Friday, April 23, 2010

கோடை மழை

எங்கோ விழுந்த மழைத் துளி
கிளம்பிய மண்வாசனை
பயணித்து என் நாசித் துளையுள்
தூங்கிய மூளைசெல்கள்
திடுக்கிட்டு விழித்தன.
விழிக்க மறுத்த இமைக்கதவுகள்
கட்டாயமாக திறக்கப்பட்டன
சில்லென்ற மழைக்காற்று
ஜன்னல் வழி தெரிந்து கொண்டுவிட்டது.
சிலிர்த்து விழித்த நொடியில்
பார்வை பயணித்தது வான் நோக்கி
சற்று முன்வரை நீலப்பட்டைக்
கட்டியிருந்த வானப்பெண்ணுக்கு
நிறம் அலுத்துவிட்டது போலும்
கறுத்த சாம்பல்நிற புடவை போர்த்துக் கொண்டிருந்தாள்
ஆங்கங்கே மின்னல் சரிகை வெளிச்சம் காட்டி
கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு இருந்தது
இதோ வருகிறேன்.......  வந்து விட்டேன் .........
இடி ஓசையுடன் அறிவித்துக் கொண்டே
பெரும் தூரலாய் மழை !
நனைவோமா .......கொஞ்சம்....
சிறுவயது பிள்ளைகள் போல்
மனம் ஆடியது.
பெரும்  துளிகள் சிறு துளிகள் ஆயின
மனம் சலித்தது
வருகிறேன் ........என்று ஆசை காட்டிய மழை
நின்றே விட்டது.
ஆர்பரித்து இடித்து மின்னி முழங்கிய
வானப்பெண் மீண்டும்
நீல ஆடை போர்த்துக்
முறுவல் கொண்டாள்
பூமிப் பெண்ணைப் பார்த்து....
அவளும் இன்னொரு மழை நாளுக்காகக்
காத்து இருக்கிறாள்

Friday, April 16, 2010

भगवान ने और एक पीले पत्ते को गिरा दिया
मौसा जी हमेशा के चले गए

पिछले छे महीनों में चार लोग दुनिया छोडके चलेगए
मौसाजी की मृत्यु तो उन के लिए एक प्रकार का relief  होगा.
लेकिन हमारे लिए यह नष्ट ही है

हिन्ढी में मेरी पहली कोशिश.

Monday, April 12, 2010

ஸ்ரீதரின் எழுத்துக்கள் அம்மாவின் நினைவை கிளறி விட்டு விட்டது.நாளாக நாளாக மறக்கும் என்பார்கள்.ஆனால்....எனக்கோ இன்னும் பச்சையாய் துளிர்த்துக் கொண்டு இருக்கிறது.ஒவ்வொரு நிகழ்விலும் அம்மாவின் தொடர்பு புல்லின் மணம் போல் சுவாசத்தை நிறைக்கிறது.அம்மா....உன்னை நான் ரொம்பவும் மிஸ் பண்ணுகிறேன்.

Sunday, April 11, 2010

வாசலிலே வேப்பமரம்
பூக்கும்...உதிரும்...
ஆனால்
உதிர்ந்த அம்மா நினைவுப் பூக்களைத்
தெளித்து விட்டு
மீண்டும் மீண்டும்
பூத்துக்கொண்டு இருக்கிறாள்.
வேப்பமரம் மட்டுமா ...
அம்மா வருவாளா .....
என்று காத்துக்கிடக்கிறது....?
நானும் தான்.....
அம்மாவின் வாசம் மட்டும்
அவ்வப்போது  மெல்ல மெல்ல
வருடிச் செல்லும் தென்றல் காற்றாய்
நினைவின் வெம்மையைத்
தணித்துக் கொண்டு இருக்கிறது.
நானும் கேட்கிறேன்
அம்மா வருவாயா  ?