Sunday, December 13, 2009

கோமள விலாசில் என் நண்பர்கள்
கோமளவிலாஸ் ஸ்ரீதர் சொன்னது போல் மாளிகை தான் .அது வரை ஏதோ வீட்டுக்கு கதவு எண் கொடுத்து முகவரி எழுதிக் கொண்டு இருந்த எனக்கு கல்லூரி நாட்களில் வீட்டுக்கும் பெயர் உண்டு என்ற செய்தியே இனிப்பாக இருந்தது.அதுவும் என்  தோழிகளின் வீடுகளுக்கு அப்படி எதுவும் பெயர் இல்லாத போது எனக்குச் சற்று கர்வம் கூட வந்தது.என் மனதின் ஆழத்தில் அப்போதே கனவுக் கோட்டை கட்டிவிட்டேன் எதிர் காலத்தில்வீடு கட்டினால் அதற்குப் பெயர் வைக்கவேண்டும் என்று.அதுவும் நடந்தது சற்றுப் போராடிய பின்னால்.
    சரி விஷயத்திற்கு வருவோம்.வெள்ளைப்பூனை என்னை ரொம்பவும் பாதித்த ஒரு தோழன்.பூனைக்குப் பால் பிடிக்கும் அது பாத்திரத்தை உருட்டியாவது குடித்துவிடும் என்ற என் நம்பிக்கையை உடைத்த தோழமையை என் வெள்ளைப்பூனை எனக்கு உணர்த்தியது.சமையல் அறைக் கதவு திறந்து இருந்தாலும் அவன் ஒரு நாளும் பாலை திருடிக் குடித்தது இல்லை.அவனுக்கும் என் மேல் ஒரு வித அன்பு இருந்தது.அதனால் தான் என்னைக்  கொத்த வந்த பாம்புக்குட்டியை பாய்ந்து கடித்து குதறிவிட்டது.
அது ஒரு வெள்ளிக்கிழமை .ஸ்கூலில் இருந்து அப்போது தான் திரும்பி இருந்தேன். அம்மா கொடுத்த காப்பி மற்றும் என் transister சகிதமாக காலை நீட்டிச் சுவரில் சாய்ந்தபோது எங்கிருந்தோ வந்து என் மேல் பாய்ந்து விட்டது திடுக்கிட்ட நான் நிலைதடுமாறி காப்பி டம்ப்லரைக் கீழே போட்டுவிட்டு என்னடா ?என்று அதட்டும் போது அவன் வாயில் ஒரு பாம்புக்குட்டி சின்னதாக படம் எடுத்துக்கொண்டு இருந்தது.அதை அப்படியே பின்னால் இருந்த திண்ணைக்குக் கூண்டு போய் சுமார் இரண்டு மணி நேரம் அதை தட்டித்தட்டி கொலை செய்து விட்டது.அக்ரகாரமே திரண்டு வந்து அதை வேடிக்கை பார்த்தது. இதில் highllight  என்ன தெரியுமா ? பாம்புக்குட்டி அசைய முடியாதபடி காயப்பட்டு விட்டது என்று தெரிந்தவுடன் என் மேல் வந்து உரசிக்கொண்டு ஒரு வீரப்பார்வை பார்த்தான் பாருங்கள்."எப்படி என் வீரம்.உன்னால் முடியுமா?" என்று கேட்பது போல் இருந்தது. அதற்குப்பின் வெள்ளைப்பூனைக்கு ராஜ மரியாதையை தான்.காவேரிப்பாட்டி   கூட   . ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

No comments:

Post a Comment