Wednesday, December 9, 2009

naanum vellai poonaiyum

நானும் வெள்ளைப்பூனையும்
கோமலவிலாசில் என் தனிமையை போக்கவந்த என் தோழன் என் குட்டி வெள்ளைப்பூனை.சின்ன வெள்ளை ரோஜாவைப்போல அந்த மாளிகையில் நுழைந்தான் அந்த வெள்ளைகுண்டன்.ஆமாம் அவனுக்கு நான் வைத்த செல்லப்பெயர் அது தான்.பிறந்துபத்து நாட்களே . ஆன பூனைக்குட்டியை சுப்பிரமணியன் பரிசாகக்கொடுத்தான்.புது வரவை நான் அம்மா ஸ்ரீதர் எல்லோரும் ஆவலுடன் வரவேற்றோம். அப்பாவுக்கு மட்டும் பிடிக்கவில்லை.ஆனால் எங்களை வளர்க்கவேண்டாம் என்று சொல்லவில்லை.பால் குடிக்கதேரியாத அந்த குட்டிக்கு இங்க பில்லேரில் பால் கொடுத்து வளர்த்தேன்.ராஜா மரியாதையை தான்.சதாசர்வநேரமும் என் பின்னாலே சுற்றிக்கொண்டு இருந்தான்.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக குண்டன் வளர்ந்தான்.எப்போதும் என் உடன் இருக்கும் அந்தக்குட்டிக்கு அப்பாவின் காலடி ஓசை மட்டும் ரொம்ப தெளிவாக தெரிந்து விடும்.அப்பா வந்தால் போதும் தலைதெறிக்க ஓடி ஸ்ரீதரின் மடியில் தஞ்சம் புகுந்துவிடும்.ஆனால் அதே குண்டன் பாம்பிடம் இருந்து என்னைக்காப்பற்றியவுடன் அப்பாவுக்கும் அவனைப் பிடித்துவிட்டது..ஆனாலும் குண்டன் அப்பாவைப் பார்த்ததும் ஓடுவதை நிறுத்தவில்லை.
வீடு மாறிய போது அவனை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டோம்.அவனுக்கு அம்மாவின் அடைரொம்பப் பிடிக்கும்.பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவான். நான் வெளியே கிளம்பும் போது புடவை மாற்றினால் புடவை கட்டவே விடமாட்டான்.நாங்கள் சினிமாவுக்குப் போனால் தொட்டிமுற்றத்தின் அருகில் உள்ள சின்னத் தொட்டிக்குள் சிறைப் படுத்திவிட்டுத்தான் போவோம்.ஆறு வருடங்கள் என் உயிர்த் தோழனாக என்னுடன் வாழ்ந்தான் என் வெள்ளை குண்டன்.இன்றும் என் வீட்டில் பூனைக்கூட்டம் உண்டு.என் வெள்ளை குண்டனைப் போல் ஒன்று கூட இல்லை.குண்டா இ மிஸ் யு சோ மச் .

No comments:

Post a Comment