Tuesday, November 9, 2010

இளங்காலை ....சிலு சிலு வென்று மென் காற்று...வண்டி நின்ற இடமோ பழைய ஆற்றுப் பாதை.முதலில் இறங்கிய எங்கள் டூர் கைடு வெகு வேகமாக நீச்சல் உடைக்கு மாற்றிக்கொண்டார்.(என்ன ஒரு பெரிய விஷயம்...தடவென்று வேஷ்டி சட்டை களைந்தார்.ஒரு துண்டை கட்டிக் கொண்டு நாங்கள் வருகிறோமா..இல்லையா...என்று கூட பார்க்காமல் ஆற்றை நோக்கி நடந்தார்.)எனக்கு திக் என்றது.எப்படி குளித்து உடைமாற்றுவது...?என் மகளின் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்தது...நான் இங்கே குளிக்கமாட்டேன்...எங்கே டிரஸ் மாற்றுவது...நான் உடனே மாமா...மாமா...என்று கூவிக்கொண்டே பின் தொடர்ந்தேன் ...என் மகளின் சந்தேகங்களுக்கு உடனே பதில் வந்தது ...அதோ அங்கே நிறைய இடம் இருக்கிறதே....சற்று தள்ளி நிறைய பாத்ரூம் கடடி விட்டிருந்தார்கள்...(இதற்குள் மாமாவின் குளியல்...மற்றும் காலை  கடன்கள் முடிந்து பட்டை அடித்து ரெடி ஆகி இருந்தார்...என்ன போலாமா....?மாமாவின் அடுத்த கேள்வி..எனக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது...எங்கும்அழுக்கு  குப்பை கீழே அங்கேயே துப்பி வைத்திருந்தார்கள்...நாங்கள் இன்னும் பல் தேய்க்ககூட ஆரம்பிக்க வில்லை .என் கணவரைக் கண்ணிலேயே காணோம்....சற்று தள்ளி கை கடடி வேடிக்கை பார்த்துக்  கொண்டு இருந்தார்.சரி  ....நின்று கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது என்று என் மகளை கரையில் காவலுக்கு வைத்து விட்டு விடு விடு வென்று தண்ணீரில் இறங்கினேன்..தண்ணீரின் மேலே படலமாக பனி மூட்டம் நகர்ந்து கொண்டு இருந்தது.(வேலூரில் வாய்காலில் மார்கழி மாதம் பார்த்து ரசித்தது மீண்டும் நினைவுக்கு வந்தது.)
இப்போது ரசிக்கும் மன நிலை இல்லை ஒரு முழுக்கு .......மனதில் புனித இடம் என்ற ஒரு பக்தியே வரவில்லை...எங்கும் அசுத்தம்...அழுக்கு....குளித்தோம் என்று பேர் பண்ணி விட்டு உடை மாற்றச் சென்றேன்...அங்கே நான்கு பக்கம் தட்டி அடித்து டிரெஸ்ஸிங் ரூம் என்று இரண்டு ருபாய் வாங்கி விட்டான்...(நஞ்சன்கூட் எனக்கு மிகவும் பிடித்தமான இடம் அந்த கோவில் அதன்தங்க நிறம்..... சிலைகள் என்னை மிகவும் ஈர்க்கும் நீண்ட பயணத்திற்குப் பின் கூட சுறுசுறுப்பாக இறங்கி ஓடுவேன்.இப்போது அந்த சந்தோஷம் கொஞ்சம் கூட இல்லை..... ஒரே கோபம்...)ஏதோ காமா சோமாவென்று புடவையைச் சுற்றிக் கொண்டு கடவுளை தரிசிக்கப் போனோம்..நல்ல தரிசனம்..(இங்கும் திருப்பதி போல தள்ள ஆரம்பித்து விட்டார்கள்)திருப்தி அடையாமல் வெளியே வந்தோம் பிரகாரம் சுற்றி வந்தோம் . அம்மன் சந்நிதி..கும்பல் இல்லை அர்ச்சகரிடம் பேர் நக்ஷத்திரம் சொல்லி அர்ச்சனை....செய்யச் சொன்னோம்...மனம் மிகவும் அமைதியாய் இருந்தது.அம்மன் சந்நிதிக்குப் பக்கத்திலே ஒரு மரகத லிங்கம் இருக்கிறது.அதை கோவிலுக்குக் காணிக்கை ஆக  கொடுத்தது திப்பு சுல்தான்.அவனுடைய பட்டத்து யானையின் கண் நோய் நீக்கியதற்காக  அம்மனுக்கு அவன் செய்த நன்றி காணிக்கை.(இதை பார்க்கும் போது பக்தி ,நம்பிக்கை,நன்றி உணர்ச்சி இவை எதுவுமே மதம் சார்ந்தது இல்லை என்ற உண்மை உரைத்தது.பின்...ஏன்...இப்போது இத்தனை மதக் கலவரங்கள்...புரியாத புதிர் தான்..)
கோவில் விட்டு வெளியே வரும் போது பிரகாரங்களில் அற்புதமான் சிலா ரூபங்கள்...கதைகள் கன்னட எழுத்துகளில் இருந்ததால் புரியவில்லை...ஒரு சில விக்ரகங்கள் கதை தெரிந்ததால்....என்ன என்று தெரிந்தன..இப்போது நான் டூரிஸ்ட் கைடு ஆகி விட்டேன்...இப்போதும் எங்கள் வண்டி டிரைவர் எங்களுடன் வரவில்லை ஏனோ அவர் ஒட்டாமல் இருந்தார்....வெளியே வந்த பிறகு ராகவேந்திரர் பிருந்தாவனதிற்குப் போனோம் .இங்கே தான் சுயம்புவாக ராகவேந்திரர் சிலை இருக்கிறது.அவரையும் தரிசித்து விட்டு வண்டி நோக்கி திரும்பினோம்...அங்கே இருந்த ஒரு டீக் கடையில் காபி என்ற பெயரில் ஏதோ குடித்து விட்டு எங்கள் பயணம் தொடர்ந்தது.மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் விரைந்த எங்கள் வண்டி நின்ற இடம் சாமுண்டி மலை..அப்போது தான் தசரா முடிந்து இருந்ததால் அம்மன் அழகாக அலங்கரிக்கப் பட்டு இருந்தாள்.(இங்கே நாங்கள் சாப்பிட்ட காலை உணவு.....அப்பப்பா...படு கேவலமாக இருந்தது....ஐயோ  இன்னும் நான்கு நாட்கள் எப்படி சாப்பிடப் போகிறோம் என்று பயம் வந்து விட்டது..உடன் வந்தவர்களும் இதே பயத்தை வெளிப் படுத்தியதால் இனி நாங்கள் சொல்லும் ஹோட்டலுக்குத் தான் போக வேண்டும் என்று டிரைவரை சரிக் கடடி வைத்தோம்.இதற்குள் டிரைவர் கொஞ்சம் பழகஆரம்பித்து இருந்தார்.)அடுத்த இலக்கு மைசூர் பாலஸ்.......(தொடரும்)

No comments:

Post a Comment