Monday, December 14, 2009

என் கூரை வீட்டுத் தோட்டம்

கூரை வீடு என். நினைவுப்பெட்டகத்தின் முதல் பொக்கிஷம்.அந்தச் சின்ன வீட்டின் பின்னால் எவ்வளவு பெரியத் தோட்டம்.அதில் இல்லாத செடிகளே இல்லை என்னும் படி பயிர் செய்யப்பட்டு இருந்தது.இதில் விசேஷம் என்ன தெரியுமா? வீட்டில் தண்ணீர் வசதி கிடையாது.வாய்க்காலில் இருந்து தான் கொண்டு வந்து ஊற்ற வேண்டும் .ஆனாலும் சண்டைபோட்டுக்கொண்டு ஆளுக்கு இவ்வளவு குடம் என்று ஊற்றுவோம்.டிசெம்பர் பூக்களின் நிறமாலை இன்னும் கண்ணில் ஊர்வலம் போகிறது.அந்தக்குளிரில் அந்த  அவசரத்தில் பூக்களைப் பறித்து மாலை கட்டி மார்கழிமாதம் வைகுண்ட ஏகாதசி அன்று வீதிஉலா வரும் பெருமாளின் மார்பில் மெல்ல அசையும் பூமாலையின் அழகு படமாய்என் நினைவு ஊஞ்சலின் ஆட்டம் போடுகிறது.பூக்கட்ட சலிப்பே வந்தது இல்லை.ஆனால் இப்போது செடியில் இருந்து பறிக்கவே சலிப்பாக இருக்கிறது.நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாய் மனிதர் முகம் பார்க்கப்பிடிக்காத மனிதக்கூட்டம் நிறைந்த உலகம்.சிறுவயதின் கிராமவாழ்க்கை அவ்வப்போது நினைவுச் சிதறல்களை அனுப்பி மனிதர்கள் மேல் பாசம் அன்பு கொள்ள வைக்கிறது.

2 comments:

  1. டிசம்பர் பூக்கள் வாடாமல்லிக்கலரிலும் வெள்ளைக் கலரிலும் கூடை கூடையாய் பூத்ததும் , அதை வேண்டா வெறுப்பாகத்தான் நான் பறித்த ஞாபகம்.
    அதுவும் அந்தக் குளிருக்கு முழுவதும் பறிக்க முடியாமல் பூக்கள் பிய்ந்து போவது பாவமாக இருக்கும். கறிவேப்பிலை செடி, வெண்டைக்காய் செடி, அவரைக் கொடி நிரம்பிய தோட்டம். அத்தனைக்கும் வாய்க்களிளிருந்து முகர்ந்து கொண்டு வந்து நீர் ஊற்றியதைத்தான் மறக்க முடியுமா? அனால் இன்று மோட்டார் வைத்து, பைப்பில் வரும் தண்ணீரை ஹோஸ் மூலம் செடிகளுக்கு நீர் விட நேரம் இல்லை என்பது வேதனையான உண்மை

    ReplyDelete
  2. நீ சொல்வது சரி தான்.தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று மனம் நினைத்தாலும் நேரம் இல்லை என்ற ஒரு நொண்டிச் சாக்குச் சொல்லிக்கொண்டு தப்பிக்கத்தான் பார்க்கிறோம்.ஆனால் அந்த கூரைவீடுத் தோட்டம் ஒரு அதிசிய உலகமாகத் தான் நினைக்கத்தோன்றுகிறது.எப்படி முடிந்தது?இன்னும் ஆச்சரியங்களைத் தோற்றுவிக்கும் அந்த வாழ்க்கையை மிஸ் பண்ணும் நம் குழந்தைகள் கண்டிப்பாக வாழ்க்கையின் அற்புதமான பக்கத்தை இழந்து இருக்கிறார்கள் என்பது வருத்தமான உண்மை.கருவேப்பில்லை கடையில் வாங்கும் போது நம்வீட்டு கருவேப்பில்லை வாசத்துக்கு மனம் ஏங்குவதும் அடி மனசில் ஓரமாக கசக்கும் நினைவு.

    ReplyDelete