Friday, April 23, 2010

கோடை மழை

எங்கோ விழுந்த மழைத் துளி
கிளம்பிய மண்வாசனை
பயணித்து என் நாசித் துளையுள்
தூங்கிய மூளைசெல்கள்
திடுக்கிட்டு விழித்தன.
விழிக்க மறுத்த இமைக்கதவுகள்
கட்டாயமாக திறக்கப்பட்டன
சில்லென்ற மழைக்காற்று
ஜன்னல் வழி தெரிந்து கொண்டுவிட்டது.
சிலிர்த்து விழித்த நொடியில்
பார்வை பயணித்தது வான் நோக்கி
சற்று முன்வரை நீலப்பட்டைக்
கட்டியிருந்த வானப்பெண்ணுக்கு
நிறம் அலுத்துவிட்டது போலும்
கறுத்த சாம்பல்நிற புடவை போர்த்துக் கொண்டிருந்தாள்
ஆங்கங்கே மின்னல் சரிகை வெளிச்சம் காட்டி
கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு இருந்தது
இதோ வருகிறேன்.......  வந்து விட்டேன் .........
இடி ஓசையுடன் அறிவித்துக் கொண்டே
பெரும் தூரலாய் மழை !
நனைவோமா .......கொஞ்சம்....
சிறுவயது பிள்ளைகள் போல்
மனம் ஆடியது.
பெரும்  துளிகள் சிறு துளிகள் ஆயின
மனம் சலித்தது
வருகிறேன் ........என்று ஆசை காட்டிய மழை
நின்றே விட்டது.
ஆர்பரித்து இடித்து மின்னி முழங்கிய
வானப்பெண் மீண்டும்
நீல ஆடை போர்த்துக்
முறுவல் கொண்டாள்
பூமிப் பெண்ணைப் பார்த்து....
அவளும் இன்னொரு மழை நாளுக்காகக்
காத்து இருக்கிறாள்

No comments:

Post a Comment