Wednesday, January 27, 2010

இதுவும் என்னை பாதித்த கவிதை தான்
அவன் பெயர் வெளிச்சம்
அவன் பெயர் அன்பு
அவன் பெயர் சக்தி
அவன் என் சொல்லின்
துணைவன்.......
 அவன் யார்........

அவன் ஆணையிட்டால்..
இரவும் பகலாகும்.
பகலும் இரவாகும்.
அவன் இச்சைப்படித்தான்
நட்சத்திரங்கள் கண் சிமிட்டுகின்றன.

அவன் ஏற்பாடு....
பருவ மற்றம்.
அவன் தான் ....
காற்றின் திசை மாற்றி.
அவன் நினைத்தால் போதும்
பூமிப்பெண் பச்சை பட்டு உடுப்பாள்.


அவன் தலையிட்டால்
கடல் நீர் மேகமாகும்.
மேகமும் மழை நீராகும்.

உனக்குத் தெரியுமா
அவன் தீர்மானிக்கும் வரை தான்
மூச்சுக்காற்றும்
உள்ளே போய் வெளியே வரும்.
அப்போது....
நம் நாமாக இருப்போம்.
அவன் முடிவு செய்தால்
நாம் அதுவகிவிடுவோம்.
மரணம் என்பது
பின் மண்டையில் உட்கார்ந்து
எட்டிப் பார்த்தாலும்
அவன் நினைத்தால்
எதுவும் நடக்கும்
எதுவும் நம் கையில் இல்லை......

நீ செய்யும் செயல்கள்
நற்செயலாயின்.....
நீ ஆசீர்வதிக்கப் படுவாய்.
நீ மனிதனாகப்
பிறந்துவிட்டாய்.
இது நீ எப்படிப்பட்டவன்
என்பதற்கான தேர்வு.
மனிதா.......
நீ ஜெயிக்கப் போகிறாயா...?
தோற்கப் போகிறாயா...?

மனிதனே.....
கடவுள் உன்னை உனக்கு உணர்த்துவான்.
மூத்தோர்,முன்னோர்,  கடவுள்
இவர்களிடம் உனக்கு
அன்பு,மரியாதை பக்தி வேண்டும்.
"நான்" இதை விட்டுவிடு.
கடவுள் என்ற மதம்
சொல்லும் வழி
அதுவே
நீ செல்லும் வழி

खुदा   என்ற உருதுக் கவிதை என்னை மிகவும் பாதித்ததுகவிஞரின் கற்பனையும் என் மன சிதறல்களும் இணைந்துள்ளன.

1 comment:

  1. கவிதைகள் அருமை. பணி தொடரட்டும்...
    ஸ்ரீ

    ReplyDelete