பேலூர் பயணம்
அடுத்த நாள் என்னவோ காலையிலேயே விழிப்பு வந்து விட்டது.எங்களுடன் அறையைப் பகிர்ந்து கொண்ட கோமளா மற்றும் அம்பிகா இருவரும் மலையாளிகள்.அம்பிகா ரொம்பவும் சுறுசுறுப்பு .எழுந்தவுடன் வெந்நீர் வர ஆரம்பித்தவுடன் குளிக்கப் போய் விட்டார். நான் காயத்ரியை எழுப்பினால் கோமளா "அவளை ஏன் எழுப்புகிறீர்கள் ?பாவம் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்"என்று தடுத்து விட்டார்.நான் எழுந்து என் வேலைகளை முடித்து விட்டு காயத்ரியை எழுப்பினேன்.அதற்குள் மாமா வந்து ஆயிற்றா....நேரம் ஆச்சு....என்று விரட்ட ஆரம்பித்தார்..நிலைமை என்னவென்றால் இன்னும் பாதி பேர் குளிக்கவே இல்லை.காயத்ரி அப்போது தான் குளிக்கப் போய் இருந்தாள்.சரி என் கணவர் குளித்து விட்டால் பேக் பண்ணலாமே என்று அவர்களுடைய அறைக்குப் போனால் துண்டைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டு இருந்தார்.அவருக்கு சரியான கோபம்.இந்த மாமா குளித்தேன் என்று பேர் பண்ணி விட்டு ஓடி விட்டார் நான் இப்போது தான் குளிக்கப் போகிறேன் என்று அறைக்குள் போனார். சரி என்று நான் அவருடைய பெட்டியை பேக் செய்து விட்டு எங்கள் அறைக்கு வந்தால் அந்த விடுதியின் வாட்ச்மேன் பெட்டிகளை கீழே எடுத்துப் போக காத்திருந்தான் .எங்களை அறையை விட்டு போகும் படி விரட்டினான்.நான் சும்மா ஹிந்தியில் சத்தம் போட்டேன் இன்னும் குளிக்கவே இல்லை ...இன்னும் பத்து பதினைந்து நிமிடம் ஆகும் என்று...அவன் என்னமோ முணுமுணுத்துக் கொண்டு போய் விட்டான்..பிறகு ஒரு வழியாக கிளம்பி கீழே வந்தால்...எல்லோரும் காபி குடித்துக் கொண்டு இருந்தார்கள்.எங்களுக்கும் காபி வந்தது. காயத்ரி டீ குடிக்க லேட் ஆனது.அப்போதே வானம் சற்று மேக மூட்டமாக இருந்தது, அப்பாடா.....வண்டியில் ஏறி விட்டோம்.இப்போது டிரைவர் கொஞ்சம் பிரெண்ட் ஆகி விட்டார்.அங்கிருந்து ஹலேபீட் ..பயணம் அருகில் தான்...அரை மணியில் வந்து விட்டோம்.அருணாசலம் படத்தில் ரஜினி வந்து ஆடிய அந்த அழகிய கோவில் ......உள்ளே நுழைந்த பின் தான் அதன் பிரம்மாண்டம் புரிந்தது.மாக்கல் என்ற மென்மையான கற்களில் சிற்பியின் கற்பனை புகுந்து விளையாடி இருந்தது.இந்த கால அரசியல் வாதிகள் என்னமோ அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று பட்டியல் போடுகிறார்களே...நான் இதை செய்கிறேன் என்று சொல்லாமலே தான் பெயரை நிலை நிறுத்தி உள்ள அந்த ஹோய்ச்ள அரசனுக்கு அனந்த கோடி வணக்கங்கள்.கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகள் ..உழைப்பு ஜக்கன்னாசார்யா
என்ற சிற்பி தொடங்கியதாம்,..அவருடைய பேரன் காலத்தில் முடிந்திருக்கிறது...'கல்லிலே கலை வண்ணம் கண்டான்'...கூத்தாடலாம் போல ஒரு சந்தோஷம்...இங்கேயும் சீக்கிரம் சீக்கிரம்...அவசரப் படுத்தினார் மாமா ...என் மகள் கேமிராவை மூடவே இல்லை ...கண்கள் பெற்ற பயன் இது...கட்டாயம் ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய இடம்....அங்கே இருந்த அந்த பெரிய நந்தி ..வழக்கம் போல அங்கே தனிமை நாடி வரும் காதலர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்திருந்தார்கள்..பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத கலைச் செல்வங்கள் .....இங்கேயும் காலை உணவுக்கு ஒரு பாடாவதி ஹோட்டலுக்குக் கூட்டிக் கொண்டு போனார்.இப்போது பழகி விட்டோம் சோ..ஆட்டோ டிரைவரிடம் விசாரித்து ஒரு சுமாரான ஹோட்டலுக்குப் போனோம்.இரண்டு நாட்களுக்குப் பிறகு சற்றே வயிறு நிறைந்தது.காபி படு மோசம் எனவே நானும் டீக்கு மாறி விட்டேன்,,,,அடுத்த இலக்கு பேலூர்...இது ஹலேபீட் கோவிலை தூக்கிச் சாப்பிட்டு விடும்.விஷ்ணு வர்தனனும் அவனது மனைவி நாட்டிய ராணி சாந்தலா தேவியும் இணைந்து கலை தெய்வத்துக்கு செய்திருக்கும் ஆராதனை.உள்ளே ..ஒரு கைடு உதவியுடன் எல்லா நுணுக்கமான சிற்பங்களையும் பார்த்தோம்.தற்காலத்திய உடை வடிவங்கள் அணி மணிகள் கூந்தல் அலங்காரம் செருப்பு ..எல்லாவற்றையும் விட அந்த கல் வடிவங்களின் உடைகளில் இருந்த பூ வேலைப்பாடு...கிரேட்.அங்கே ஒரு விளக்குத் தூண் இருக்கிறது...அது ,மேடையில் முழுவதுமாக பதிக்கப் படவில்லை அதன் அடியில் ஒரு காகிதத்தை நுழைத்து எடுக்கலாமாம் மாமா இங்கேயும் விரட்டினார்..ஆனால் நாங்கள் அசைய வில்லை நின்று நிதானமாக பார்த்து விட்டு வந்தோம்.மாமாவுக்கு கோபம் ....எங்களுடன் பேச வில்லை.....என் மேல் ரொம்பவும் கோபம்....கல்லூரிக் காலத்துக்குப் பின் க்ரூப் சேர்த்துக் கொண்டு தலைமையை எதிர்த்து...கொஞ்சம் நன்றாகத்தான் இருந்தது...பின் சீட்டில் இருந்த க்ரூப் கொஞ்சம்கொஞ்சமாக எங்களுடன் சேர ..சூப்பர்....மாமாவுக்குத் தலைவலி....சரி ஜூட் ..வண்டி நேர ஹொர நாடு அன்னபூர்னேச்வரி கோவில் தான் மதியம் சாப்பாடு அங்கே தான்...கதை விட ஆரம்பித்தார்....பின் சீட் அப்போதே சாப்பாட்டுக் கனவில் மூழ்கி விட்டது.வண்டி மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் உச்சியில் பயணித்தது..சற்றே மேடு பள்ளமான வளைந்த பாதை...சரியான சாப்பாடு வேறே இல்லையா வயிறு மக்கர் பண்ண ஆரம்பித்தது...ரெடி ஸ்டார்ட் ...வாந்தி எடுக்க ஆரம்பித்தனர் பயணியர்..ஆரம்பித்து வைத்தது அம்பிகா ...தொடர்ந்தது நான்...என் கணவர் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டு எல்லோருக்கும் தண்ணீர் சப்ளை செய்து கொண்டு இருந்தார்....இந்த தடையால் ...வண்டியின் வேகம் சற்று குறைய...மாமா...கண் சிவந்தார்....கொஞ்சம் நஞ்சம் வயிற்றில் இருந்ததும் காலி ஆனதினால்..வழியில் ஒரு சின்ன கிராமத்தின் டீக் கடையில் வண்டி நின்றது....அங்கே டீ எஸ்டேட் காரர்களின் சின்ன டீ ஸ்டால்...பின் சீட்காரர்கள்...இறங்கி விட்டார்கள்...மீண்டும் ஒரு அரை மணி நேரம் தாமதம்...மாமா எங்களை சபிக்க ஆரம்பித்தார்..எப்படியோ இன்னிக்கு சாப்பாடு கிடைப்பது கஷ்டம்...தான்...பயமுறுத்தல்...மேற்குத் தொடர்ச்சி மழையின் உச்சியில் வந்து தங்கிய மேகக் கூட்டம் பொழிய ஆரம்பித்தது..கருமேகங்கள் யாரோ சொல்லி வைத்தது போல ஊற்ற ஆரம்பித்தன.அந்த சிலீர் காற்று வயிறறுப் பிரட்டலை சரி செய்தது.சரியாக இரண்டு மணி அளவில் ஹொர நாடு.மாமா சாமி தரிசனத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை..நேராக உணவுக்கூடம் நோக்கி விரைந்தார்...நாங்கள் மட்டும் கோவில் உள்ளே சென்றோம்..தங்க மயமாக ஜொலித்துக் கொண்டு அன்னபூர்னேஸ்வரி.....அற்புதமான தரிசனம்..உணவு கிடைக்கா விட்டால் வெளியே பார்த்துக் கொள்ளலாம்...என்று தீர்மானித்தோம்..இதற்குள் எங்கள் கூட்டத்துடன் டிரைவர் சேர்ந்து கொண்டார்..சோ... மாமா பாடு திண்டாட்டம்...அனாலும் யாரையோ பார்த்துப் பேசி உணவுக்கு ஏற்பாடு செய்து விட்டார்...ஒரு கரண்டி சாதம் ..கொஞ்சம் ரசம்..கொஞ்சம் புளித்த மோர்...(என் இப்படி ப்ரீ சாப்பாட்டுக்கு பறக்கிறார் என்று அப்புறம் தான் புரிந்தது..ஹோட்டல் பில் மிச்சம் பண்ணலாமே..)so .... நான் தீர்மானமாக சொல்லி விட்டேன் யார் எங்கே போனாலும் நான் கோவில் சாப்பாட்டுக்கு வரமாட்டேன்...அங்கிருந்து மழைச்சாரலில் நனைந்து கொண்டே பயணம் தொடர்ந்தது...shringeri நோக்கி .......
Good Travelogue. Two things I differ First it should be NRI instead of Simply Foreigner. Our people or doing more damage than the other one. Secondly We are misled that since coffee is grown here in karnataka coffee will be good. it is like thinking good tamil is spoken in Tamil Nadu.
ReplyDelete