மார்கழி மாதத்துக் கோலங்களும் பூசணிப்பூக்களும்
மார்கழி மாதத்து நினைவு வரிசையில் நான் முந்தி என்று ஓடி வருவது பூசணிப்பூ போட்டி தான்.பூசணிப் பூ அனேகமாக அந்த ஆக்ராகரத்தின் தொட்டியத்தா வீட்டுக் கூரையில் கிடைக்கும் அல்லது எங்கேயாவது தப்புச் செடியில் கிடைக்கும்.யார் வீட்டில் அதிகம் பூ வைப்பது என்ற போட்டியில் முதல் நாளே மொட்டுக்களாகவே பறித்து வந்து அண்டாவில் போட்டு வைப்பேன்.வாய்க்கால் ஓரம் கூட கிடைக்கும்.இப்போது சாணி பிள்ளையாரும் இல்லை பூசணி மலர்களும் இல்லை.அந்த பூசணி மலர்களை எடுத்து வரட்டி தட்ட வேண்டும் ஆனால் கிழக்குத் தெரு ஆடுகளுக்கு என் வீட்டு பூக்கள் என்றால் ஒரு தனி பிரியம் தான்.மாலையில் ஸ்கூல் விட்டு வரும் போது பூக்களும் சாணி உருண்டையும் ஏன், என் கோலமும் சிதைந்து இருக்கும் ,ஞாயிற்றுகிழமைகளில் பூ வாடும் வரை காத்திருந்து அதை தட்டி வைப்பேன்.அந்த சாணி வரட்டிகளின் சூட்டில் தான் பொங்கலன்று பால் பொங்கும்.ம்ம்ம்ம் ..........இன்று காஸ் அடுப்பில் பால் பொங்குகிறது,
இந்த தலைமுறைக்கு இந்த சம்பிரதாயங்கள் புரியவும் இல்லை.புரிந்து கொள்ளவும் முயற்சி செய்ய மாட்டேன் என்கிறார்கள்.ஏன்?நகர வாழ்கையில் இது எதுவுமே இல்லாத போது அதை ஜீரணிக்க நான் மிகவும் சிரமப் பட்டேன்.இன்றோ நானும் இந்த சோம்பேறி வாழ்க்கைக்குப் பழகி விட்டேன்.என்னுடைய நினைவுகளில் மட்டும் பால் பொங்கிக்கொண்டு இருக்கிறது.
Sunday, December 20, 2009
Saturday, December 19, 2009
அக்ரகாரத்தில் மார்கழி
இன்னுமொரு மார்கழி மலர்ந்து விட்டது.ஆனால் அந்த குளிர் இல்லை.அக்ரகாரத்தின் மார்கழி விடியல்கள் மறக்க முடியாத நினைவுக்கூட்டங்கள்.கோலம் இது மார்கழியின் ஸ்பெஷல்.அடுத்தது ஸ்ரீதர் சொன்ன அப்பாவின் மார்கழி பஜனை.அப்போது அப்பா சுருதிப்பெட்டியும் சால்வையும் துணை வரப்புறப்படும் போது அரை குறை தூக்கத்தில் புள்ளி வைத்துக்கொண்டு போராடிக்கொண்டு இருப்பேன்.எனக்கு எப்போதுமே கோலத்தில் சிறு ஆர்வம் உண்டு.ஆனாலும் புள்ளி வைத்த அம்மா என்ன கோலம் நினைத்தார்கள் என்று ஊகித்து போட்டு விடுவேன்.முடித்தவுடன் அம்மா பார்த்து விட்டு எங்கேயாவது கோணல் தெரிந்தால் உட்கார்ந்து கொண்டு புள்ளி வைத்தாயா? என்று கண்டு பிடித்து விடுவார்கள்.எபோதுமே முப்பது நாட்களும் புது கோலம் போட்டு தெருவையே அசத்தி விடுவேன்.
அப்போது மஞ்சரியில் வரும் கோலங்கள் பிரசித்தம்.அது மட்டும் இல்லை ரமாவின் shorthand நோட் (மாமா கொடுத்த பெரிய நோட்) என்னுடைய பயிற்சிக்களம் .அந்த நோட் முழுவதும் என் .கை வண்ணங்களைப் பார்க்கலாம்.அதோடு என் ஹிந்தி எக்ஸாம் நோட்ஸ் கூட இருக்கும்.அம்மாவுக்கு அந்த நோட் பொக்கிஷம்.மார்கழி பிறந்தவுடன் அந்த நோட்டுக்கு ராஜ மரியாதை தான்.கூரை வீட்டுக்கு முன் வாசல் சாணி போட்டுத் தெளித்து சும்மா அப்படியே மொசைக் போட்டது போல இருக்கும்.எதிர்வீட்டுக் கல்யாணி லக்ஷ்மி அக்கா மற்றும் பலர் அம்மாவிடம் "மாமி என்ன கோலம் போடப்போகிறீர்கள் ?"என்று கேட்டு விட்டுத் தான் போடுவார்கள்.அதே போல் யார் வீட்டு வாசலில் புதிய கோலம் இருந்தாலும் புள்ளி எண்ணிக்கொண்டு வந்து அடுத்த நாள் போட்டு விடுவேன்.இப்போது கூட அப்படித்தான் இங்கே கோலத்துக்கு என் நாத்தனார் போட்டி.நான்பூக்களும் வன்னதுப்பூசிகளும் தாமரையும் மலரும் கோலங்கள் போட்டால் "என்ன அதிசயம்?வரைந்து விட்டு புள்ளி வைத்தாயா?"என்று தான் கேட்பார்.ஒரு சிறு வருத்தம் எனக்கு உண்டு.அந்த சின்ன கிராமத்துத் தெருக்களில் என் கோலத்துக்கு கிடைத்த அங்கீகாரம் இங்கே எனக்கு கிடைத்தது இல்லை.இருந்தாலும் விடுவதில்லை என்று இந்த வருடமும் ஆரம்பித்து விட்டேன்

Monday, December 14, 2009
என் கூரை வீட்டுத் தோட்டம்
கூரை வீடு என். நினைவுப்பெட்டகத்தின் முதல் பொக்கிஷம்.அந்தச் சின்ன வீட்டின் பின்னால் எவ்வளவு பெரியத் தோட்டம்.அதில் இல்லாத செடிகளே இல்லை என்னும் படி பயிர் செய்யப்பட்டு இருந்தது.இதில் விசேஷம் என்ன தெரியுமா? வீட்டில் தண்ணீர் வசதி கிடையாது.வாய்க்காலில் இருந்து தான் கொண்டு வந்து ஊற்ற வேண்டும் .ஆனாலும் சண்டைபோட்டுக்கொண்டு ஆளுக்கு இவ்வளவு குடம் என்று ஊற்றுவோம்.டிசெம்பர் பூக்களின் நிறமாலை இன்னும் கண்ணில் ஊர்வலம் போகிறது.அந்தக்குளிரில் அந்த அவசரத்தில் பூக்களைப் பறித்து மாலை கட்டி மார்கழிமாதம் வைகுண்ட ஏகாதசி அன்று வீதிஉலா வரும் பெருமாளின் மார்பில் மெல்ல அசையும் பூமாலையின் அழகு படமாய்என் நினைவு ஊஞ்சலின் ஆட்டம் போடுகிறது.பூக்கட்ட சலிப்பே வந்தது இல்லை.ஆனால் இப்போது செடியில் இருந்து பறிக்கவே சலிப்பாக இருக்கிறது.நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாய் மனிதர் முகம் பார்க்கப்பிடிக்காத மனிதக்கூட்டம் நிறைந்த உலகம்.சிறுவயதின் கிராமவாழ்க்கை அவ்வப்போது நினைவுச் சிதறல்களை அனுப்பி மனிதர்கள் மேல் பாசம் அன்பு கொள்ள வைக்கிறது.

Sunday, December 13, 2009
கோமள விலாசில் என் நண்பர்கள்
கோமளவிலாஸ் ஸ்ரீதர் சொன்னது போல் மாளிகை தான் .அது வரை ஏதோ வீட்டுக்கு கதவு எண் கொடுத்து முகவரி எழுதிக் கொண்டு இருந்த எனக்கு கல்லூரி நாட்களில் வீட்டுக்கும் பெயர் உண்டு என்ற செய்தியே இனிப்பாக இருந்தது.அதுவும் என் தோழிகளின் வீடுகளுக்கு அப்படி எதுவும் பெயர் இல்லாத போது எனக்குச் சற்று கர்வம் கூட வந்தது.என் மனதின் ஆழத்தில் அப்போதே கனவுக் கோட்டை கட்டிவிட்டேன் எதிர் காலத்தில்வீடு கட்டினால் அதற்குப் பெயர் வைக்கவேண்டும் என்று.அதுவும் நடந்தது சற்றுப் போராடிய பின்னால்.
சரி விஷயத்திற்கு வருவோம்.வெள்ளைப்பூனை என்னை ரொம்பவும் பாதித்த ஒரு தோழன்.பூனைக்குப் பால் பிடிக்கும் அது பாத்திரத்தை உருட்டியாவது குடித்துவிடும் என்ற என் நம்பிக்கையை உடைத்த தோழமையை என் வெள்ளைப்பூனை எனக்கு உணர்த்தியது.சமையல் அறைக் கதவு திறந்து இருந்தாலும் அவன் ஒரு நாளும் பாலை திருடிக் குடித்தது இல்லை.அவனுக்கும் என் மேல் ஒரு வித அன்பு இருந்தது.அதனால் தான் என்னைக் கொத்த வந்த பாம்புக்குட்டியை பாய்ந்து கடித்து குதறிவிட்டது.
அது ஒரு வெள்ளிக்கிழமை .ஸ்கூலில் இருந்து அப்போது தான் திரும்பி இருந்தேன். அம்மா கொடுத்த காப்பி மற்றும் என் transister சகிதமாக காலை நீட்டிச் சுவரில் சாய்ந்தபோது எங்கிருந்தோ வந்து என் மேல் பாய்ந்து விட்டது திடுக்கிட்ட நான் நிலைதடுமாறி காப்பி டம்ப்லரைக் கீழே போட்டுவிட்டு என்னடா ?என்று அதட்டும் போது அவன் வாயில் ஒரு பாம்புக்குட்டி சின்னதாக படம் எடுத்துக்கொண்டு இருந்தது.அதை அப்படியே பின்னால் இருந்த திண்ணைக்குக் கூண்டு போய் சுமார் இரண்டு மணி நேரம் அதை தட்டித்தட்டி கொலை செய்து விட்டது.அக்ரகாரமே திரண்டு வந்து அதை வேடிக்கை பார்த்தது. இதில் highllight என்ன தெரியுமா ? பாம்புக்குட்டி அசைய முடியாதபடி காயப்பட்டு விட்டது என்று தெரிந்தவுடன் என் மேல் வந்து உரசிக்கொண்டு ஒரு வீரப்பார்வை பார்த்தான் பாருங்கள்."எப்படி என் வீரம்.உன்னால் முடியுமா?" என்று கேட்பது போல் இருந்தது. அதற்குப்பின் வெள்ளைப்பூனைக்கு ராஜ மரியாதையை தான்.காவேரிப்பாட்டி கூட . ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

Wednesday, December 9, 2009
naanum vellai poonaiyum
நானும் வெள்ளைப்பூனையும்
கோமலவிலாசில் என் தனிமையை போக்கவந்த என் தோழன் என் குட்டி வெள்ளைப்பூனை.சின்ன வெள்ளை ரோஜாவைப்போல அந்த மாளிகையில் நுழைந்தான் அந்த வெள்ளைகுண்டன்.ஆமாம் அவனுக்கு நான் வைத்த செல்லப்பெயர் அது தான்.பிறந்துபத்து நாட்களே . ஆன பூனைக்குட்டியை சுப்பிரமணியன் பரிசாகக்கொடுத்தான்.புது வரவை நான் அம்மா ஸ்ரீதர் எல்லோரும் ஆவலுடன் வரவேற்றோம். அப்பாவுக்கு மட்டும் பிடிக்கவில்லை.ஆனால் எங்களை வளர்க்கவேண்டாம் என்று சொல்லவில்லை.பால் குடிக்கதேரியாத அந்த குட்டிக்கு இங்க பில்லேரில் பால் கொடுத்து வளர்த்தேன்.ராஜா மரியாதையை தான்.சதாசர்வநேரமும் என் பின்னாலே சுற்றிக்கொண்டு இருந்தான்.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக குண்டன் வளர்ந்தான்.எப்போதும் என் உடன் இருக்கும் அந்தக்குட்டிக்கு அப்பாவின் காலடி ஓசை மட்டும் ரொம்ப தெளிவாக தெரிந்து விடும்.அப்பா வந்தால் போதும் தலைதெறிக்க ஓடி ஸ்ரீதரின் மடியில் தஞ்சம் புகுந்துவிடும்.ஆனால் அதே குண்டன் பாம்பிடம் இருந்து என்னைக்காப்பற்றியவுடன் அப்பாவுக்கும் அவனைப் பிடித்துவிட்டது..ஆனாலும் குண்டன் அப்பாவைப் பார்த்ததும் ஓடுவதை நிறுத்தவில்லை.
வீடு மாறிய போது அவனை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டோம்.அவனுக்கு அம்மாவின் அடைரொம்பப் பிடிக்கும்.பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவான். நான் வெளியே கிளம்பும் போது புடவை மாற்றினால் புடவை கட்டவே விடமாட்டான்.நாங்கள் சினிமாவுக்குப் போனால் தொட்டிமுற்றத்தின் அருகில் உள்ள சின்னத் தொட்டிக்குள் சிறைப் படுத்திவிட்டுத்தான் போவோம்.ஆறு வருடங்கள் என் உயிர்த் தோழனாக என்னுடன் வாழ்ந்தான் என் வெள்ளை குண்டன்.இன்றும் என் வீட்டில் பூனைக்கூட்டம் உண்டு.என் வெள்ளை குண்டனைப் போல் ஒன்று கூட இல்லை.குண்டா இ மிஸ் யு சோ மச் .

Sunday, December 6, 2009
naanum en amaanushyaththoliyum
அந்த அமானுஷ்ய தோழி நான் தனியாக இருக்கும் போது தான் வருவாள்.அம்மாவிடம் முதலில் சொன்னபோது நம்பவில்லை. நானே அவளை எப்படி உணர்ந்தேன் தெரியுமா? அது வரை சின்ன சின்ன வீடுகளில் இருந்து விட்டு ஒரு பெரிய வீடு , மாளிகை என்று சொல்லலாமா ? எங்கே சுவாமி படம் வைப்பது என்ற சிறு குழப்பத்துக்கு பிறகு சமையல் அறையில் இருந்த மேடை சுவாமி வைக்கும் மேடை ஆனது, அம்மா படம் எல்லாம் அடுக்கிய பிறகு விளக்கு ஏற்றசொன்னார்கள் . நானும் ஒவ்வொரு தடவை தீப்பெட்டியை உரசும் போதும் யாரோ ஊதி அணைப்பதுபோல தீக்குச்சி அணைந்து விடும் அதற்கும் அம்மாவிடம் நன்றாக திட்டு வாங்கினேன். இது தொடர்ந்த போது அப்பா உதவிக்கு வந்தார்கள் .என்னஆச்சரியம் ?ஒரே உரசலில் தீக்குச்சி பற்றிக்கொண்டது . அம்மா ஒரேயடியாக திட்டினார்கள்.ஆனால் அடுத்து வந்த நாட்களில் என்னுடனே நடந்து என் தனிமையை போக்கினாள்.எனக்கு நன்றாக தெரிந்தது யாரோ என்னுடன் இருப்பது.ஆனால் எனக்கு பயம் என்பதே வரவில்லை.தனியாக தூங்கும் போது என் மேல் அல்லது பக்கத்தில் உட்கார்ந்து கொள்வாள்.அம்மாவுக்கே இது நடந்த போது தான் அம்மா என்னை நம்பினார்கள்.அதன்பிறகு ஒரு சாமியாடி சொன்னான்.நம்ப மாட்டீர்கள்.விளக்கு ஏற்றி ஒரு குறிப்பிட்ட இடத்தில வைத்தால்விளக்கின் தீபக்கொழுந்து தானாகவே சுற்றும்.அதன் பிறகு அந்த தோழியின் ஓட்டமும் நடையும் நின்று விட்டது.அந்நாட்கள் என் நினைவுகளில் இன்னும் பசுமையாக உணர்வு சிலிர்ப்புடன் இருந்துகொண்டுதான் இருக்கிறது.என் மகள் இந்த நிகழ்ச்சியைச் சொல்லும் போது ஒரு பயத்துடன் தான் கேட்பாள்.அப்புறம் எங்கேயாவது இந்த அமானுஷ்யங்களைப் பற்றிப் பேச்சுவரும் போது உன் friend என்று சொல்வாள்.. நானும் அவளைத் தோழியாய் ஏற்றுக்கொண்டுவிட்டேன்.என் நினைவை விட்டு அகலாத சிலிர்ப்பான அனுபவங்கள்.
naan komalavilas matrum en tholarkal
வேலூரின் நினைவுப்பெட்டகத்தின் இன்னொரு பொக்கிஷம் கோமளவிலாஸ் .அது இன்னும் பசுமை மாறாமல் எப்போதும் நினைவுச்சிதறல்களாக ஓடி ஓடி வரக்கூடிய நினைவுகள்.அற்புதமான அனுபவக்கூட்ட்ங்கள். கோமளவிலாஸ் சிறு வயதில் என் கனவு மாளிகை. காவிரிக்கு போகும் போதெல்லாம் ஒரு சிறு ஆசையுடன் ஏக்கப்பார்வை பார்த்துவிட்டு போவேன்.என்ன அதிசயம் அந்த அதே கோமலவிலாசில் நாங்கள் குடி இருந்தோம் .அப்போது என் தோழர்கள் யார் தெரியுமா? மூன்று பேர்.அந்த வீட்டில் வாழ்ந்து வந்த கருநாகபபாம்பு, அடிக்கடி எனக்கு மட்டும் உத்தரத்தில்ஊஞ்சலாடி தரிசனம் தரும்,இன்னொருவர் என் செல்ல வெள்ளைப்பூனை .மூன்றாவது ஆள் யார் தெரியுமா ? கண்ணுக்குத்தெரியாத அமானுஷ்யமான ஒரு ஆள். ஆம் எல்லோரும் பயப்படும் ஆவி.என்ன நம்பமுடியவில்லையா. உண்மை தான் என்னோடு விளையாடிய அமானுஷ்ய தோழி.தனியாக இருக்கும் போது தான் துணை இருப்பாள் (இருக்கும் என்று சொல்லலமா)
Sunday, November 29, 2009
ammavin veeram
அம்மாவின் வீரம்
அது ஒரு வழக்கமான கோடை காலம். பகல் முழுவதும் சுட்டேரிதே வெயிலின் தாக்கம் லேசாக குறைந்த முன்னிரவு.பஹளில் அடித்த அனலின் வெக்கை குறைய இயற்கையே கொஞ்சம் முயற்சி எடுத்ததினால் மேலை சூரியன் மறையும் முன்னே சுழன்று வீசிய காற்று வழக்கம் போல மின்சாரத்தை எடுத்துக்கொண்டு போய் இருந்தது. அதை பற்றிய கவலை இல்லாமல் ஆக்ராஹாரத்தின் எல்லா வீடுகச்ளின் முன்பும் கயிற்றுக்கட்டில்கள்வந்து விட்டன. வைகளில் தண்ணீர் குறைந்து விட்டதால் லேசான மீன்வாசம் வீச ஆரம்பித்து இருந்தது.கூரைவீடின் திண்ணைக்கு அருகில் மெல்ல மெல்ல ஊர்ந்து வந்த ஒரு பெரிய நட்டுவாக்கிளி எங்கள் கண்களில் பட்டு விட்டது .விடுவோமா ? அன்று பாவம் அதன் ஆயுள் முடியும் என்று எமதர்மராஜன் தீர்மானித்து விட்டன போல.கல் குச்சி விளக்குமார் எல்லாம் சேர்ந்து தாக்கியதில் அந்த ஜீவன் உயிரை விட்டது வீர கதைகள் பேசிய படியே அம்மா சின்ன சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் திண்ணையில் கையில் சாதம் பிசைந்து போட்டார்கள் கூடவே இரண்டு கவளம் அதிகமாக உள்ளே போனது. அப்போது பெரியப்பா வீட்டில் இருந்து திருடன் திருடன் என்று அலறல். அவ்வளவு தான் தெருவே கூடி விட்டது எலோரும் (ஆண்கள் மட்டும் ) உள்ளே போனார்கள்.இங்கும் அங்கும் தேடி விட்டு யாரும் இல்லை என்று வந்து விட்டார்கள். ஆளாளுக்கு அட்வைஸ் வேறே .பாத்து நிமிடங்களில் துரு மீண்டும் பழைய நிலைமைக்கு வந்தது.அம்மாவுக்கு மட்டும் மனசு கேட்கவில்லை .பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு அண்ணா வீட்டுக்கு போனார்கள். எப்போதும் போல் நானும் ஒட்டிக்கொண்டேன்.பெரியப்பா திண்ணைக்கு குறுக்கே கட்டிலை போட்டுக்கொண்டு எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார் நானும் அம்மாவும் கட்டிலுக்கு அடியில் குனிந்து உள்ளே போனோம். அண்ணி சமையல் ரூமில் இருந்தார்கள். அம்மாவைபார்த்ததும் யாரோ குதித்தார்கள். என்று சொன்னதும் அம்மா ஒரு மடிகோல்எடுத்துக்கொண்டு பின்புறமாக போனார்கள்.அப்போது பின்கதவின் பக்கத்தில் நல்லா மல்லிகைப்பூவின் வாசம்.அண்ணா வீட்டில் அப்போது தான் ஒரு தண்ணீர் தொட்டி கட்டியிருந்தார்கள். அம்மா தொட்டியின் அடியில் குனிந்து பார்த்தர்கள்.அண்ணா கைளில் ஒரு லாந்தர் மினுக்கிக்கொண்டு இருந்தது திட்டியின் அதில் ஒரு பெரிய்ய பாம்பு வட்டமாக மண்டலம் போட்டுக்கொண்டு படுத்து இருந்தது. நான் மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டேன். அம்மா சத்தம் போடாமல் மெல்ல அண்ணா விடம் சொன்னார்கள்"டேய் பெரிய பாம்பு போய் பசங்களை வரச்சொல்..அண்ணா வெளியே போய் சொன்னதும் இரண்டு மூன்று பேர் சந்தானம் கோபுமட்டும் வந்தர்கள். சந்தானம் குத்துக்கோல் வைத்திருந்தான் அம்மா அவனிடம் "நான் இந்தபக்கம் குத்துகிறேன் நீ அந்தப்பக்கம் தலையில் குத்திவிடு " எண்டு சொல்லி பாம்பைகுத்தினார்கள். அடேயப்பா எவ்வளவு பெரிய பாம்பு மெல்ல பின்பக்கமாக ஊர்ந்தது சந்தானம் குத்தினான் தலையில் இல்லை முதுகில் அவ்வளவு உஸ் என்ற சத்தத்துடன் படம் விரித்து சீறியது அந்த நல்லா பாம்பு .'ஐயோ நல்லா பாம்பு " என்றபடியே குதுக்கொலை விட்டு விட்டான்.அவனை விட சிரியவனான் கோபு அதிபிடிதுக்கொள்ள அந்த பாம்பு வேறு வழியில்லாம. ஜலதாரையை நோக்கி நகர்ந்தது. அன்று அதற்கும் இறுதிநாள் போல. நாங்கள் எங்கள் குயில் வைத்திருந்த சின்ன சின்ன குச்சிகளால் அதை விடாமல் அடித்தோம் பாவம் செத்துப்போய்விட்டது இத்தனைகலவரத்திலும் எங்களுக்கு வெளிச்சம் தந்தது அண்ணா கையில் இருந்த அந்த சீனா விளக்கு தான் ஒரு வழியாக அந்த பாம்பை வெளியே கொண்டு வந்து போட்டோம்.அம்மாடியோவ் எவ்வளவுபெரிய படம்
ஒருவழியாக பாம்பு அடித்தாயிற்று அதை எரிக்க வேண்டுமே பக்கத்தில் இருந்த மூங்கில் பட்டிக்கு கொண்டு போய் அதற்கு என்னெமோ செய்து தீ மூட்டினார்கள் அப்போது பட்டோளிவீசிக்கொண்டு இருந்த நிலா மறைந்து ஒரு மணி நேரம் சரியான மழை.ஆச்சரியம் என்னவன்றால் மழை நின்றவுடன் போய் பார்த்தால் பாம்பு அப்படியே இருந்தது. அப்புறம் தான் எல்லோரும் விதம்விதமாய் கதை சொல்ல ஆரம்பித்தார்கள்.சோ ஆக்ராஹாரத்து வீரர்கள் இரவு முழுவதும் பாம்புக்கு காவல் . ஆனால் அம்மாவின் வீரம் யாராலும் பேசப்படவில்லை பாம்பு ஒரு பெண் அடிக்கலாமா என்று குற்றம் பேசப்பட்டது எனக்கு கோபம் வந்து எதிர்த்து பேசினேன். ஆன்னாலும் அன்று அம்மாவின் வீரம் அங்கீகரிக்கப்படவில்லை அண்ணி மட்டும் வந்து அம்மாவிடம் கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள்.அண்ணி அப்போது கர்பிணிஎன்னால் அம்மாவின் வீரச்செயல் மறக்கமுடியாதது புலியை முறம் கொண்டு விரட்டினால் தமிழ் பெண் என்று இலக்கியம் பேசலாம் ஏன் அம்மா மடிகொலால் பாம்பை அடித்தது பெரும் வீரச்செயல் தான்

Subscribe to:
Posts (Atom)