Wednesday, October 6, 2010

வந்ததே   வந்ததே  மழை
நீண்ட     இடைவெளிக்குப் பின் சென்ற வாரம் வானம் பொத்துக் கொண்டது போல் மழை கொட்டித் தீர்த்தது.இது என்னடா பெரிய விஷயம் என்கிறீர்களா ...?இதில் இரு விஷயம் இருக்கிறது. எங்கள் வீட்டுப் பூனையின் குட்டிக்கு இது முதல் மழை .அதன் கண்களில் என்ன ஆச்சரியம்...திடீரென்று பகலில் வானம் இருட்டிய போது அதன் முகத்தில் திகைப்பு...கொஞ்சமே அரைக்கண் திறந்து ஒரு சின்ன ஆராய்ச்சி,அப்போது வெயிலில் சுகமாய் நீட்டிக் கொண்டு இருந்த வாலுக்கு அருகில் பொத் என்று ஒரு மழைத் துளி.(எல்லோரும் பொட் என்று தான் சொல்லுவார்கள்.நான் ஏன் பொத் என்கிறேன் என்றால் அவ்வளவு  பெரிய துளி)
அப்போது வாரிச் சுருட்டிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தது .என்னடா ...இது புதுசா இருக்கே என்று நினைத்தது போலும்...ஜம் என்று சேர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டது.பகல் நேர மழை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது .அதுவும் இல்லாமல் அது ஒரு சோம்பலான ஞாயிற்றுக் கிழமையில் பிற பகலும் கூட....அப்போது பளீர்     என்று வெட்டியது ஒருமின்னல் ......தடதட என்று ஆகாயத்தில் இடி கும்மாளமிட்டது....அவ்வளவு தான் எங்கள் குட்டிப் பூனையின் வால சில்லிர்த்துக் கொண்டு விட்டது....அது வரை அம்மாவைத் தேடாத அந்தக் குட்டி அடைக்கலம் தேடி தாயிடம் ஓடியது.அந்தக் குட்டி காணாமல் போய் முதல் நாள் தான் கிடைத்து இருந்தது,தாய்க்கே உரிய ஜாக்கிரதையுடன் குட்டிப் பூனையை மிரட்டிக் கொண்டு இருந்தது ஆனால் அடம் பிடிக்கும் சின்னக் குழந்தை போல் ஓடிய அந்தக் குட்டி வானம் காட்டிய வெடி வெளிச்ச  வேடிக்கை மீண்டும் அம்மாவிடம் அழைத்து வந்து விட்டது,,,,இயற்கையின் முதல் சீறல் கண்டு சற்றே பயம் காட்டிய சின்னக் குட்டியின் பயம் நிமிடங்களில் தெளிந்து விட்டது.மேலக்  கூரையில்  இருந்து கொட்டிய மழையின் தாரை கயிறு போல் பட்டது போலும் அதைப் பிடிக்க குறி பார்க்க ஆரம்பித்து விட்டது..இதை பார்க்கும் போது சிரிப்பாகவும் இருந்து...மனிதர்களின் பயமும் புரிந்தது.அம்மா பூனை தான் குழந்தையை போகாதே என்று மிரட்டவில்லை மாறாக கண்காணித்தது.ஆனால் ........நாம் விடுவோமா.....?

1 comment: