Thursday, April 3, 2014
VG
ரஹீமின் வைர வரிகள்
என்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு நான் தேர்வுக்கு தேவையானவற்றை மட்டும் சொல்லிக் கொடுப்பேன்.இந்த முறை தேர்வு எழுதும் மாணவி எல்லா பாடல்களையும் சொல்லிக் கொடுங்கள் என்றாள்.நானும் படித்து சொல்லிக் கொடுக்கிறேன்.என்று படித்தேன்.
அற்புதமான செய்திகள்
உதாரணத்திற்கு இரண்டு தோஹேகள் .
टूटे सुजन मनाइये,जो टूटे सौ बार।
रहिमन फिरी फिरी पोहिए,टूटे मुक्ता हार।।
பொருள்
நம்முடைய நடவடிக்கைகளால் கோபபட்டு விலகி நிற்கும் நல்ல நண்பர்களை நூறு முறை ஆனாலும் சரி,வேண்டி மன்னிப்பு கேட்டு அந்த நட்பை உயிர்ப்புடன் வைத்திருங்கள்.ஏனெனில் நல்ல நட்பு விலை மதிக்க முடியாத முத்து மாலையைப் போன்றது.அது எவ்வளவு முறை அறுந்தாலும் முடிச்சு ப்போட்டு பத்திரப படுத்துவோமல்லவா?அது போலத் தான் நல்லவரின் நட்பும்.
இரணடாவது தோஹா
बिगरी बात बने नहीं,लाख करै किन काय।
रहिमन फाटे ढूध को,मथैन माखन होय।।
பொருள்
எப்படி திரிந்த பாலை லட்சம் முறை கடைந்தாலும் வெண்ணை கிடைக்காதோ,அதே போல் கடுஞ்சொற்களால் உடைந்த மனதை ஒட்ட வைக்க முடியாது.
--
Sent from Fast notepad
Tuesday, April 1, 2014
மனிதர்களின் நிறங்கள்
அனுபவம் பேசுகிறது
இன்று மாலை வாக்கிங் போகும் போது நீண்ட நாள் பழகிய ஓருவரை அவரது வீட்டு வாசலில் பார்த்தேன்.அவர் சமீபத்தில் இலங்கையில் ராமாயணம சம்பந்த பட்ட இடங்களுக்கு ஆன்மீகப் பயணம் சென்று திரும்பியிருந்தார்.அவரது கணவர் சில நாட்களுக்கு முன் பார்த்த போது சொன்னார்.சரி நேரில் பார்த்த பிறகு விசாரிக்க வில்லை என்று நினைத்துக் கொள்வார்களே என்று எண்ணி பயணம் பற்றி விசாரித்தேன்.விபரமாக எல்லாம் கூறியவர் நீங்களும் போய் பார்த்து விட்டு வாருங்கள் என்றும் கூறினார்.பிறகு போய் வருகிறேன் என்று கூறி ஒரு அடி எடுத்து வைத்தேன்.என்ன நினைத்தாரோ அந்த மாமி என் காலடியின் கீழ் இருநத மண்ணை ஒரு பிடி வாரி க்கொண்டு உள்ளே போனார்.அதைப் பார்த்ததும் என் மனம் பதைத்துப் போயிற்று.கோவிலுக்குப் போயும் மனம் இறைவனை நாட வில்லை.
இறைவா இந்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்.மனம் கனத்துப் போய் விட்டது.
--
Sent from Fast notepad
Subscribe to:
Posts (Atom)