Wednesday, January 6, 2010

இன்னொரு பொங்கலின் வருகை
இதோ ....வந்து கொண்டே இருக்கிறது  இன்னொரு தை மாதம்.....ஆனால் என்ன கோலம் போடப்போகிறாய் என்று விசாரிக்க அம்மா இல்லை .கலர் கோலப்பொடி வாங்கி விட்டாயா?என்று கேட்கவும் யாரும் இல்லை.ஒரு சோம்பலான சோகமான பொங்கல் வந்து கொண்டே இருக்கிறது.ஆனாலும் நான் மனதளவில் என்னை தயார் படுத்திக் கொண்டு விட்டேன்.ஏதோ இனிப்பில்லாத பொங்கலை வரவேற்கத் தான் போகிறேன்.
தெருவெங்கும்  கோலம் போடும் ஆர்வம் இல்லை.இந்த தடவை தினமலர் கோலப்போட்டிக்குயாரும் வரவும் இல்லை.
எனக்கும் புதிய கற்பனைகள் வறண்டு போன மாதிரி இருக்கிறது.உடம்பு வேறு சரியில்லை..மார்கழிக் கோலமே மிஸ்ஸிங்.
ரமா அன்று சொன்னது போல இத்தனை வயதுக்குப் பிறகும் பெற்றோரின் பிரிவு இப்படி வாட்டும் போது சிறு வயதில் இழப்பவர்கள் எவ்வளவு துரதிருஷ்டசாலிகள்.
அதனால் தான் "தந்தை தாய் இருந்தால் " என்ற பாட்டைக்கேட்கும் போதெல்லாம் துக்கம் அடைக்கிறது.
சரி வரும் பொங்கலை ஏன் வரவேற்காமல் இருக்க வேண்டும்.
தைமகளே வா.....
நன்மைகள் ,மகிழ்ச்சி
நிறைக்க வா.......
எல்லோரும் மகிழ்ந்து
கொண்டாட வா  மகளே வா.....
சந்தோஷங்கள்,வாழ்க்கையின்
அத்தியாயங்கள்.மாற்றங்கள்
மகிழ்ச்சியின் ஊற்றுக்களை
பொங்கச் செய்யத்
தை மகளே வா..........
உன் வரவு நல வரவாகட்டும்.

No comments:

Post a Comment