.அண்ணி அப்போது கர்பிணிஎன்னால் அம்மாவின் வீரச்செயல் மறக்கமுடியாதது புலியை முறம் கொண்டு விரட்டினால் தமிழ் பெண் என்று இலக்கியம் பேசலாம் ஏன் அம்மா மடிகொலால் பாம்பை அடித்தது பெரும்  வீரச்செயல் தான்

2 comments:

  1. மிக அழகாக எழுதுகிறாய் கீதா. தமிழ் எழுத்துக்கு இன்னும் பழகவில்லை என்று தெரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வரும் தவறு களைத்திருத்திக்கொள். நீயே அதை மீண்டும் எடிட் செய்யலாம். உனக்கும் ஸ்ரீதருக்கும் photographic memory தான். நீ சொல்வது போல அம்மாவின் வீரம் அங்கீகரிக்கப்படவில்லை தான். அந்தத்தலைமுறையைச சேர்ந்த பெண்கள் பட்ட கஷ்டங்களை அம்மாவும் பட்டிருக்கிறார்கள். நம் நிலைமை சற்று பரவாயில்லை. அடுத்த தலைமுறைக்கு இன்னும் சுதந்திரம் அதிகம். அவர்கள் புத்திசாலித்தனத்துடன் தன் சுதந்திரத்தை உபயோகப்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும். இன்னும் எழுது. எனக்குத்தெரியாத நிறைய விஷயங்கள் உனக்குத்தேரிந்திருக்கிறது, நீ தான் உண்மையிலேயே அம்மாவின் பெண். அதனால் தான் உன் மேல் அம்மாவுக்கு உயிர். 'பெண்' என்ற தொடரில் வந்த ஸ்ரீவித்யாவும் ரேவதியும் போல நீங்கள் இருவரும். ஆனால் உங்களுக்கே அது தெரிந்திருக்கவில்லை. இனி அது உனக்குத் தெரிந்தாலும் அதனால் பயன் இல்லை . ஒரு வேளை உன் மகளை நீ இன்னும் நன்றாகப் புரிந்து கொண்டு அவள் உன்னுடன் இருக்கும் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கலாம்.

    ReplyDelete
  2. அன்புள்ள கீதாவிற்கு, உன் வலைப்பூ மொட்டிலேயே பெரும் வாசம் வீசுகிறது. ரமா எழுதியுள்ளதுபோல் எழுதியதைப்படித்துப்பர்த்து எழுத்துப்பிழைகளை திருத்தி விட்டால் போதும். பாம்பு அடித்த நாள் எனக்கு இன்றும் நினைவில் பசுமையாக உள்ளது. ஆனால் மழை பெய்ததெல்லாம் நினைவில்லை. அவ்வளவுபேரும் அது நாகம் என்றதும் இடம் பெயர்ந்ததும், அம்மா விடாது பாம்பை மேலுலகம் அனுப்பியதும் மறக்க முடியுமா? அம்மாவின் வீரத்தை மட்டுமல்ல, எந்த வேலையை எடுத்து செய்தாலும் அதில் அம்மா காட்டிய ஈடுபாட்டையும்தான் இது .காட்டுகிறது. இதை எல்லோரிடமும் எதிர்பார்த்ததுதான் அம்மா செய்த தவறு (என் கணிப்பில்). ஆனால் இறுதி வரை இதில் உறுதியாக இருந்தது போல் வேறு யாராலும் இருந்திருக்க முடியுமா என்பது பெரும் கேள்வியே? அம்மா அம்மாதான்....

    ஸ்ரீதரன் பலராமன்

    ReplyDelete