Sunday, November 14, 2010

மைசூர் மாளிகை இந்த முறை ரொம்பவும் ஈர்க்க வில்லை,,,,அப்போது தான் தசரா முடிந்து இருந்ததால் அதன் வாசம் இன்னும் மீதம் இருந்தது....அவசர அவசரமாக பார்த்தேன்...என்று   பேர் பண்ணி விட்டு  திப்புவின் மளிகை.....(முதல் தடவை பார்த்த போது அந்த திப்புவின் சமாதி...மனதில் ஆழமான சோகத்தை ஏற்படுத்தியது...மதம் தேசபக்திக்கு தடையாக இருக்க முடியாது என்பதை  அழமாக உணர்த்தியது)அங்கிருந்து.சங்கமம் போனோம் காவேரி இரண்டாகப் பிரிந்து இணையும் இடம் ஸ்ரீரங்கத்தை  நினைவு படுத்தியது..(நிறைய பேர் தங்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு சடங்கு செய்து கொண்டு இருந்தார்கள் ..எனக்கு அம்மாவின் நினைவு வந்து விட்டது) அங்கிருந்து மேல் கோட்டை...
மேல் கோட்டை பற்றி நிறைய படித்து இருக்கிறேன்..எனவே ஒரு ஆவலுடன்  கோவிலுக்கு செல்ல விரும்பினேன்.எப்போதெல்லாம் நஞ்சன்கூட் செல்வோமோ அப்போதெல்லாம் என் விருப்பம் சொல்லப்படும்.உடனேயே நிராகரிக்கப் பட்டு விடும்.எனவே இந்த எதிர் பாராமல் செல்லப் பிள்ளையை தரிசிக்கும் பாக்கியம் என்னை மிகவும் ஆவலில் ஆழ்த்தியது. கர்நாடகாவில் தமிழக கட்டிடக் கலையின் இன்னுமொரு பரிமாணம்...இங்கும் முகலாய ஆட்சியாளர்களின் கைவண்ணம் ...சுற்றுச் சுவர்களில் இருக்கும் சிலைகள எல்லாம் கை இழந்தும்....   கால் இழந்தும்  ....  சின்னா பின்னமாகக் காட்சியளிக்கின்றன.உள்ளே செல்லப் பிள்ளையின் தரிசனம் ..வரலாறும் ஆன்மீகமும் கதை கதையாய் வருணித்த செல்லப் பிள்ளை மிகவும் அழகு தான்.(அது தான் அந்த இஸ்லாமிய இளவரசி மோகித்து தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளாள் ...பிறகு ஆச்சாரியார் அவர்கள் செல்லப் பிள்ளாய் ! வாரும் ! என்று அழைத்தப் போது அன்பில் கனிந்து உடன் வந்த அந்த அழகிய பிள்ளையைப் பிரிய முடியாமல் உடன் வந்து" துலுக்க நாச்சியாராக" வணக்கத்துக்கு உரிய தெய்வமாகிய கதை கண்ணுக்கு முன்னே படம் போல ஓடியது.)..இங்கேயும் அவசரம் தான்..ஆறு மணிக்கு முன்னே ஸ்ரவண பெலகோலா சென்று அடைய வேண்டும் என்று டிரைவர் வண்டியை விரட்டினார்.அதோ   ......பத்து மைலுக்கு முன்பே அந்த விஸ்வரூப உருவம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தது..காலையில் இருந்து அவசர அவசரம்மாக எல்லா இடங்களிலும் ஓடி ஓடி தரிசித்த களைப்பு ...சரி ..கீழே இருந்தே ஒரு நமஸ்காரம் போட்டு விடலாம் என்று தீர்மானித்தேன்..ஆனால் என் மகள் மேலே போக வேண்டும் என்று சொன்னதினால் சரி என்று முடிவை மாற்றிக் கொண்டு ஏறலாம்..என்று முடிவு செய்தேன்...வழக்கம் போல செருப்பு போட வேண்டாம் என்று அறிவிப்பு வந்தது..நாங்களும் வழக்கம் போல காதில் போட்டுக் கொள்ளாமல் செருப்பு அணிந்தே போனோம்...நல்ல தூரம்.(செருப்பு இல்லாமல் நடக்கவே வர மாட்டேன் என்கிறது)அடிவாரத்தில் இருந்து நிமிர்ந்து பார்த்தேன்...சற்று மனம் அதைரியப் பட்டது..சரி வந்து விட்டோம் ஏறி தான் பார்க்கலாமே.....துணிந்து விட்டேன்..முதலில் சற்று வேகமாக ஏறினேன்..ஆனால்.....கொஞ்ச தூரம் போனதும் வியர்வை ஊற்று உடலை நனைத்தது ..இதயம் ப்டபடவென்று அடித்துக் கொண்டது..குதித்துக் கொண்டு வாய் வழியே வெளியே வந்து விடும் போல துடித்தது.மேலே இருந்து இறங்குபவர்கள் "சீக்கிரம் ...போங்கள்..கோவில் மூடி விடு வார்கள் என்றதும் சரி கீழே இறங்கி விடலாம் என்று திரும்பினால் திரிசங்கு போல பாதியில் இருந்தேன்.என்ன ஆனாலும் சரி என்று வாயால்" புஸ்...புஸ் 'என்று மூச்சு இரைத்துக் கொண்டே மண்டபம் வரை சென்று விட்டேன் சரி வந்து விட்டோம் என்று சந்தோசப் பட்டால்...கொஞ்ச தூரம் பாறையில் சரிவில் ஏறிப் போனால் மீண்டும் பெரிய படிகள்..கண்களில் நீர் நிறைந்து விட்டது..சூரியன் காணமல் போய் விட்டான் இருள் சூழ ஆரம்பித்து விட்டது...சரி மகாவீரருக்கு என்னை ஆசீர்வதிக்க மனம் இல்லை போல என்று நினைத்துக் கொண்டே தட்டுத் தடுமாறி கோவில் படியில் கால் வைத்தேன்.என் கணவரும் மகளும் எனக்காக காது இருந்தார்கள்...மக வீரரின் விஸ்வரூப் தரிசனம் எனக்கும் கிடைத்து விட்டது...அவ்வளவு உயரத்தில் எங்கிருந்தோ வீசிய மென் காற்று வியர்வையில் நனைந்த என் உடலை சிலிர்க்கச் செய்தது...நம் நாட்டின் தெய்வ மனம் கமழும் இடங்களில் இப்படி ஏதோ யாருக்கும் புரியாத அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன..அவற்றைக் கண்டு பிடித்து அங்கே இப்படி அழகிய தெய்வீக மனம் கமழும் கோவில்களையும் கடடி வைத்துள்ள நம் முன்னோர்கள் உண்மையிலே பெரிய ஆச்சரியக் குறிக்குள் உள்ளவர்கள் தான்.......!

1 comment: