Sunday, December 6, 2009

naanum en amaanushyaththoliyum

அந்த அமானுஷ்ய தோழி நான் தனியாக இருக்கும் போது தான் வருவாள்.அம்மாவிடம் முதலில் சொன்னபோது நம்பவில்லை. நானே அவளை எப்படி உணர்ந்தேன் தெரியுமா? அது வரை சின்ன சின்ன வீடுகளில் இருந்து விட்டு ஒரு பெரிய வீடு , மாளிகை என்று சொல்லலாமா ? எங்கே சுவாமி படம் வைப்பது என்ற சிறு குழப்பத்துக்கு பிறகு சமையல் அறையில் இருந்த மேடை சுவாமி வைக்கும் மேடை ஆனது, அம்மா படம் எல்லாம் அடுக்கிய பிறகு விளக்கு ஏற்றசொன்னார்கள் . நானும் ஒவ்வொரு தடவை தீப்பெட்டியை உரசும் போதும் யாரோ ஊதி அணைப்பதுபோல தீக்குச்சி அணைந்து விடும் அதற்கும் அம்மாவிடம் நன்றாக திட்டு வாங்கினேன். இது தொடர்ந்த போது அப்பா உதவிக்கு வந்தார்கள் .என்னஆச்சரியம் ?ஒரே உரசலில் தீக்குச்சி பற்றிக்கொண்டது . அம்மா ஒரேயடியாக திட்டினார்கள்.ஆனால் அடுத்து வந்த நாட்களில் என்னுடனே நடந்து என் தனிமையை போக்கினாள்.எனக்கு நன்றாக தெரிந்தது யாரோ என்னுடன் இருப்பது.ஆனால் எனக்கு பயம் என்பதே வரவில்லை.தனியாக தூங்கும் போது என் மேல் அல்லது பக்கத்தில் உட்கார்ந்து கொள்வாள்.அம்மாவுக்கே இது நடந்த போது தான் அம்மா என்னை நம்பினார்கள்.அதன்பிறகு ஒரு சாமியாடி சொன்னான்.நம்ப மாட்டீர்கள்.விளக்கு ஏற்றி ஒரு குறிப்பிட்ட இடத்தில வைத்தால்விளக்கின் தீபக்கொழுந்து தானாகவே சுற்றும்.அதன் பிறகு அந்த தோழியின் ஓட்டமும் நடையும் நின்று விட்டது.அந்நாட்கள் என் நினைவுகளில் இன்னும் பசுமையாக உணர்வு சிலிர்ப்புடன் இருந்துகொண்டுதான் இருக்கிறது.என் மகள் இந்த நிகழ்ச்சியைச் சொல்லும் போது ஒரு பயத்துடன் தான் கேட்பாள்.அப்புறம் எங்கேயாவது இந்த அமானுஷ்யங்களைப் பற்றிப் பேச்சுவரும் போது உன் friend என்று சொல்வாள்.. நானும் அவளைத் தோழியாய் ஏற்றுக்கொண்டுவிட்டேன்.என் நினைவை விட்டு அகலாத சிலிர்ப்பான அனுபவங்கள்.

1 comment:

  1. கோமள விலாஸ்.... பட்டுமாமியின் வீடு. சத்திரத்திற்கு எதிர்த்தாற்போல் நீளத்திலும் அகலத்திலும் விரிந்து நிற்கும் (நின்ற) மாளிகை( வீடு என்பது சரியல்ல..) .
    இந்த அமானுஷ்ய அனுபவம் இந்த வீட்டு மடியில் படுத்து உறங்கும்போது எனக்கும் ஏற்பட்டுள்ளது. உறக்கத்தில் யாரோ மேலே அமர்ந்து அமுக்குவதுபோல் இருக்கும். விழிப்பு ஏற்பட்டு சத்தம் போட நினைக்குக்கும் போது சத்தம் தொண்டையை விட்டு எழும்பாது. சிறிது நேரத்தில் தானாகவே இது சரியாகிவிடும். கோமளவிலாஸ் வாழ்க்கை நமது இளமைப்பருவ வாழ்க்கையில் பெரும்பகுதியை ஆட்கொண்டது. நிறைய நண்பர்களும் இங்குதான் கிடைத்தார்கள். கோமளவிலாஸ் வாழ்க்கை பற்றி நிறைய எழுத வேண்டும். எனது வலைப்பூவில் வெகு விரைவில் இது பூக்கும்.

    ஸ்ரீதர்

    ReplyDelete