நண்பன்டா ....
நான் போட்ட மோர் மிளகாய்
நட்பின் இலக்கணம் உணர்த்தியது
பச்சை பசேல் என்ற கார மிளகாய்
வெள்ளை வெளேரென்ற தயிருடன் உடன்படிக்கை.
முதல் நாள் தனியே தெரிந்தது
மிளகாயும் தயிரும்..
நான் வேறு நீ வேறு ..
ஒப்பந்தம் அமலுக்கு வரவில்லை.போலும்.
ஆனாலும் பச்சையும் வெள்ளையும் அழகு தான்...
அடுத்தநாள் கொஞ்சம் நிறம் மாற்றம்...
சூரியன் கொஞ்சம் சொல்லிக்கொடுத்தான் போலும்
இடைத்தரகன் நல்லாவே வேலை செய்தான்
கொஞ்சம் கொஞ்சமாக பச்சைக் கலர் மாறியது.
நானும் கூடவே வருகிறேன் என்ற வெயிலின் சூடு
மிளகாயை நிறம் மாற்றி விட்டது.
காய்ந்தபின் பொறித்தால் ......
அடடா.....என்ன சொல்வது.....
குணமும் மாறி விட்டது....
மிளகாயின் காரம் போன இடம் தெரியவில்லை.
கொஞ்சம் புளிப்பு, கொஞ்சம் உப்பு,கொஞ்சம் காரம்,
இப்படி நிறம் மணம்,குணம் எல்லாம் மாற்றிக் கொண்டு விட்டது.
எனக்கு நினைவுக்கு வந்தது என்னவோ
ரஹீமின் கவிதை தான்..
நட்பு இருவரின் குணா திசயங்களும் கலந்த
புது குணம் தோற்றுவிக்கும்
மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்தால் கிடைக்கும்
நலங்கு சிவப்பு போல...
நான் போட்ட மோர் மிளகாய்
நட்பின் இலக்கணம் உணர்த்தியது
பச்சை பசேல் என்ற கார மிளகாய்
வெள்ளை வெளேரென்ற தயிருடன் உடன்படிக்கை.
முதல் நாள் தனியே தெரிந்தது
மிளகாயும் தயிரும்..
நான் வேறு நீ வேறு ..
ஒப்பந்தம் அமலுக்கு வரவில்லை.போலும்.
ஆனாலும் பச்சையும் வெள்ளையும் அழகு தான்...
அடுத்தநாள் கொஞ்சம் நிறம் மாற்றம்...
சூரியன் கொஞ்சம் சொல்லிக்கொடுத்தான் போலும்
இடைத்தரகன் நல்லாவே வேலை செய்தான்
கொஞ்சம் கொஞ்சமாக பச்சைக் கலர் மாறியது.
நானும் கூடவே வருகிறேன் என்ற வெயிலின் சூடு
மிளகாயை நிறம் மாற்றி விட்டது.
காய்ந்தபின் பொறித்தால் ......
அடடா.....என்ன சொல்வது.....
குணமும் மாறி விட்டது....
மிளகாயின் காரம் போன இடம் தெரியவில்லை.
கொஞ்சம் புளிப்பு, கொஞ்சம் உப்பு,கொஞ்சம் காரம்,
இப்படி நிறம் மணம்,குணம் எல்லாம் மாற்றிக் கொண்டு விட்டது.
எனக்கு நினைவுக்கு வந்தது என்னவோ
ரஹீமின் கவிதை தான்..
நட்பு இருவரின் குணா திசயங்களும் கலந்த
புது குணம் தோற்றுவிக்கும்
மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்தால் கிடைக்கும்
நலங்கு சிவப்பு போல...
அருமை கீதா.இன்று தான் படித்தேன் உன் மோர் மிளகாய்க்கவிதையை. இன்னும் நிறைய எழுது.
ReplyDelete