என்னை பாதித்த படம்
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு சோம்பலான ஞாயிற்றுக் கிழமை.இன்று கண்டிப்பாக நான்கு மணிக்கு சன் T V படம் பார்த்தே ஆக வேண்டும் என்று அடமாக உட்கார்ந்து விட்டேன் .என்ன ஸ்பெஷல் தெரியுமா ?மாயாண்டி குடும்பத்தார் படம் போட்டு இருந்தார்கள் .அந்த படத்தின் விஷேசம் என்ன தெரியுமா ? அம்மா கடைசியாய் பார்த்து விட்டு ரொம்பவும் பாராட்டி நீ கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்று மூச்சு இரைப்புக்கு நடுவில் சொன்ன படம்.நானும் பார்க்க வேண்டும் என்று ரொம்பவும் முயற்சி செய்தேன்.திருட்டு cd கொடுக்கும் பூக்கரனிடம் கூட சொல்லி வைத்து இருந்தேன்.அம்மா ஏன் ரொம்பவும் பிடித்தது என்று சொன்னார்கள் என்று படத்தைப் பார்க்கும் போது தான் புரிந்தது.ரொம்பவும் சாதரனம குடும்பக் கதை.ஆனால்....அதில் அந்த கடைசி மகனின் ....கஷ்டங்களில் அம்மா அப்பாவைப் பார்த்திருக்க வேண்டும் அதனால் தான்.
எனக்கு உடல்நிலை சரியில்லாத போது உதவிக்கு வந்திருந்த போதெல்லாம் அப்பா தான் பட்ட கஷ்டங்களை கதை போல் சொல்வார்விடியற்காலை குக்கர் சத்தத்தின் நடுவே அப்பாவின் வரலாறு .....அப்போது அவை ஏதோ அப்பா எனக்கு வாழ்க்கைப் பாடம்சொல்லிக் கொடுக்கிறார் என்று தான் நினைத்தேன்.அப்புறம் அப்பாவின் இழப்பிற்குப் பிறகு அம்மா என்னுடன் இருந்த போது அம்மாவின் நினைவு ஊர்வலக்கோவைகளும் அப்பாவின் கஷ்டங்களை வரிசை படுத்தி இருந்தன.அவை எனது ஆழ மனக் கிணற்றில் இவ்வளவு நாட்கள் தொங்கிக் கொண்டு இருந்திருக்கின்றன.
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு படம் பார்த்து அழுதேன்.மனம் ரொம்ப பாரமாக இருந்தது.அப்பா எல்லா கதையையும் சொல்லிவிட்டு போனால் போகிறார்கள் போ என்று சாவகாசமாக சொல்லுவர்.ஏன் இவ்வளவு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கோபமாக வரும்
இந்த படத்தில் ஒரு உரையாடல் வரும்
"இந்த பிறவியில் பிறந்து விட்டோம்.இந்த அப்பா இந்த அம்மா இந்த அக்கா இந்த அண்ணன் தங்கை இந்த உறவுகள் இனி அடுத்த பிறவியில் வருமா என்பது சந்தேகம்.எனவே இப்போது நம்முடன் வாழ்பவர்க்கு அன்பு சொல்லி வாழ்ந்து வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாம்."
அற்புதமான கருத்துநான் கல்லூரியில் படிக்கும் போது என்தமிழாசிரியர் ஒரு சினிமா பைத்தியம் அவரிடம் படம் எப்படி இருந்தது என்று கேட்டால் நல்ல இருந்தது.எந்த படத்திலும் நமக்குத் தேவையான எதாவது ஒரு செய்தி கிடைக்கும் என்பார்.அது நிஜம் தான்
nalla padam partha anubavam ungal katturaillum kidaithathu
ReplyDelete