Sunday, January 2, 2011

கொல்லூர் பயணம்
மழை சாரலுடன் தொடங்கியது...கொல்லூர் நெருங்க நெருங்க மழையின் சீற்றம் அதிகமாகியது...நேராக சௌபர்ணிகா கரையை நோக்கி சென்றது சிற்றுந்து...மழையின் சீற்றமும் அதிகம் ஆற்றின் நீரின் வேகமும் அதிகம்...குளிக்க இடம் தேடி மழையில் அலைந்தோம்...மாமாவின் இன்னொரு பொய்....நிஜமாகவே பொய் ஆனது.உடைமாற்றும் இடம் இல்லாததால் நாங்கள் பயணம் செய்த அந்த வண்டி எங்கள் கிரீன் ரூம் ஆனது.டிரைவருக்கு ஒரே கோபம்.வண்டியை நாஸ்தி பண்ணி விட்டோம்.ஏதோ ஒரு மாதிரி டிரஸ் செய்து கொண்டு கோவில் நோக்கி பயணம்..மழையின் வேகம் இன்னும் அதிகரித்தது...எங்கும் மலையாள வாடை...கர்நாடக கோவில் ...மலையாள முறைப்படி தான் வழிபாடு ..பார் பார் பட்டினம் பார் என்று கண்காட்சி பார்ப்பது போல கோவில் பார்த்து விட்டு (ஆமாம் கோவில் தான் பார்த்தோம் அம்மன் தரிசனம் மனம் ஈர்க்க வில்லை)  ஓட்டல் தேடினோம்..என்னமோ சப்பாத்தி என்று ஒரு வரட்டி..... சாப்பிட்டோம் என்று பேர் பண்ணி விட்டு மழையில் நனைந்து கொண்டே உடுப்பி நோக்கி பயணம் துவங்கியது...

No comments:

Post a Comment