Wednesday, December 7, 2011

அம்மா வீடு
பொழுது போகாமல் பழைய அவள் விகடன்களைப் புரட்டிக்கொண்டு இருந்த போது ஒரு புத்தகத்தில் வாசகர் சிறுகதை என்ற தலைப்பில் அம்மா வீடு என்ற ஒரு கதையைப் பார்த்தேன். அட..எப்படி நம்ம கண்ணில் விழாமல் போனது ? என்று எண்ணிய படியே படிக்கத் தொடங்கினேன்..படிக்கப் படிக்க மலைப்பானது.என்னடா இது எல்லா பெண்களுக்குமே இந்த நிலை வரும் போல?என்று நினைத்துக்கொண்டே படித்தேன்.(கதைச் சுருக்கம் இது தான் ...திருமணத்துக்கு முன் அவள் வைத்தது தன சட்டம் என்று எல்லோரும் அவளைசுற்றியே வாழ்கை வட்டத்தை அமைத்துக் கொண்டு இருந்தார்கள்.திருமணத்துக்குப் பின் ..அவளது அம்மா வீட்டுத் தொடர்பு ஒவ்வொன்றாக துண்டிக்கப் பட்டது.அவளது உரிமைகள் அவளைக் கேட்காமலேயே அவளை கையில் இருந்து எடுக்கப் பட்டன.அப்பா அம்மா வின் செல்ல மகள் அவர்கள் மறைவுக்குப் பின் தன துவைத்த துணிகளை வைக்கக் கூட இடம் இல்லாமல் மீண்டும் தான் கொண்டு வந்த பெட்டியில் அவற்றை அடுக்கும் பொது சுட்ட உண்மை வெந்நீர் கோடுகளை கன்னத்தில் வரைந்தன.யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள் தன பையின் ஜிப்பை இழுத்து மூடினாள் கூடவே மனதிற்குள் இருந்த உரிமைக் கனவுகளையும் அழுத்தித் துடைத்தாள்)

   இந்தக் கதையைப் படித்தபின் நிதரிசனமான உண்மைகள் எப்படிச் சுடுகின்றன என்பதை உணர்ந்தேன்?பெண்களுக்கு தாய் வீட்டு உரிமை என்பது இவளவு தானா? நான் தீர்மானம் செய்து விட்டேன். என் மகள் திருமணம் ஆகி கணவன் வீடு சென்றாலும் அவளுடைய அறை எப்போதும் அவளுடையதாகவே இருக்க வேண்டும்....இருக்கும்....

5 comments:

 1. you may decide but it is inevitable . pl understand that another girl from another house also will be walking in for whom you have to provide as much space you have provided to your daughter and you have to provide as much love to her as you are showering on your daughter. if you can provide a trunk for your daughter that it self will be great because that is what is practicable .but i also wish that you will be able to abide by your wish. you can not eat the pie and have it in hand as well.

  ReplyDelete
 2. sathya
  i understand the fact.but even though a new member steps in,why the girl who enjoyed her life have to feel like the girl in the story? what is problem in not disturbing her space in the family?I wish that the new girl who enters also should feel that she is having equal right both in her house and also in the in law's..

  ReplyDelete
 3. This is vittal and not sathya, sathya also feels the same way as your self, but my contention is as follows . let us take a case of your self providing a room to your son and your daughter. after your son has gone for a job and settles in a town outside the native slowly he takes out all the material that he was using it and the room becomes half filled. now your daughter gets married and moves her things to another place, the earlier lines repeats. after some days both half filled rooms are merged to enable usage of at least one room. slowly the no of times your daughter comes to your home in a year reduces from four times to once in a year and bi yearly and then occasionally and then when absolute need is there. same will be the case with son as well if not to the same extent. because daughter stats shouldering her own family's responsibilities she is not to be blamed. The things dumped in the room gets spoiled and one fine day need for space arouse so the room is refurbished and some of the good things that remain in the lot found a space in the loft inside a box. new things occupies the room and we start using it this is how the daughter looses her space it is totally unintentional from every one this is bound to happen even if you don't wish. every one of us want to live for ever but it never happens with any one.

  ReplyDelete
 4. விட்டல், நீங்கள் எழுதி இருப்பது நிதரிசனமான உண்மைகள்.ஆனால் நீங்கள் சொல்வது போல் எப்போதோ ஒரு முறை அம்மா வீட்டுக்கு (ஏன் பேரன் பேத்தி,கொள்ளுப் பேரன் பேத்தி எடுத்த பிறகும் கூட) ஏற்படுத்தும். தாய் வீடுக்கு அடிக்கும் விசிட் மனதில் ஒரு சின்ன சிலிர்ப்பை ஏற்படுத்தும்.சின்ன குழந்தை போல் ஒரு குதூகல உணர்வு இதைப் பற்றி என் அம்மா அதிகம் பேசியிருக்கிறார்.வீட்டுப் பெண் என்ற பதவியே அந்தக் காலத்தில் இந்த space பற்றிய விஷயமாக கூட இருக்கும் என்று அம்மா சொல்லுவார்.அந்த space ஏன் பெண்கள் இலக்க வேண்டும் என்பது தான் என் ஆதங்கம்.

  ReplyDelete
  Replies
  1. Subha here... I do accept that one's space in the mom's home is your own... and should be your own. I am totally disqualified to comment otherwise as i continue to live in my old room! This might not be practically possible, but in theory, this thought is great! Son or daughter, our childhood spaces are sacrosanct.... home or school. In school, i've seen men who work in NASA come and ask the chemistry miss if they can please do the brown ring test once again. That pipette, the burette... is all theirs, in a sense! And, in one instant,they reenter childhood...

   Delete