Sunday, December 6, 2009

naan komalavilas matrum en tholarkal

வேலூரின் நினைவுப்பெட்டகத்தின் இன்னொரு பொக்கிஷம் கோமளவிலாஸ் .அது இன்னும் பசுமை மாறாமல் எப்போதும் நினைவுச்சிதறல்களாக ஓடி ஓடி வரக்கூடிய நினைவுகள்.அற்புதமான அனுபவக்கூட்ட்ங்கள். கோமளவிலாஸ் சிறு வயதில் என் கனவு மாளிகை. காவிரிக்கு போகும்  போதெல்லாம் ஒரு சிறு ஆசையுடன் ஏக்கப்பார்வை பார்த்துவிட்டு போவேன்.என்ன அதிசயம் அந்த அதே கோமலவிலாசில் நாங்கள் குடி இருந்தோம் .அப்போது என் தோழர்கள் யார் தெரியுமா? மூன்று பேர்.அந்த வீட்டில் வாழ்ந்து வந்த கருநாகபபாம்பு, அடிக்கடி எனக்கு மட்டும் உத்தரத்தில்ஊஞ்சலாடி தரிசனம் தரும்,இன்னொருவர் என் செல்ல வெள்ளைப்பூனை .மூன்றாவது ஆள் யார் தெரியுமா ? கண்ணுக்குத்தெரியாத அமானுஷ்யமான ஒரு ஆள். ஆம் எல்லோரும் பயப்படும் ஆவி.என்ன நம்பமுடியவில்லையா. உண்மை தான் என்னோடு விளையாடிய அமானுஷ்ய தோழி.தனியாக இருக்கும் போது தான் துணை இருப்பாள் (இருக்கும் என்று சொல்லலமா)

1 comment:

  1. அருமை. உன்னுள்ளே ஒளிந்திருக்கும் இந்த spirit எனக்கு ரொம்ப பிடிக்கும். எதிர்மறையான அனுபவங்களைக் கூட வேடிக்கையாக எடுத்துக்கொள்ளும் உன் திறமை தான் உனக்குப் பெரிய பலம். இன்னும் நிறைய எழுது. நிறைய சுவையான நிகழ்ச்சிகள் உனக்கு நினைவிருக்கும். நான் பதினாறு வயதிலேயே ஹாஸ்டலுக்கு சென்று விட்டதால் வேலூரைப் பற்றிய என் நினைவுகள் மிகவும் சிறிய வயதில் நடந்தவை தான். உன் எழுத்துக்களில் ஒரு வேகமும் கவர்ச்சியும் இருக்கின்றது. ரசித்துப்படித்தேன்.

    ReplyDelete