அப்பாவின் பிறந்தநாள்
அன்புள்ள அப்பா
நேற்று உங்கள் பிறந்த நாள்.85 வயது ஆரம்பம்.திருவாதிரைத் திருநாள் என்றால் ஆருத்ரா தரிசனமும் சுவாமி புறப்பாடும் நினைவுக்கு வருவதே இல்லை.மார்கழித் திருவாதிரை என் அப்பாவின் பிறந்த நாள்.அது மட்டும் தான் எனக்கு விசேஷம்...என்னை தனியே தவிக்க விட்டு (அப்பா எனக்கு ஒரு நல்ல friend எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஒரு தோழன் இல்லாமல் )போய் ஆண்டுகள் ஆறு கடந்தாலும்...நேற்று கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்து விட்டு வந்தேன்...அப்பா நீங்கள் எங்கு இருந்தாலும் என்னை ஆசீர்வதிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு ...
(அப்பாவுக்கு கடிதம் எழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டன ....)
உங்கள் அன்பு மகள்
கீதா
Thursday, December 23, 2010
Monday, December 20, 2010
ஸ்ருங்கேரி ...ஸ்ருங்க கிரி ......சிதைந்து.....மருவி ..ஸ்ருங்கேரி..ஆகி விட்டது.ஊருக்குள் நுழையும் போது மழை இருட்டில் சிறிது நேரம் வழி தடுமாறினோம்.டிரைவர் சுரேஷ் கொஞ்சம் எரிச்சல் பட்டார். ஒரு வழியாக ஸ்ருங்கேரி அடைந்தோம்...துங்க பத்ரா நதிக் கரையில் விடுதி கிடைத்தது...அமைதியாக நடைபழகிக் கொண்டு இருந்தாள் துங்கா நதி.விடுதியின் ஜன்னல் வழியே தரிசனம்..அவசரமாக அங்கே இருந்து தரிசனத்துக்குப் புறப்பட்டோம்.கொஞ்சம் தாமதம் ஆனதால் மாமா கோபித்துக் கொண்டார்.எனக்கும் கோபம் வந்தது..".நீங்கள் முகம் கழுவி கிளமபிவிட்டால் போதுமா? நாங்கள் பெண்கள் அப்படி புறப்பட முடியுமா? "கேட்டே விட்டேன்.மாமா பதில் பேசாமல் வெளியே போய் விட்டார்.வானம் உடைத்துக் கொண்டாற்போல் கொட்டத் தொடங்கியது..சற்று நனைந்து கொண்டே தேவஸ்தானத்தை அடைந்தோம்...(இங்கே கர்நாடகக் கோவில்களில் ஒரு ஆச்சரியம் பார்த்தேன்..இங்கே தமிழ் நாட்டில் இருந்து காணமல் போன சிட்டுக் குருவிகள் எல்லாம் அங்கே புலம் பெயர்ந்து விட்டன போலும்.எங்கு பார்த்தாலும் குருவிகள்.மனிதர்களின் ஆரவாரம் கும்பல் எதற்கும் பயப்படாமல் கூடு கடடி குலவி மகிழ்ந்து கொண்டு இருக்கின்றன.இயற்கை ஆர்வலர்கள் பயப் படத்தேவையில்லை...)இரவின் கோபம் அதிகம் ஆக ஆக மழையின் வேகமும் அதிகம் ஆகியது...கோவிலுக்குள் நுழைந்து விட்டோம்...அன்னை சாரதாவின் அற்புத தரிசனம்....இப்போது மாமாவின் கோபம் என்னை பழி வாங்கி விட்டது...எங்களை மட்டும் விட்டு விட்டு நதிக் கரையில் போய் தவளையின் பிரசவத்திற்கு குடை பிடித்த பாம்பு ...இன்னும் என்னென்னவோ ....பார்த்து விட்டு வந்து விட்டார்.மீண்டும் இலவச உணவுக்கு ஒரு முயற்சி ஆனால் அன்னை சாரதா தேவிக்கு மனம் இல்லை போலும்...கிடைக்கவில்லை.குளத்துப்பாளையம் குரூப் எங்களுடன் சேர்ந்து கொண்டது...அதே வெல்லம் போட்ட தோசை...ஏதோ வயிறு நிரம்பியது...சுவாமிஜியின் பூஜை...துங்கா நதியின் அக்கரையில்.....ஏதோ...மனம் ஈடுபடாமல்...உட்கார்ந்து விட்டு வந்தேன்..( இங்கே ஒரு விஷயம் சொல்லவேண்டும்..தலை முடியை வெட்டி விட்டுக் கொண்டு லிப்ஸ்டிக் பூசி நகசாயம் தடவி ஏதோ அந்நிய உலகத்துக்குள் இருக்கும் வெளிநாட்டு பக்தர்கள் மடிசாரும் பஞ்சகச்சமும் கட்டிக் கொண்டு வாய் பொத்திவேஷம் கட்டும் ஆஷாட பூதிதனம் நிறையவே இருந்தது..)மழையின் சாரலில் நனைந்து கொண்டே அறைக்குத் திரும்பினால் கரண்ட் போய் விட்டது...ஏதோ அலைச்சலில் உறக்கமும் விழிப்புமாக கடந்தது இரவு...விடிந்தவுடன் குளிக்காமல் எங்கள் பயணம் தொடர்ந்தது கொல்லூர் நோக்கி....
Saturday, November 20, 2010
பேலூர் பயணம்
அடுத்த நாள் என்னவோ காலையிலேயே விழிப்பு வந்து விட்டது.எங்களுடன் அறையைப் பகிர்ந்து கொண்ட கோமளா மற்றும் அம்பிகா இருவரும் மலையாளிகள்.அம்பிகா ரொம்பவும் சுறுசுறுப்பு .எழுந்தவுடன் வெந்நீர் வர ஆரம்பித்தவுடன் குளிக்கப் போய் விட்டார். நான் காயத்ரியை எழுப்பினால் கோமளா "அவளை ஏன் எழுப்புகிறீர்கள் ?பாவம் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்"என்று தடுத்து விட்டார்.நான் எழுந்து என் வேலைகளை முடித்து விட்டு காயத்ரியை எழுப்பினேன்.அதற்குள் மாமா வந்து ஆயிற்றா....நேரம் ஆச்சு....என்று விரட்ட ஆரம்பித்தார்..நிலைமை என்னவென்றால் இன்னும் பாதி பேர் குளிக்கவே இல்லை.காயத்ரி அப்போது தான் குளிக்கப் போய் இருந்தாள்.சரி என் கணவர் குளித்து விட்டால் பேக் பண்ணலாமே என்று அவர்களுடைய அறைக்குப் போனால் துண்டைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டு இருந்தார்.அவருக்கு சரியான கோபம்.இந்த மாமா குளித்தேன் என்று பேர் பண்ணி விட்டு ஓடி விட்டார் நான் இப்போது தான் குளிக்கப் போகிறேன் என்று அறைக்குள் போனார். சரி என்று நான் அவருடைய பெட்டியை பேக் செய்து விட்டு எங்கள் அறைக்கு வந்தால் அந்த விடுதியின் வாட்ச்மேன் பெட்டிகளை கீழே எடுத்துப் போக காத்திருந்தான் .எங்களை அறையை விட்டு போகும் படி விரட்டினான்.நான் சும்மா ஹிந்தியில் சத்தம் போட்டேன் இன்னும் குளிக்கவே இல்லை ...இன்னும் பத்து பதினைந்து நிமிடம் ஆகும் என்று...அவன் என்னமோ முணுமுணுத்துக் கொண்டு போய் விட்டான்..பிறகு ஒரு வழியாக கிளம்பி கீழே வந்தால்...எல்லோரும் காபி குடித்துக் கொண்டு இருந்தார்கள்.எங்களுக்கும் காபி வந்தது. காயத்ரி டீ குடிக்க லேட் ஆனது.அப்போதே வானம் சற்று மேக மூட்டமாக இருந்தது, அப்பாடா.....வண்டியில் ஏறி விட்டோம்.இப்போது டிரைவர் கொஞ்சம் பிரெண்ட் ஆகி விட்டார்.அங்கிருந்து ஹலேபீட் ..பயணம் அருகில் தான்...அரை மணியில் வந்து விட்டோம்.அருணாசலம் படத்தில் ரஜினி வந்து ஆடிய அந்த அழகிய கோவில் ......உள்ளே நுழைந்த பின் தான் அதன் பிரம்மாண்டம் புரிந்தது.மாக்கல் என்ற மென்மையான கற்களில் சிற்பியின் கற்பனை புகுந்து விளையாடி இருந்தது.இந்த கால அரசியல் வாதிகள் என்னமோ அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று பட்டியல் போடுகிறார்களே...நான் இதை செய்கிறேன் என்று சொல்லாமலே தான் பெயரை நிலை நிறுத்தி உள்ள அந்த ஹோய்ச்ள அரசனுக்கு அனந்த கோடி வணக்கங்கள்.கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகள் ..உழைப்பு ஜக்கன்னாசார்யா
என்ற சிற்பி தொடங்கியதாம்,..அவருடைய பேரன் காலத்தில் முடிந்திருக்கிறது...'கல்லிலே கலை வண்ணம் கண்டான்'...கூத்தாடலாம் போல ஒரு சந்தோஷம்...இங்கேயும் சீக்கிரம் சீக்கிரம்...அவசரப் படுத்தினார் மாமா ...என் மகள் கேமிராவை மூடவே இல்லை ...கண்கள் பெற்ற பயன் இது...கட்டாயம் ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய இடம்....அங்கே இருந்த அந்த பெரிய நந்தி ..வழக்கம் போல அங்கே தனிமை நாடி வரும் காதலர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்திருந்தார்கள்..பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத கலைச் செல்வங்கள் .....இங்கேயும் காலை உணவுக்கு ஒரு பாடாவதி ஹோட்டலுக்குக் கூட்டிக் கொண்டு போனார்.இப்போது பழகி விட்டோம் சோ..ஆட்டோ டிரைவரிடம் விசாரித்து ஒரு சுமாரான ஹோட்டலுக்குப் போனோம்.இரண்டு நாட்களுக்குப் பிறகு சற்றே வயிறு நிறைந்தது.காபி படு மோசம் எனவே நானும் டீக்கு மாறி விட்டேன்,,,,அடுத்த இலக்கு பேலூர்...இது ஹலேபீட் கோவிலை தூக்கிச் சாப்பிட்டு விடும்.விஷ்ணு வர்தனனும் அவனது மனைவி நாட்டிய ராணி சாந்தலா தேவியும் இணைந்து கலை தெய்வத்துக்கு செய்திருக்கும் ஆராதனை.உள்ளே ..ஒரு கைடு உதவியுடன் எல்லா நுணுக்கமான சிற்பங்களையும் பார்த்தோம்.தற்காலத்திய உடை வடிவங்கள் அணி மணிகள் கூந்தல் அலங்காரம் செருப்பு ..எல்லாவற்றையும் விட அந்த கல் வடிவங்களின் உடைகளில் இருந்த பூ வேலைப்பாடு...கிரேட்.அங்கே ஒரு விளக்குத் தூண் இருக்கிறது...அது ,மேடையில் முழுவதுமாக பதிக்கப் படவில்லை அதன் அடியில் ஒரு காகிதத்தை நுழைத்து எடுக்கலாமாம் மாமா இங்கேயும் விரட்டினார்..ஆனால் நாங்கள் அசைய வில்லை நின்று நிதானமாக பார்த்து விட்டு வந்தோம்.மாமாவுக்கு கோபம் ....எங்களுடன் பேச வில்லை.....என் மேல் ரொம்பவும் கோபம்....கல்லூரிக் காலத்துக்குப் பின் க்ரூப் சேர்த்துக் கொண்டு தலைமையை எதிர்த்து...கொஞ்சம் நன்றாகத்தான் இருந்தது...பின் சீட்டில் இருந்த க்ரூப் கொஞ்சம்கொஞ்சமாக எங்களுடன் சேர ..சூப்பர்....மாமாவுக்குத் தலைவலி....சரி ஜூட் ..வண்டி நேர ஹொர நாடு அன்னபூர்னேச்வரி கோவில் தான் மதியம் சாப்பாடு அங்கே தான்...கதை விட ஆரம்பித்தார்....பின் சீட் அப்போதே சாப்பாட்டுக் கனவில் மூழ்கி விட்டது.வண்டி மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் உச்சியில் பயணித்தது..சற்றே மேடு பள்ளமான வளைந்த பாதை...சரியான சாப்பாடு வேறே இல்லையா வயிறு மக்கர் பண்ண ஆரம்பித்தது...ரெடி ஸ்டார்ட் ...வாந்தி எடுக்க ஆரம்பித்தனர் பயணியர்..ஆரம்பித்து வைத்தது அம்பிகா ...தொடர்ந்தது நான்...என் கணவர் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டு எல்லோருக்கும் தண்ணீர் சப்ளை செய்து கொண்டு இருந்தார்....இந்த தடையால் ...வண்டியின் வேகம் சற்று குறைய...மாமா...கண் சிவந்தார்....கொஞ்சம் நஞ்சம் வயிற்றில் இருந்ததும் காலி ஆனதினால்..வழியில் ஒரு சின்ன கிராமத்தின் டீக் கடையில் வண்டி நின்றது....அங்கே டீ எஸ்டேட் காரர்களின் சின்ன டீ ஸ்டால்...பின் சீட்காரர்கள்...இறங்கி விட்டார்கள்...மீண்டும் ஒரு அரை மணி நேரம் தாமதம்...மாமா எங்களை சபிக்க ஆரம்பித்தார்..எப்படியோ இன்னிக்கு சாப்பாடு கிடைப்பது கஷ்டம்...தான்...பயமுறுத்தல்...மேற்குத் தொடர்ச்சி மழையின் உச்சியில் வந்து தங்கிய மேகக் கூட்டம் பொழிய ஆரம்பித்தது..கருமேகங்கள் யாரோ சொல்லி வைத்தது போல ஊற்ற ஆரம்பித்தன.அந்த சிலீர் காற்று வயிறறுப் பிரட்டலை சரி செய்தது.சரியாக இரண்டு மணி அளவில் ஹொர நாடு.மாமா சாமி தரிசனத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை..நேராக உணவுக்கூடம் நோக்கி விரைந்தார்...நாங்கள் மட்டும் கோவில் உள்ளே சென்றோம்..தங்க மயமாக ஜொலித்துக் கொண்டு அன்னபூர்னேஸ்வரி.....அற்புதமான தரிசனம்..உணவு கிடைக்கா விட்டால் வெளியே பார்த்துக் கொள்ளலாம்...என்று தீர்மானித்தோம்..இதற்குள் எங்கள் கூட்டத்துடன் டிரைவர் சேர்ந்து கொண்டார்..சோ... மாமா பாடு திண்டாட்டம்...அனாலும் யாரையோ பார்த்துப் பேசி உணவுக்கு ஏற்பாடு செய்து விட்டார்...ஒரு கரண்டி சாதம் ..கொஞ்சம் ரசம்..கொஞ்சம் புளித்த மோர்...(என் இப்படி ப்ரீ சாப்பாட்டுக்கு பறக்கிறார் என்று அப்புறம் தான் புரிந்தது..ஹோட்டல் பில் மிச்சம் பண்ணலாமே..)so .... நான் தீர்மானமாக சொல்லி விட்டேன் யார் எங்கே போனாலும் நான் கோவில் சாப்பாட்டுக்கு வரமாட்டேன்...அங்கிருந்து மழைச்சாரலில் நனைந்து கொண்டே பயணம் தொடர்ந்தது...shringeri நோக்கி .......

Sunday, November 14, 2010
மைசூர் மாளிகை இந்த முறை ரொம்பவும் ஈர்க்க வில்லை,,,,அப்போது தான் தசரா முடிந்து இருந்ததால் அதன் வாசம் இன்னும் மீதம் இருந்தது....அவசர அவசரமாக பார்த்தேன்...என்று பேர் பண்ணி விட்டு திப்புவின் மளிகை.....(முதல் தடவை பார்த்த போது அந்த திப்புவின் சமாதி...மனதில் ஆழமான சோகத்தை ஏற்படுத்தியது...மதம் தேசபக்திக்கு தடையாக இருக்க முடியாது என்பதை அழமாக உணர்த்தியது)அங்கிருந்து.சங்கமம் போனோம் காவேரி இரண்டாகப் பிரிந்து இணையும் இடம் ஸ்ரீரங்கத்தை நினைவு படுத்தியது..(நிறைய பேர் தங்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு சடங்கு செய்து கொண்டு இருந்தார்கள் ..எனக்கு அம்மாவின் நினைவு வந்து விட்டது) அங்கிருந்து மேல் கோட்டை...
மேல் கோட்டை பற்றி நிறைய படித்து இருக்கிறேன்..எனவே ஒரு ஆவலுடன் கோவிலுக்கு செல்ல விரும்பினேன்.எப்போதெல்லாம் நஞ்சன்கூட் செல்வோமோ அப்போதெல்லாம் என் விருப்பம் சொல்லப்படும்.உடனேயே நிராகரிக்கப் பட்டு விடும்.எனவே இந்த எதிர் பாராமல் செல்லப் பிள்ளையை தரிசிக்கும் பாக்கியம் என்னை மிகவும் ஆவலில் ஆழ்த்தியது. கர்நாடகாவில் தமிழக கட்டிடக் கலையின் இன்னுமொரு பரிமாணம்...இங்கும் முகலாய ஆட்சியாளர்களின் கைவண்ணம் ...சுற்றுச் சுவர்களில் இருக்கும் சிலைகள எல்லாம் கை இழந்தும்.... கால் இழந்தும் .... சின்னா பின்னமாகக் காட்சியளிக்கின்றன.உள்ளே செல்லப் பிள்ளையின் தரிசனம் ..வரலாறும் ஆன்மீகமும் கதை கதையாய் வருணித்த செல்லப் பிள்ளை மிகவும் அழகு தான்.(அது தான் அந்த இஸ்லாமிய இளவரசி மோகித்து தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளாள் ...பிறகு ஆச்சாரியார் அவர்கள் செல்லப் பிள்ளாய் ! வாரும் ! என்று அழைத்தப் போது அன்பில் கனிந்து உடன் வந்த அந்த அழகிய பிள்ளையைப் பிரிய முடியாமல் உடன் வந்து" துலுக்க நாச்சியாராக" வணக்கத்துக்கு உரிய தெய்வமாகிய கதை கண்ணுக்கு முன்னே படம் போல ஓடியது.)..இங்கேயும் அவசரம் தான்..ஆறு மணிக்கு முன்னே ஸ்ரவண பெலகோலா சென்று அடைய வேண்டும் என்று டிரைவர் வண்டியை விரட்டினார்.அதோ ......பத்து மைலுக்கு முன்பே அந்த விஸ்வரூப உருவம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தது..காலையில் இருந்து அவசர அவசரம்மாக எல்லா இடங்களிலும் ஓடி ஓடி தரிசித்த களைப்பு ...சரி ..கீழே இருந்தே ஒரு நமஸ்காரம் போட்டு விடலாம் என்று தீர்மானித்தேன்..ஆனால் என் மகள் மேலே போக வேண்டும் என்று சொன்னதினால் சரி என்று முடிவை மாற்றிக் கொண்டு ஏறலாம்..என்று முடிவு செய்தேன்...வழக்கம் போல செருப்பு போட வேண்டாம் என்று அறிவிப்பு வந்தது..நாங்களும் வழக்கம் போல காதில் போட்டுக் கொள்ளாமல் செருப்பு அணிந்தே போனோம்...நல்ல தூரம்.(செருப்பு இல்லாமல் நடக்கவே வர மாட்டேன் என்கிறது)அடிவாரத்தில் இருந்து நிமிர்ந்து பார்த்தேன்...சற்று மனம் அதைரியப் பட்டது..சரி வந்து விட்டோம் ஏறி தான் பார்க்கலாமே.....துணிந்து விட்டேன்..முதலில் சற்று வேகமாக ஏறினேன்..ஆனால்.....கொஞ்ச தூரம் போனதும் வியர்வை ஊற்று உடலை நனைத்தது ..இதயம் ப்டபடவென்று அடித்துக் கொண்டது..குதித்துக் கொண்டு வாய் வழியே வெளியே வந்து விடும் போல துடித்தது.மேலே இருந்து இறங்குபவர்கள் "சீக்கிரம் ...போங்கள்..கோவில் மூடி விடு வார்கள் என்றதும் சரி கீழே இறங்கி விடலாம் என்று திரும்பினால் திரிசங்கு போல பாதியில் இருந்தேன்.என்ன ஆனாலும் சரி என்று வாயால்" புஸ்...புஸ் 'என்று மூச்சு இரைத்துக் கொண்டே மண்டபம் வரை சென்று விட்டேன் சரி வந்து விட்டோம் என்று சந்தோசப் பட்டால்...கொஞ்ச தூரம் பாறையில் சரிவில் ஏறிப் போனால் மீண்டும் பெரிய படிகள்..கண்களில் நீர் நிறைந்து விட்டது..சூரியன் காணமல் போய் விட்டான் இருள் சூழ ஆரம்பித்து விட்டது...சரி மகாவீரருக்கு என்னை ஆசீர்வதிக்க மனம் இல்லை போல என்று நினைத்துக் கொண்டே தட்டுத் தடுமாறி கோவில் படியில் கால் வைத்தேன்.என் கணவரும் மகளும் எனக்காக காது இருந்தார்கள்...மக வீரரின் விஸ்வரூப் தரிசனம் எனக்கும் கிடைத்து விட்டது...அவ்வளவு உயரத்தில் எங்கிருந்தோ வீசிய மென் காற்று வியர்வையில் நனைந்த என் உடலை சிலிர்க்கச் செய்தது...நம் நாட்டின் தெய்வ மனம் கமழும் இடங்களில் இப்படி ஏதோ யாருக்கும் புரியாத அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன..அவற்றைக் கண்டு பிடித்து அங்கே இப்படி அழகிய தெய்வீக மனம் கமழும் கோவில்களையும் கடடி வைத்துள்ள நம் முன்னோர்கள் உண்மையிலே பெரிய ஆச்சரியக் குறிக்குள் உள்ளவர்கள் தான்.......!

Tuesday, November 9, 2010
இளங்காலை ....சிலு சிலு வென்று மென் காற்று...வண்டி நின்ற இடமோ பழைய ஆற்றுப் பாதை.முதலில் இறங்கிய எங்கள் டூர் கைடு வெகு வேகமாக நீச்சல் உடைக்கு மாற்றிக்கொண்டார்.(என்ன ஒரு பெரிய விஷயம்...தடவென்று வேஷ்டி சட்டை களைந்தார்.ஒரு துண்டை கட்டிக் கொண்டு நாங்கள் வருகிறோமா..இல்லையா...என்று கூட பார்க்காமல் ஆற்றை நோக்கி நடந்தார்.)எனக்கு திக் என்றது.எப்படி குளித்து உடைமாற்றுவது...?என் மகளின் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்தது...நான் இங்கே குளிக்கமாட்டேன்...எங்கே டிரஸ் மாற்றுவது...நான் உடனே மாமா...மாமா...என்று கூவிக்கொண்டே பின் தொடர்ந்தேன் ...என் மகளின் சந்தேகங்களுக்கு உடனே பதில் வந்தது ...அதோ அங்கே நிறைய இடம் இருக்கிறதே....சற்று தள்ளி நிறைய பாத்ரூம் கடடி விட்டிருந்தார்கள்...(இதற்குள் மாமாவின் குளியல்...மற்றும் காலை கடன்கள் முடிந்து பட்டை அடித்து ரெடி ஆகி இருந்தார்...என்ன போலாமா....?மாமாவின் அடுத்த கேள்வி..எனக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது...எங்கும்அழுக்கு குப்பை கீழே அங்கேயே துப்பி வைத்திருந்தார்கள்...நாங்கள் இன்னும் பல் தேய்க்ககூட ஆரம்பிக்க வில்லை .என் கணவரைக் கண்ணிலேயே காணோம்....சற்று தள்ளி கை கடடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்.சரி ....நின்று கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது என்று என் மகளை கரையில் காவலுக்கு வைத்து விட்டு விடு விடு வென்று தண்ணீரில் இறங்கினேன்..தண்ணீரின் மேலே படலமாக பனி மூட்டம் நகர்ந்து கொண்டு இருந்தது.(வேலூரில் வாய்காலில் மார்கழி மாதம் பார்த்து ரசித்தது மீண்டும் நினைவுக்கு வந்தது.)
இப்போது ரசிக்கும் மன நிலை இல்லை ஒரு முழுக்கு .......மனதில் புனித இடம் என்ற ஒரு பக்தியே வரவில்லை...எங்கும் அசுத்தம்...அழுக்கு....குளித்தோம் என்று பேர் பண்ணி விட்டு உடை மாற்றச் சென்றேன்...அங்கே நான்கு பக்கம் தட்டி அடித்து டிரெஸ்ஸிங் ரூம் என்று இரண்டு ருபாய் வாங்கி விட்டான்...(நஞ்சன்கூட் எனக்கு மிகவும் பிடித்தமான இடம் அந்த கோவில் அதன்தங்க நிறம்..... சிலைகள் என்னை மிகவும் ஈர்க்கும் நீண்ட பயணத்திற்குப் பின் கூட சுறுசுறுப்பாக இறங்கி ஓடுவேன்.இப்போது அந்த சந்தோஷம் கொஞ்சம் கூட இல்லை..... ஒரே கோபம்...)ஏதோ காமா சோமாவென்று புடவையைச் சுற்றிக் கொண்டு கடவுளை தரிசிக்கப் போனோம்..நல்ல தரிசனம்..(இங்கும் திருப்பதி போல தள்ள ஆரம்பித்து விட்டார்கள்)திருப்தி அடையாமல் வெளியே வந்தோம் பிரகாரம் சுற்றி வந்தோம் . அம்மன் சந்நிதி..கும்பல் இல்லை அர்ச்சகரிடம் பேர் நக்ஷத்திரம் சொல்லி அர்ச்சனை....செய்யச் சொன்னோம்...மனம் மிகவும் அமைதியாய் இருந்தது.அம்மன் சந்நிதிக்குப் பக்கத்திலே ஒரு மரகத லிங்கம் இருக்கிறது.அதை கோவிலுக்குக் காணிக்கை ஆக கொடுத்தது திப்பு சுல்தான்.அவனுடைய பட்டத்து யானையின் கண் நோய் நீக்கியதற்காக அம்மனுக்கு அவன் செய்த நன்றி காணிக்கை.(இதை பார்க்கும் போது பக்தி ,நம்பிக்கை,நன்றி உணர்ச்சி இவை எதுவுமே மதம் சார்ந்தது இல்லை என்ற உண்மை உரைத்தது.பின்...ஏன்...இப்போது இத்தனை மதக் கலவரங்கள்...புரியாத புதிர் தான்..)
கோவில் விட்டு வெளியே வரும் போது பிரகாரங்களில் அற்புதமான் சிலா ரூபங்கள்...கதைகள் கன்னட எழுத்துகளில் இருந்ததால் புரியவில்லை...ஒரு சில விக்ரகங்கள் கதை தெரிந்ததால்....என்ன என்று தெரிந்தன..இப்போது நான் டூரிஸ்ட் கைடு ஆகி விட்டேன்...இப்போதும் எங்கள் வண்டி டிரைவர் எங்களுடன் வரவில்லை ஏனோ அவர் ஒட்டாமல் இருந்தார்....வெளியே வந்த பிறகு ராகவேந்திரர் பிருந்தாவனதிற்குப் போனோம் .இங்கே தான் சுயம்புவாக ராகவேந்திரர் சிலை இருக்கிறது.அவரையும் தரிசித்து விட்டு வண்டி நோக்கி திரும்பினோம்...அங்கே இருந்த ஒரு டீக் கடையில் காபி என்ற பெயரில் ஏதோ குடித்து விட்டு எங்கள் பயணம் தொடர்ந்தது.மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் விரைந்த எங்கள் வண்டி நின்ற இடம் சாமுண்டி மலை..அப்போது தான் தசரா முடிந்து இருந்ததால் அம்மன் அழகாக அலங்கரிக்கப் பட்டு இருந்தாள்.(இங்கே நாங்கள் சாப்பிட்ட காலை உணவு.....அப்பப்பா...படு கேவலமாக இருந்தது....ஐயோ இன்னும் நான்கு நாட்கள் எப்படி சாப்பிடப் போகிறோம் என்று பயம் வந்து விட்டது..உடன் வந்தவர்களும் இதே பயத்தை வெளிப் படுத்தியதால் இனி நாங்கள் சொல்லும் ஹோட்டலுக்குத் தான் போக வேண்டும் என்று டிரைவரை சரிக் கடடி வைத்தோம்.இதற்குள் டிரைவர் கொஞ்சம் பழகஆரம்பித்து இருந்தார்.)அடுத்த இலக்கு மைசூர் பாலஸ்.......(தொடரும்)

Sunday, November 7, 2010
இனிய பயணம்
எதிர் பாராமல் ஒரு பயணம் வாய்த்தது.கர்நாடகாவின் பழமையும் புதுமையும் கலந்த ஒரு புனிதப் பயணம்.எங்கள் ஊரின் ஒரு பயண ஒருங்கைமைப்பாளர் என்னிடமும் என் கணவரிடமும் மாற்றி மாற்றிப் பேசி ஒப்புதல் வாங்கி விட்டார்.நான் தான் "சரி" என்று சொல்லிவிட்டேன் என்று நினைத்து என் prestige காப்பற்றப் படுவதற்காக என்னவரும் தலையாட்ட இனிய பயணம் உறுதி படுத்தப் பட்டது.ஆனால் ஒரு தயக்கம் ....ஒரு சந்தேகம்...ஒரு வாரம் வேலை,என் வகுப்புகள் , விட்டு விட்டு எப்படி? .......சரி ...கால் வைத்தாகி விட்டது. முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாம் ..என்று ஏற்பாடுகளில் முனைந்தோம்.'.கோவில் கோவிலாக போகப் போகிறோமா ?'மகளின் ஆரம்பகால மறுப்புகளை ஒரு வழியாக பேசி சரி செய்து விட்டேன்.
ஒரு செவ்வாய்கிழமை ..இரவு பத்து மணிக்கு ..அந்த tempo traveller பன்னிரெண்டு பயணிகளுடன் பயணம் துவங்கியது.ஒருவரை ஒருவர் அறியாத உடன் பயணிகள் ....பாவம் அந்தக் கூட்டத்தில் என் மகள் மட்டும் தான் இளையவள்..பின் சீட்டில் தனியாக உட்கார்ந்து கொண்டாள்..அதிலேயே அவள் கோபம் வெளிப்பட்டது...அவள் என்ன சொன்னாலும் தலையாட்டிவிட்டு நான் டிரைவர் இருக்கைக்குப் பின்னே அமர்ந்து கொண்டேன்.
ஆரம்பமே சிறு தடங்கலுடன் தான் இருந்தது.அந்த வண்டியின் permit sheet காணவில்லை என்று காந்திபுரத்தில் நிறுத்தி தேடல் துவங்கியது.டிரைவர் என்னவோ எல்லா இடங்களிலும் தேடி விட்டு இல்லை என்று சொல்லி விட்டார்.வண்டி நின்ற இடம் காந்திபுரம் பிள்ளையார் கோவில் ....என்னப்பா பிள்ளையாரப்பா ....இது என்னடா சோதனை என்று நினைத்துக் கொண்டு தூக்கமும் விழிப்புமாக ..காத்துக் கொண்டு....நல்ல வேளை ..வண்டி உரிமையாளர் வந்தார்...அவரிடம் டூர் நடத்தும் மாமா "என்னப்பா இது புது பிரச்சனை " கோபமே இல்லாமல் கேட்டார் வண்டி உரிமையாளர் ஏதோ ஜி பூம்பா மாதிரி எதற்குள்ளேயோ கை விட்டு தேடினார் கிடைத்து விட்டது அந்த பேப்பர் ..சரி போலாம் ரைட் ....வண்டி புறப்பட்டு விட்டது.....மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி விரைந்தது அந்த சின்ன வண்டி....சிலு சிலுவென்று கோவையின் குளிர் காற்று முகத்தில் மோத ஆரம்பித்தது.இரவின் மெல்லிய தாலாட்டு ...(ஹரிவம்ஸ் ராய் பச்சனின் ஒரு கவிதையில் படித்திருக்கிறேன் ..யாரும் இல்லா இரவில் வானப் பெண் தாலாட்டுப் பாடுவாளாம் )அந்த அமைதியான இரவில் கண்களை இழுத்து மூட வைத்தன.வசதியாக கால்களை வைத்துக் கொண்டு மெல்ல மெல்ல தூக்க தேவதையின் அணைப்புக்குள் புக ஆரம்பித்தேன்.
"பள்ளிக்கட்டு சபரிமலைக்கு..."பெரும் ஓசையுடன் அந்த vedio பிளேயர் அலற ஆரம்பித்தது. சரியான எரிச்சல்...கண்களுக்கு எதிரே பயங்கரமான கிராபிக்ஸ் கலவையுடன் ஆடல் பாடல் ...அவ்வளவு தான் ஆனந்தமான தூக்கம் தொலைந்து போய் விட்டது.சரி ....வேடிக்கை பார்க்கலாம் என்று ஜன்னல் திறந்து இரவின் அழகை பார்க்க ஆரம்பித்தேன்....விர் ...விர்...என்று விரையும் பேருந்துகளும் லாரிகளும் அமைதியான இரவுப் பெண்ணை துன்புறுத்திக் கொண்டு இருந்தன.இப்போது அந்த வீடியோ காட்சி கண்களுக்குப் பழகி விட்டது...நாள் பூராவும் வேலைசெய்த களைப்பு கண்களை அழுத்தியது.என்னை அறியாமல் நித்திரைப் பெண்ணின் பிடிக்குள் மாட்டிக்கொண்டேன்.திடீரென்று வண்டி நின்றது...ஓடிக் கொண்டிருந்த போது தாலாட்டிய மெல்லிய காற்றின் வேகம் குறைந்த போது தானாகவே விழிப்பு வந்தது.பலவந்தமாக இமை பிரித்துப் பார்த்தபோது நீண்ட வரிசையின் கடைசியில் எங்கள் வண்டி நின்று கொண்டு இருந்தது.பண்ணாரியம்மன் கோயில் வாசலில் வண்டி நின்று கொண்டு இருந்தது.எல்லோரும் இறங்கினோம்.காட்டு வழிப் பாதையில் பயணிப்போருக்கு வழித் துணையாய் உடன் வரும் எல்லை தெய்வம் .செருப்பு போட வேண்டாம் ...மாமாவின் தெளிவான அறிவுறுத்தலை காதில் வாங்காமல் செருப்புக் காலுடன் கோவில் எல்லையில் பிரவேசித்தோம்.எங்கு பார்த்தாலும் அசுத்தம்.குப்பை ...தண்ணீர் தேங்கிக் கிடந்தது...சிறிது தயக்கத்துடனே நடந்தோம்....காலை தரிசனத்திற்காக இரவே வந்து கோவில் நடையில் படுத்திருப்போர்....அப்போது சுருதி பிசகாமல் பழைய கன்னடம் தமிழ் கலந்த ஏதோ ஒரு பாட்டு ஒலித்தது .அங்கு இருந்த கும்பலில் தூக்கம் வராத அருகில் உள்ள காட்டுவாசிப் பெண்கள் ஏதோ ஒரு அமானுஷ்யமான குரலில் பாடிக் கொண்டு இருந்தார்கள்.சற்றே மனம் சிலிர்த்தது....அந்த நடுஇரவில் ....உரத்த குரலில்.. எனக்கும் உனக்கும் புரிந்தால் போதும் என்பது போல் அம்மன் சந்நிதியின் முன் பாடிக் கொண்டு இருந்தார்கள்.கூட்டம் இல்லாமல் அம்மனை பூட்டிய கம்பி வேலியின் இடையே தரிசித்தோம்..அம்மனும் எங்களைப் பார்த்து புன்முறுவல் பூத்தாற்போல் இருந்தது.பிறகு எதிரில் இருந்த குண்டம் ,பலி கொடுக்கும் இடம் எல்லாம் பார்த்து வண்டிக்குத் திரும்பும் போது எங்கள் வண்டியின் பின்னே வரிசை நீண்டு இருந்தது.அது வரை மௌனம் காத்த டிரைவர் வண்டி கிளம்ப இன்னும்இரண்டு மணி நேரம் ஆகும் மேலே மலைப் பாதையில்ஏதோ விபத்து என்று பொதுஅறிவிப்பு செய்தார்.நடு இரவில் ...வண்டி விட்டு இறங்கி டீக் கடையை தேடினோம்.ஒருகடையில் டீ என்ற பெயரில் சற்றே ஆறியவெந்நீர் கிடைத்தது.சரி கிடைத்த வரை போதும் என்று அதையும் விடாமல் குடித்து விட்டு வண்டி திரும்பினோம்.அப்போது சும்மா இல்லாமல் டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.டூர் ப்ரோக்ராம் பேப்பர் பார்த்து எனக்கு தமிழில் எழுதிக் கொடுங்கள் என்றார்.ஒரு சிறு நட்புடன் எங்கள் பேச்சு தொடர்ந்தது.என் மகளைப் பார்த்து இந்த cd உங்களுக்குப் போர் அடிக்கும் வேறு போடுகிறேன்.என்றார்.அப்போது மேலே மலைப்பாதையில் இருந்து ஆம்புலன்ஸ் அலறிக் கொண்டு வந்தது.ஒருவர் உயிர் இழந்து விட்டார் என்றும் இன்னொருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்றும் சொன்னார்கள்.கொஞ்ச நேரத்தில் டிராபிக் ஜாம்சரியாகி விட்டது.எங்கள் வண்டியின் பயணமும் தொடர்ந்தது.தூக்கம் தொலைந்து போனது .மலைப் பாதையின் கொண்டை ஊசி வளைவுகளில் விரைந்து ஒட்டிய டிரைவர் விபத்துக்கு உள்ளான வண்டியைக் காட்டினார்.மலைப் பாதை பயணத்தில் இருளில் நின்றிந்த யானைகள் கண்ணில் பட்டன.கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தூக்கம்...விடியும் போது வண்டி நின்ற இடம் நஞ்சன்கூட் ...கபினி ஆற்றின் கரையில்....(தொடரும்)

Monday, October 11, 2010
நவராத்திரி ..கொலு
ஒவ்வொரு வருஷமும் வரும் கொலு இந்த வருடமும் வந்தது...முதலில் வைக்கலாமா வேண்டாமா ...என்று தயங்கி பிறகு வைத்து விட்டேன்...புதிய பொம்மை ஒன்றும் இல்லை.ஆனால் கொலு வைக்கும் போது ஏன் நினைவுகூடங்களில் வியாபித்து நின்றது கோமள விலாசில் வைத்த கொலு...
கோமள விலாசுக்குக் குடி போனபோது ஒரு சந்தோஷம் ..பெரிய ஹால்.எங்கள் வீட்டில் நிறைய்ய்ய்ய .....பொம்மைகள்..சின்ன சின்ன வீடுகளில் இருந்தபோது கூட அம்மாவும் அப்பாவும் பதினோரு படிகளுக்கு குறைவாக வைத்தது இல்லை.கோமள விலாசில் இன்னொரு advantage அவர்கள் வீட்டு ரெடிமேடு கொலுப்படி எங்களுக்கு கிடைத்தது.பட்டு மாமி காலி செய்து போனபிறகு சும்மாவே கிடந்த கொலுப்படி எங்களுக்கு உபயோகித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.கிரேட்.....அப்பா வழக்கம் போல மாணவச் செல்வங்களின் துணை கொண்டு nut ..bolt cutting player துணை கொண்டு அந்த இருபது ஒரு படி கொண்ட stand செட் செய்து விட்டார்.அம்மாடியோவ்....கூரையில் இருந்து முட்டிக்கொண்டு நின்றது ....கொலுப் பெட்டிகள் திறக்கப் பட்டன.பழைய ...கிழிந்த ...துணிகளுக்குள் அடைந்து கிடந்த பொம்மைகள் புதுக் காற்றை சுவாசித்தன.அப்பா ஏணி துணை கொண்டு பொம்மைகளை அடுக்கினார்...உடன் வானரப் படைகள்....சுப்பிரமணி, வேலுச்சாமி, அப்புறம் நரசிம்மன்...எல்லோரும் அவர் அவர் கற்பனைக்கு ஏற்ப பொம்மைகளை அடுக்கி முடித்தோம் .மணி இரவு பன்னிரண்டு இருக்கும் ....பொம்மைகளை அடுக்கி தனியே நின்று அவ்வளவு பெரிய கொலுவை மலைப்பும் திகைப்பும் சந்தோஷமுமாக பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அந்த பழைய கொளுச்டந்து பாரம் தங்காமல் இடையில் எங்கோ முறிய.....அந்த பிரம்மாண்ட கொலு எங்கள் கண் முன்னால் தட தட என்று சரிந்தது....என்ன செய்வது என்றே தெரியாமல் நின்று பார்த்துக் கொண்டு இருந்தோம்....ஆனால் ஆச்சரியம் ....என்ன தெரியுமா...அவ்வளவு உயரத்தில் இருந்து சரிந்தும் சேதமடைந்த பொம்மைகளின் எண்ணிக்கை குறைவு தான் .அம்மாவுடைய பலப் பல கிருஷ்ணன் பெரியது உடைந்து விட்டது...சிறிய பொம்மை இருக்கிறது...
இப்போது நான் வைக்கும் போதும் அந்தக் காட்சி கண்ணில் படமாய் ஓடுகிறது.
அம்மா சளைக்கவில்லை அந்த ஸ்டாண்டை எடுத்து வைத்து விட்டு பழையபடி drum .டின்,புஸ்தகங்கள் சாமான்அடுக்கும் பலகை கொண்டு பழைய படி பதினோரு படி கொலு உருவாகி விட்டது...அப்போது அம்மா மீது கோபம் வந்தது,,,இப்போது அம்மாவின் வில் பவர் புரிகிறது அம்மா u are great !

Wednesday, October 6, 2010
வந்ததே வந்ததே மழை
நீண்ட இடைவெளிக்குப் பின் சென்ற வாரம் வானம் பொத்துக் கொண்டது போல் மழை கொட்டித் தீர்த்தது.இது என்னடா பெரிய விஷயம் என்கிறீர்களா ...?இதில் இரு விஷயம் இருக்கிறது. எங்கள் வீட்டுப் பூனையின் குட்டிக்கு இது முதல் மழை .அதன் கண்களில் என்ன ஆச்சரியம்...திடீரென்று பகலில் வானம் இருட்டிய போது அதன் முகத்தில் திகைப்பு...கொஞ்சமே அரைக்கண் திறந்து ஒரு சின்ன ஆராய்ச்சி,அப்போது வெயிலில் சுகமாய் நீட்டிக் கொண்டு இருந்த வாலுக்கு அருகில் பொத் என்று ஒரு மழைத் துளி.(எல்லோரும் பொட் என்று தான் சொல்லுவார்கள்.நான் ஏன் பொத் என்கிறேன் என்றால் அவ்வளவு பெரிய துளி)
அப்போது வாரிச் சுருட்டிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தது .என்னடா ...இது புதுசா இருக்கே என்று நினைத்தது போலும்...ஜம் என்று சேர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டது.பகல் நேர மழை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது .அதுவும் இல்லாமல் அது ஒரு சோம்பலான ஞாயிற்றுக் கிழமையில் பிற பகலும் கூட....அப்போது பளீர் என்று வெட்டியது ஒருமின்னல் ......தடதட என்று ஆகாயத்தில் இடி கும்மாளமிட்டது....அவ்வளவு தான் எங்கள் குட்டிப் பூனையின் வால சில்லிர்த்துக் கொண்டு விட்டது....அது வரை அம்மாவைத் தேடாத அந்தக் குட்டி அடைக்கலம் தேடி தாயிடம் ஓடியது.அந்தக் குட்டி காணாமல் போய் முதல் நாள் தான் கிடைத்து இருந்தது,தாய்க்கே உரிய ஜாக்கிரதையுடன் குட்டிப் பூனையை மிரட்டிக் கொண்டு இருந்தது ஆனால் அடம் பிடிக்கும் சின்னக் குழந்தை போல் ஓடிய அந்தக் குட்டி வானம் காட்டிய வெடி வெளிச்ச வேடிக்கை மீண்டும் அம்மாவிடம் அழைத்து வந்து விட்டது,,,,இயற்கையின் முதல் சீறல் கண்டு சற்றே பயம் காட்டிய சின்னக் குட்டியின் பயம் நிமிடங்களில் தெளிந்து விட்டது.மேலக் கூரையில் இருந்து கொட்டிய மழையின் தாரை கயிறு போல் பட்டது போலும் அதைப் பிடிக்க குறி பார்க்க ஆரம்பித்து விட்டது..இதை பார்க்கும் போது சிரிப்பாகவும் இருந்து...மனிதர்களின் பயமும் புரிந்தது.அம்மா பூனை தான் குழந்தையை போகாதே என்று மிரட்டவில்லை மாறாக கண்காணித்தது.ஆனால் ........நாம் விடுவோமா.....?

Sunday, August 22, 2010
ஒரு வருடம் கழிந்தது.....
சென்ற வருடம் ...கிட்டத்தட்ட இதே நாளில் நான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டேன்.தயங்கித் ..தயங்கி அம்மாவிடம் செய்தி சொன்னபோது பதறி ...நான் வருகிறேன்..என்று கிளம்பி வரத் துடித்தார்கள்."நீங்கள் வந்தால் உங்களுக்கும் கஷ்டம் ரமா இருக்கிறாள்"என்று ஆறுதல் சொல்லி விட்டேன்.பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை "எப்படி இருக்கிறாய் ? "என்று கைபேசியில் விசாரிப்பு.(நானும் அம்மாவும் பத்து பைசா scheme போட்டு இருந்தோம்)சரியாக ஒரு வாரம் கழித்து அம்மா காய்ச்சல் இருக்கிறது .என்று சொன்னார்கள்...மாயாவியைப் போல அந்த காய்ச்சல் என் அம்மாவை என்னிடம் இருந்து பறித்துச் சென்று விட்டது.இதோ....இன்னும் இரண்டு நாட்களில் அம்மாவின் வருஷாப்தீகம் ........கால தேவன் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கிறான்...நம்ப முடியாத உண்மை நடந்து முடிந்து ஒரு வருடமும் ஆகி விட்டது என்பதைத் தான் ஜீரணிக்கவே முடியவில்லை
இன்றும் காலை 10 30 மணி ஆனால் தொலைபேசி சினுங்காதா ? என்று ஒரு எதிர்பார்ப்பு.உண்மை சுடும் போது மனதில் ஒரு விதிர்ப்பு...ஓஓஒ ....அம்மா இனி பேச மாட்டார்கள்.அப்பாவின் வருஷாப்தீகம் நடந்த போது இந்த வலியும் வேதனையும் நான் அனுபவிக்க வில்லை.அம்மா இருந்தார்கள் ..அது என்னவோ எனக்கு யானை பலம் போல..ஆனால் இந்த முறை ஏதோ ஒரு வெறுமை இழப்பின் தாக்கம் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் குபுக் என்று கண்ணீர் துளி எட்டிப் பார்த்து விடுகிறது.
நேற்று இரவில் பார்த்த "ஆனந்த புரத்து வீடு "இன்னும் கொஞ்சம் அழுத்தமாக அம்மா அப்பாவை எதிர்பார்க்க வைக்கிறது.

Thursday, August 5, 2010
ஆடி பெருக்கு
விகடனில் கி வ ஜ எழுதிய ஆடி பதினெட்டு பற்றிய கட்டுரை காலபெட்டகத்தில் படித்தேன்.என் நினைவுகளும் பின்னோக்கி ஓட ஆரம்பித்து விட்டன.
இளமையில் ஆடி மாதம் அழகான மாதமாக வரவேற்கப் பட்ட மாதம்.வரிசையான பண்டிகைகள் கண்டிப்பாக ஆடி அமாவாசைக்குப்புதுத் துணி கிடைக்கும்.கூடவே வளையல் ரிப்பன்....பெரிய எதிர்பார்ப்புடன் கொண்டாட்டம்.
ஆடி முதல் தேதி தலை ஆடி ......பள்ளிக்கூடம் லீவ் ..தேங்காய் சுடும் பண்டிகை வாதநாராயண மரத்தின் குச்சியின் நுனியை சீவி தேங்காய் பொட்டுக்கடலை பொடி வெல்லம் பொடித்துப் போட்டு வெந்நீர் அடுப்பில் சுட்டுத் தின்னும் தேங்காய் கண்டிப்பாக தேவாம்ருதம் தான்.எப்படியாவது அப்பாவிடம் permission வாங்கி விடுவேன்.
அப்புறம் குச்சி ஆட்டம்......தெருதெருவாக குச்சியைத் தட்டி கொண்டு ஓடுவோம்.
அப்புறம் ஆடி 18 காவிரியின் கரை புரளும் வெள்ளம்.வேடிக்கை பார்க்கப் போவது கூட ஒரு இனிமையான அனுபவம் செம்மண் கலரில் நுங்கும் நுரையுமாக வரும் காவிரித் தண்ணீரைப் பற்றி இனி நினைவுகளில் தான் தேட வேண்டும்.
காலையில் இருந்தே வாசலில் மேள சத்தம் கேட்க ஆரம்பித்து விடும் மாரியம்மன் கோயில் வாசலில் இருந்து ஒரு ஊர்வலம் போகும்.(மகாபாரதம் படித்து விட்டு போவர்கள் என்று நினைவு.)தலையில் முளைப்பாரியை எடுத்துக் கொண்டு கொட்டு கொட்டிக்கொண்டு புதுத் துணி சரசரக்க ஊர்வலம் போகும்.புதுப் பெண் மாப்பிளை .....இந்த வேடிக்கை பார்க்கவே முழு நாளும் கழிந்து விடும்
மாலையில் அப்பாவுடன் விளக்கு விடுவதை வேடிக்கைப் பார்க்கப் போவோம்.ஆடி 18 விழாக் கடைகளில் கண்டிப்பாக பேரிக்காய் வாங்குவோம்.
நிறைய.....நிறைய.......நினைவுக்கூட்டம்.....ஓடி வருகின்றன.என் கைகளுக்குத் தான் வேகம் பத்தாது.ஆற்றின் ஈரத்துடன் சிலு சிலுவென்று சாரலும் நனைக்கும்.அந்த பெரிய ஆலமரத்தின் இலைகள் அசையும் போதுமறைந்து கண்ணாமூச்சி காட்டும்சூரியன் வர்ண ஜாலங்களை காவிரியின் நீர்பரப்பின் ஜரிகையாய் நெளிய விடுவான்.இந்த அழகு இனி மேல் நினைவுப் பெட்டகத்தில் மட்டும் தான்,

Tuesday, August 3, 2010
என்னை பாதித்த படம்
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு சோம்பலான ஞாயிற்றுக் கிழமை.இன்று கண்டிப்பாக நான்கு மணிக்கு சன் T V படம் பார்த்தே ஆக வேண்டும் என்று அடமாக உட்கார்ந்து விட்டேன் .என்ன ஸ்பெஷல் தெரியுமா ?மாயாண்டி குடும்பத்தார் படம் போட்டு இருந்தார்கள் .அந்த படத்தின் விஷேசம் என்ன தெரியுமா ? அம்மா கடைசியாய் பார்த்து விட்டு ரொம்பவும் பாராட்டி நீ கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்று மூச்சு இரைப்புக்கு நடுவில் சொன்ன படம்.நானும் பார்க்க வேண்டும் என்று ரொம்பவும் முயற்சி செய்தேன்.திருட்டு cd கொடுக்கும் பூக்கரனிடம் கூட சொல்லி வைத்து இருந்தேன்.அம்மா ஏன் ரொம்பவும் பிடித்தது என்று சொன்னார்கள் என்று படத்தைப் பார்க்கும் போது தான் புரிந்தது.ரொம்பவும் சாதரனம குடும்பக் கதை.ஆனால்....அதில் அந்த கடைசி மகனின் ....கஷ்டங்களில் அம்மா அப்பாவைப் பார்த்திருக்க வேண்டும் அதனால் தான்.
எனக்கு உடல்நிலை சரியில்லாத போது உதவிக்கு வந்திருந்த போதெல்லாம் அப்பா தான் பட்ட கஷ்டங்களை கதை போல் சொல்வார்விடியற்காலை குக்கர் சத்தத்தின் நடுவே அப்பாவின் வரலாறு .....அப்போது அவை ஏதோ அப்பா எனக்கு வாழ்க்கைப் பாடம்சொல்லிக் கொடுக்கிறார் என்று தான் நினைத்தேன்.அப்புறம் அப்பாவின் இழப்பிற்குப் பிறகு அம்மா என்னுடன் இருந்த போது அம்மாவின் நினைவு ஊர்வலக்கோவைகளும் அப்பாவின் கஷ்டங்களை வரிசை படுத்தி இருந்தன.அவை எனது ஆழ மனக் கிணற்றில் இவ்வளவு நாட்கள் தொங்கிக் கொண்டு இருந்திருக்கின்றன.
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு படம் பார்த்து அழுதேன்.மனம் ரொம்ப பாரமாக இருந்தது.அப்பா எல்லா கதையையும் சொல்லிவிட்டு போனால் போகிறார்கள் போ என்று சாவகாசமாக சொல்லுவர்.ஏன் இவ்வளவு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கோபமாக வரும்
இந்த படத்தில் ஒரு உரையாடல் வரும்
"இந்த பிறவியில் பிறந்து விட்டோம்.இந்த அப்பா இந்த அம்மா இந்த அக்கா இந்த அண்ணன் தங்கை இந்த உறவுகள் இனி அடுத்த பிறவியில் வருமா என்பது சந்தேகம்.எனவே இப்போது நம்முடன் வாழ்பவர்க்கு அன்பு சொல்லி வாழ்ந்து வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாம்."
அற்புதமான கருத்துநான் கல்லூரியில் படிக்கும் போது என்தமிழாசிரியர் ஒரு சினிமா பைத்தியம் அவரிடம் படம் எப்படி இருந்தது என்று கேட்டால் நல்ல இருந்தது.எந்த படத்திலும் நமக்குத் தேவையான எதாவது ஒரு செய்தி கிடைக்கும் என்பார்.அது நிஜம் தான்

Friday, July 30, 2010
மழை மழை
நடுவில் நின்று போய் இருந்த மழை சாரல் ஊர்வலம் நேற்று மீண்டும் எட்டிப் பார்த்தது.கலையில் இருந்து வீரிட்டுக்கொண்டு இருந்த தென்னங்காற்று மதியம் ஒய்வு எடுத்துக் கொண்டது.சரி ஜன்னலைத் திறக்கலாம் என்று திறந்தால் வெள்ளி சரிகைத் தூரலாய் மழை சிலிர்த்துக் கொண்டு தூறிக்கொண்டு இருந்தது.அகல விரிய ஜன்னல்களைத் திறந்து வைத்து விட்டேன்.ஒரு சிலிர்ப்பான குளிர் தோலை ஊடுருவிக்கொண்டு மயிர்க் கால்களைக் குத்திட்டு நிற்க வைத்தது.வெளியே போகும் போது பெயருக்குக் குடை எடுத்துக் கொண்டு சாரல் மழையில் நனைந்தேன்.பஸ் ஸ்டாப்பில் நனைந்த மரங்களும் காற்றில் நடுங்கி என்னை நனைத்தன.அப்பா....எவ்வளவு நாட்களுக்குப் பிறகு இந்த மழை குளியல்,இரவில் வரும் அடுக்குத் தும்மலை மறந்து விட்டு நனைந்தேன்.........அருமை......அருமை......

Sunday, July 25, 2010
மிதிலா விலாஸ்
கண் வலியே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம் .உன்னால் தான் எனக்கு ஒய்வு கிடைத்தது.புத்தகக் கடைக்குப் போகவும் நேரம் கிடைத்தது.என் நீண்ட நாள் கனவுப் புத்தகம் லக்ஷ்மியின் மிதிலா விலாஸ் வாங்கினேன்.ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.இப்போது சீரியல் எடுக்கிறேன் பேர்வழி என்று பழிவாங்குதல் கொலை கொள்ளை ...என்று மனதை வருத்தும் காட்சிகள் வீட்டின் வரவேற்பறைக்கே வந்து மனதை கேடுக்கின்றனவே.அந்த இயக்குனர்கள் ஏன்இந்த புத்தகங்களைப் படித்து நாடகமாக எடுக்கக் கூடாது?
கொஞ்சமாவது இந்தக் காலக் குழந்தைகள் வாழ்க்கைப் பாடத்தைப் படிப்பார்களே.....
எந்தவித ஆடம்பரமான வார்த்தை ஜாலங்கள் இல்லாமல் அற்புதமான ஆற்றோட்டமானஎழுத்து.
படிக்கும் ஆர்வம் குறைந்த இந்த காலத்தில் வார இதழ்களும் இந்தக் கதைகளை தொடராக வெளியிடலாம்.

Tuesday, July 20, 2010
திருவரங்கன் உலா
எங்கேயோ மெட்ராஸில் இருந்து வந்த மெட்ராஸ் ஐ எனக்கு கட்டாய ஒய்வு என் ஹிந்தி வகுப்புகளில் இருந்து கொடுத்து விட்டது.கண்ணில் மணல் அள்ளிப் போட்டது போல ஒரு உறுத்தல்.முதல் நாள் வலி கண்ணைத் திறக்க விடவில்லை.டாக்டர் கொடுத்த மருந்து வலியை ஒட்டி விட்டது.என்னடா பண்ணலாம் என்று மனம் துறுதுறு என்று அலைந்த போது என் மகள் என் அக்கா வீட்டில் இருந்து அந்த பொக்கிஷத்தைக் கொண்டு வந்தாள்.
திருவரங்கன் உலா கண்களை இடுக்கிக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.என்ன ஆச்சரியம் வலி உறுத்தல் எல்லாம் மறந்து மரத்துப் போனது.
அப்பா ....அந்த ரங்கன் என்ன பாடு பட்டிருக்கிறான் ?
1974 தினமணிக் கதிரில் தொடராய் வந்தபோது மனதில் பதிந்த குலசேகரன் ,வாசந்திகா
அந்த அழகிய மணவாளன் மீண்டும் அவர்களுடன் வாழத் தொடங்கினேன்.
இப்போது பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் ஸ்ரீரங்கத்து கோட்டை மதில்களை காப்பாற்ற என்ன பாடுபாட்டு இருக்கிறார்கள்,
அப்பா சுல்தான்கள் ஆட்சிகாலத்தைப் பற்றிப் பேசும் போது ஆவேசப் படுவார்,அந்த ஆவேசம் இப்போது எனக்கும் வந்தது.சோம்நாத்பூர் இடிபாடுகளைப் பார்த்து விட்டு வந்து அப்பா சொல்லும் போது அப்படி என்ன பெரிய கஷ்டப் பட்டுவிட்டார்கள் என்று ஒரு சின்ன கேள்வி என் மனதில் எழுந்துள்ளது.?அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை
எனக்கு எப்போதுமே ஸ்ரீரங்கம் மிகவும் பிடித்தமான கோவில் .இப்போது இன்னும்....இன்னும்...பிடித்துப் போய் விட்டது இந்த முறை ஸ்ரீரங்கம் போகும் போது நின்று நிதானமாய் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன் ஆரியபட்டாள் வாசல் குலசேகரன் திரு மதில்....எல்லாமும் பார்க்கவேண்டும்...வீழ்ந்து வணங்கவேண்டும்

Wednesday, June 30, 2010
அம்மா எப்போதும் நினைவில்
இன்று மாங்காய் ஊறுகாய் போட்டேன்.உப்பு போடும் போது என்னுடன் அம்மாவும் கூடவே இருந்து கையில் அளந்து போடுவது போல ஒரு உணர்வு.என்ன ஆச்சரியம்....உப்பு சரியாக இருந்தது.காரம்...மனம்....சுவை.....ஊறுகாயை கிளறி பாட்டிலில் போடும் போது அம்மாவின் மனம் அப்படியே.....நானே சொல்லிக்கொள்ளக்கூடாது நிஜமாகவே அம்மாவின் கை மனம் ....அம்மா சொல்லி சொல்லி ...எனக்கும் ..அம்மா அடிக்கடி சொல்வார்கள்...குளவி கொட்டி புழுவும் குளவி ஆகி விடும் என்று...நிஜம் தான் போல....அம்மா சொல்லும் போது ஆச்சரியப்பட்டேன் அது எப்படி சாத்தியம் என்று...
இப்போது புரிகிறது.....அம்மாவும் என்னை கொட்டி கொட்டி குளவி ஆக்கி விட்டார்கள்....
தேங்க்ஸ் அம்மா....

Monday, June 7, 2010
தென்மேற்கு பருவக்காற்று
வரலாமா ...வேண்டாமா.....
சற்று யோசித்து....தயங்கி...
இதோ...வந்தே விட்டது...
தென் மேற்கு பருவக்காற்று...
சிலு சிலுவென்று ஈரக்காற்று
யானைக்கூட்டம் போவது போல மேக ஊர்வலம்
ஜன்னலில் பதித்த முகவாயை
எடுக்கவிடாது சில்லிட்டு சுகமளிக்கும்
இரும்புக் கம்பிகள்.
எல்லோரும் தூங்கியபின்னும்
சீறி அடிக்கும் காற்று
திட்டு வாங்கிக்கொண்டு ஜன்னலைத்
திறக்க தூண்டுகிறது.
எங்கோ உடல் மறைத்துக் கூவி குயிலும்
வசந்தம் வந்துவிட்டது என்று
அறிவிப்பு தந்து விட்டது.
இன்னும் சாரல் மழை வருமா .....
என்று ஏங்கித் தவிக்கிறது
என் வீட்டு ரோஜாத் தொட்டி....
மழையே......வா.....வா.....
வந்து விடு.
உன்னை வரவேற்க காத்திருக்கிறேன்.
இப்படிக்கு
தொட்டிச் செடிகள்.
வரலாமா ...வேண்டாமா.....
சற்று யோசித்து....தயங்கி...
இதோ...வந்தே விட்டது...
தென் மேற்கு பருவக்காற்று...
சிலு சிலுவென்று ஈரக்காற்று
யானைக்கூட்டம் போவது போல மேக ஊர்வலம்
ஜன்னலில் பதித்த முகவாயை
எடுக்கவிடாது சில்லிட்டு சுகமளிக்கும்
இரும்புக் கம்பிகள்.
எல்லோரும் தூங்கியபின்னும்
சீறி அடிக்கும் காற்று
திட்டு வாங்கிக்கொண்டு ஜன்னலைத்
திறக்க தூண்டுகிறது.
எங்கோ உடல் மறைத்துக் கூவி குயிலும்
வசந்தம் வந்துவிட்டது என்று
அறிவிப்பு தந்து விட்டது.
இன்னும் சாரல் மழை வருமா .....
என்று ஏங்கித் தவிக்கிறது
என் வீட்டு ரோஜாத் தொட்டி....
மழையே......வா.....வா.....
வந்து விடு.
உன்னை வரவேற்க காத்திருக்கிறேன்.
இப்படிக்கு
தொட்டிச் செடிகள்.
Sunday, May 30, 2010
ஆகாயவிமானம் விபத்துக்குள்ளான செய்தி வயிற்றுக்குள் சிலீரென்று ஒரு அதிர்வு அலையை ஏற்படுத்தி விட்டது.மனம் கனத்துக் கிடந்தது.மேலும் கனமாக்கியது ஹிந்துவில் வந்த அந்த போட்டோ.ஏதும் அறியாப் பருவத்திலே உடல் தந்த உயிர் தந்த உறவுகள் காணாமல் போன அதிர்ச்சி அந்த சின்னக் கண்களுக்குள் என்ன ஆழமாய் தெரிகின்றன.?ஆண்டவன் என்ன நினைத்து அந்தக் குழந்தையின் வாழ்கையில் விளையாடி விட்டான் தெரியவில்லை.
அரை நூற்றாண்டு காலம் அம்மா அப்பாவுடன் வாழ்ந்து நமக்கு என்று கணவன் குழந்தை என்று தனி உலகம் வந்த பின்னும் கூட இதோ எட்டு மதங்களுக்கு முன் அப்பாவைத் தொடர்ந்து அம்மாவும் போன பிறகு ஒரு வெறுமைப் பள்ளம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லையே.!
ஆண்டவா ! அந்த தளிரின் வாழ்வை வளமாக்கு.

Friday, April 23, 2010
கோடை மழை
எங்கோ விழுந்த மழைத் துளி
கிளம்பிய மண்வாசனை
பயணித்து என் நாசித் துளையுள்
தூங்கிய மூளைசெல்கள்
திடுக்கிட்டு விழித்தன.
விழிக்க மறுத்த இமைக்கதவுகள்
கட்டாயமாக திறக்கப்பட்டன
சில்லென்ற மழைக்காற்று
ஜன்னல் வழி தெரிந்து கொண்டுவிட்டது.
சிலிர்த்து விழித்த நொடியில்
பார்வை பயணித்தது வான் நோக்கி
சற்று முன்வரை நீலப்பட்டைக்
கட்டியிருந்த வானப்பெண்ணுக்கு
நிறம் அலுத்துவிட்டது போலும்
கறுத்த சாம்பல்நிற புடவை போர்த்துக் கொண்டிருந்தாள்
ஆங்கங்கே மின்னல் சரிகை வெளிச்சம் காட்டி
கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு இருந்தது
இதோ வருகிறேன்....... வந்து விட்டேன் .........
இடி ஓசையுடன் அறிவித்துக் கொண்டே
பெரும் தூரலாய் மழை !
நனைவோமா .......கொஞ்சம்....
சிறுவயது பிள்ளைகள் போல்
மனம் ஆடியது.
பெரும் துளிகள் சிறு துளிகள் ஆயின
மனம் சலித்தது
வருகிறேன் ........என்று ஆசை காட்டிய மழை
நின்றே விட்டது.
ஆர்பரித்து இடித்து மின்னி முழங்கிய
வானப்பெண் மீண்டும்
நீல ஆடை போர்த்துக்
முறுவல் கொண்டாள்
பூமிப் பெண்ணைப் பார்த்து....
அவளும் இன்னொரு மழை நாளுக்காகக்
காத்து இருக்கிறாள்

Friday, April 16, 2010
Monday, April 12, 2010
Sunday, April 11, 2010
வாசலிலே வேப்பமரம்
பூக்கும்...உதிரும்...
ஆனால்
உதிர்ந்த அம்மா நினைவுப் பூக்களைத்
தெளித்து விட்டு
மீண்டும் மீண்டும்
பூத்துக்கொண்டு இருக்கிறாள்.
வேப்பமரம் மட்டுமா ...
அம்மா வருவாளா .....
என்று காத்துக்கிடக்கிறது....?
நானும் தான்.....
அம்மாவின் வாசம் மட்டும்
அவ்வப்போது மெல்ல மெல்ல
வருடிச் செல்லும் தென்றல் காற்றாய்
நினைவின் வெம்மையைத்
தணித்துக் கொண்டு இருக்கிறது.
நானும் கேட்கிறேன்
அம்மா வருவாயா ?
பூக்கும்...உதிரும்...
ஆனால்
உதிர்ந்த அம்மா நினைவுப் பூக்களைத்
தெளித்து விட்டு
மீண்டும் மீண்டும்
பூத்துக்கொண்டு இருக்கிறாள்.
வேப்பமரம் மட்டுமா ...
அம்மா வருவாளா .....
என்று காத்துக்கிடக்கிறது....?
நானும் தான்.....
அம்மாவின் வாசம் மட்டும்
அவ்வப்போது மெல்ல மெல்ல
வருடிச் செல்லும் தென்றல் காற்றாய்
நினைவின் வெம்மையைத்
தணித்துக் கொண்டு இருக்கிறது.
நானும் கேட்கிறேன்
அம்மா வருவாயா ?
Friday, March 5, 2010
வேலூர் மாரியம்மன் தேர்த் திருவிழா
இன்று குரு கோனியம்மன் தேர் புகைப்படம் facebook ஆல்பம் மூலமாக அனுப்பி இருந்தான். என் நினைவோடை பின்னோக்கிப் பாய ஆரம்பித்து விட்டது. இளமைக் கால தேர்த் திருவிழா........அழியாத கோலங்கள். வேலூர் மாரியம்மன் தேர் திருவிழா கனவுத் திருவிழா. வளர்ந்த கிராமமான வேலூரின் ஸ்பெஷல் விழா .அக்கம் பக்கத்தில் எந்த மாரியம்மன் கோவிலிலும் தேர் கிடையாது.கிழக்குத் தெருவில் உள்ள தேர்முட்டிக்கு செல்வதே ஒரு பெரிய விஷயம். என் தோழி மங்கையின் வீட்டுக்குப் பக்கத்தில் தேர்முட்டி.அவள் வீட்டுக்குப் போகும் சாக்கில் தேரைப் பார்த்தவிட்டு வருவேன்.ஏனோ அலங்காரம் பண்ணாத மரத் தேரின் மீது ஒரு காதல்.
அனேகமாக முழு ஆண்டுத் தேர்வுக்குத் சில நாட்கள் இருக்கும் போது தான் தேர் வரும்.
கோவில் ஆக்ராஹாரத்தின் பக்கத்தில் தான்.அப்பா வீட்டில் அதிகம் சினிமா பாட்டுக்கேட்க விடமாட்டார்.ரேடியோ இருந்தது.ஆனால் ஞாயிற்றுக் கிழமை மதியம் நீங்கள் கேட்டவை தான் ஒரே வழி.(அப்படியும் பாட்டு மியூசிக் ஆரம்பிக்கும் போதே என்ன பாட்டு என்று சரியாகக் கூறிவிடுவேன்).எனவே தேர்த் திருவிழாவின் போது மைக் செட் கட்டி எல்லாப் பாட்டும் கேட்கலாம் என்பதால் எப்போதும் படிப்பதற்கு அதிகம் கஷ்டப்படாத நான் புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஸ்பீக்கர் சத்தம் நன்றாக கேட்கும் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு விடுவேன்.பத்து நாட்களும் திருவிழா தான்.பள்ளிக்கூடத்தில் சினிமா பாட்டுப்புஸ்தகம் கைமாறி வரும் பாடல் வரிகள் மனதில் ஏறிக்கொள்ளும்.(என்னுடைய பெரிய குறை என்னால் மனப்பாடம் செய்ய முடியாது.ஆனால் சினிமாப் பாடல் வரிகள் ஒரு தடவைக் கேட்டால் அப்படியே பதிந்து விடும் .......இன்றும் மாணவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள்.என் இந்த கல்வி இலாக்கா சினிமா மூலமாக பாடம்நடத்தக் கூடாது.)
காப்பு கட்டிய பின் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றப் போவேன்.வாய்க்காலில் தண்ணீர் இருக்காது.காவேரிக்குப் போய் கொண்டு வந்து ஊற்றுவேன்.இதற்கு எல்லாம் ஒன்றும் சொல்லாத் அப்பா தேர் இழுக்கப் போனால் மட்டும் திட்டுவார்.தேர் இழுப்பவர்கள் மீது குடம் குடமாக தண்ணீர் கொட்டுவார்கள்.அப்பாவுக்குத் தெரியாமல் தேர் இழுக்கப் போனால் நனைந்த டிரஸ் காட்டிக் கொடுத்து விடும். பிறகு என்ன ?அர்ச்சனைதான்.மாலையில் தேர்க் கடை உலா.எப்படியும் இரண்டு ரிப்பன் கொஞ்சம் வளையல் ஸ்ரீதருக்கு பந்து என்று ஒரு பத்து ருபாய் செலவு வைத்து விடுவோம்.கோணபுளியங்கை ,கலர் ஐஸ் ராட்டினம்............நான் விளையடுகிறோனோஇல்லையோ கண்டிப்பாக வேடிக்கைப் பார்க்கப் போய் விடுவேன்.என் friends ராட்டினத்தில் விளையாடும் போது பயம் கலந்த ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பேன்.கர்சிப் கீழே வைத்து விட்டு அடுத்த சுற்று வரும் போது எடுக்கும் என் தோழிகள் எனக்கு பெரிய வீராங்கனைகள் தான்.இத்தனை விஷயங்களுக்கும் என்னுடன் துணைக்கு வருவது யார் தெரியுமா.....என் தோழி ராதா.

Wednesday, February 24, 2010
நானும் அப்பாவும்
அப்பா எல்லோருக்கும் போல ஒரு அன்பான அப்பா .என் செல்ல அப்பா.எனக்குச் செல்லம் கொடுதததினால் அம்மாவிடம் அடிக்கடி திட்டு வாங்கிய அப்பா.நான் படிக்கமாட்டேன் என்று சொன்னதினால் என்னை ஹிந்தி படிக்கவேண்டாம் என்று சொன்ன அப்பா. (ஆனால் பின்னால் அதே ஹிந்தி என் வாழ்வின் ஆதாரம் ஆனது வேறு கதை.
அப்பாவின் ஹிந்தி வகுப்புகள் இன்று எனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன.
ஹிந்தி நோட்ஸ் எழுதி கடைசியில் ஒரு தாமரைப்பூ இரண்டு இலைகள் வரைவார்.அதை நானும் செய்தேன்.
பாட்டு கிளாஸ் நான் அப்பாவை மிகவும் சோதித்த வகுப்பு.எனக்கே நினைவே இல்லை.நான் எதனை முறை பாட்டு கற்க ஆரம்பித்தேன் என்று.ஜண்டை வரிசை வரை சில சமயம் போகும் சில முறை ஸ்வரஜதி வரை....சில தடவை வர்ணம் .....ஆனால் நான் முழுமையாக கற்றுக் கொள்ளவில்லை.
சரி விட்டது ஆசை விளாம்பழத்து ஓட்டோடு என்று பாட்டுக்கு டாட்டா சொல்லி வயலின் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.பாவம்......அப்பா பாண்டமங்கலம் வரை சைக்கிளில் கூடிக் கொண்டு போவர்.ம்ம்ம்ம்ம்ம் அதுவும் ..பாதியில் நின்றது.....
சோ இப்போ......எனக்கு எதுவும் முழுதும் தெரியாது.அதே சமயம் குறை கண்டுபிடிக்க மட்டும் தெரிந்து விட்டது. ....சரியான வாத்தியார் புத்தி........அப்புறம்......நான் முழுவதுமாக கற்றது பரத நாட்டியம் தான் .அது.....ஒரு பெரிய தொடரும் போட்டு எழுத் வேண்டிய கதை.....சோ ....(தொடரும்)

Monday, February 15, 2010
அழுத்தம் வெல்வீர்......!
நண்பர்காள்......
யாரென்று பார்க்கிறீர்களா .......நான்...தான்....
என்ன தெரியவில்லையா.....?
நான் தான் உங்கள் நலம் விரும்பி... பேசுகிறேன்.
சற்று செவி மடலை என் பக்கம் சாய்ப்பீர்...........
உங்களுள் அழுத்தம்.....அழுத்தம்.....சரியா...?
என்ன எனக்கா ?அழுத்தமா...?
பதற்றம் வேண்டாம்....நண்பரே...
நீங்கள் கவனம் சிதறி விட்டீர்கள்.என்ன ? சரியா ?
என்ன?.....கவனச் சிதறலா ........?எனக்கா...?
ஏன் கேட்கமாட்டீர்கள்......?
உங்கள் குழப்பம் ...மன எரிச்சல்....வார்த்தை விபரீதம் ,
பார்த்தீர்களா.......பார்த்தீர்களா.......
தனிமனித உறவு கேட்டு விட்டதே....
மற்றவர்கள் ஒத்துழையாமை இயக்கம்
ஆரம்பித்து விட்டார்கள்....அடடா.....
சிக்கல்கள் சூழ்ந்தன.
இரத்த அழுத்த மானியில்
மெர்குரியின் அளவு
மேலும் கீழுமாக ......தவிக்கிறதே.....
அதோ மெல்ல நினைவு கரைகிறதே...
மருத்துவமனை..... டெட்டால் வாசனை....
படுக்கை...டாக்டர்கள் ....
மருந்து...மாத்திரை,,,மயக்கம்....
ஆழ்ந்த இழுத்து விட்ட மூச்சு....
நிம்மதியான ஆழ்நிலை மயக்கம்....
அப்பாடா...தெளிந்து விட்டீர்கள்.
புரிந்ததா...சூழ்நிலைப் புரிதல் அவசியம்.
அதி அவசியம்.
கருத்துப் பரிமாற்றம் ....தேவை.
மிக மிகத் தேவை.
என்ன வேலை சுலபமாகிவிட்டது இல்லையா....
பாராட்டுக்கள்...மேன்மையான பாராட்டுக்கள்.
மகிழ்ச்சியா நண்பரே......
அழுத்தம் வெல்வீர்.......
மன அழுத்தம் வெல்வீர்......
இது உபதேசமல்ல....
முன்னெச்சரிக்கை வாதம்
அதோ..இன்று அதே அழுத்தம் என்னையும்
தொடருகிறது.
இது ஒரு தொடர் நிகழ்காலம்,
புரிதல் இருந்தால்
அழுத்தக் கடலை அனுமன் போலத்
தாண்டி...விடலாம்.
என்ன நண்பரே....தயார......தானே...
களம் இறங்குங்கள்.
வெல்வீர்.......அழுத்தம்...வெல்வீர்.
இந்தக் கவிதையின் வேர் ஒரு காவல்துறை அதிகாரியின் உரை.ஆங்கில உரையை என்னிடம் கொடுத்து தமிழாக்கம் செய்துத் தரச் சொன்னார்கள்.என் கற்பனையும் சேர்ந்து கொண்டது.அந்த அதிகாரிக்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டு மழை.எனக்கும் சந்தோஷம்.உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Sunday, February 7, 2010
ஈஷாவில் என் அனுபவம்
நேற்று ரமாவுடன் ஈஷா சென்று இருந்தேன்.சுதா ரகுநாதன் கச்சேரி .இது வரை நேரில் கேட்டதில்லை.ரமாவுடன் சென்றது இரு புது அனுபவம்.
சுதா ஆரம்பிக்கும் போது சற்று சுருதி சேராதது போலத் தான் இருந்தது. ஸ்ரீ விக்னராஜம் பஜே.. ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் பாட்டில் விநாயகப்பெருமானை அழகாக பல்லக்கில் ஏற்றி குதித்து கும்மாளமிட்டு கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.இந்த பாட்டை எத்தனையோ முறை கேசட்டிலும் ரேடியோவிலும் கேட்டு இருக்கிறேன்.நேரில் கேட்டது ஒரு புது அனுபவம் தான்.
அப்புறம் என் நினைவுப் பெட்டகத்தை உசுப்பி விட்டது "இடது பதம் தூக்கி"பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்.இதில் சிறப்பு என்ன தெரியுமா ? நான் பரதநாட்டியம் கற்றுக்கொண்டபிறகு முதல் முதலாக மேடையேறி ஆடிய பாடல்.நான் பத்தாவது படித்துக்கொண்டு இருந்தேன்.பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா .நான் தான் ஆஸ்தான நர்த்தகி. அப்போது கேசெட் கிடையாது.அம்மா தான் பாடுவார்கள்.ஒவ்வொரு தடவையும் ஆடிப் பழகும் போதும் பாடிப்பாடி அம்மாவுக்கு தொண்டை கட்டி விட்டது.அப்போது எங்கள் வீட்டில் பட்டுப் புடவை கிடையாது.யாரிடமோ இரவல் வாங்கிய ஒரு நீல வண்ணப் புடவை.முதல் முதலாக எனக்கு blouse தைக்கப்பட்டது.அம்மாவே ஸ்கூலில் இருந்த தையல் மிசினில் தைத்தார்கள்.
எப்படியோ கச்சம் வைத்து கட்டிவிட்டார்கள்.காலில் அணிய சலங்கையும் இல்லை ,கொலுசும் இல்லை.ஏன்/? குஞ்சலம் கூட யாரோ தந்தது தான் .ஆனால் ஏன் முதல் மேடையேற்றம் இன்னும் பசுமையாக ஏன் நினைவில் எட்டிப் பார்கிறது.
எங்கிருந்தோ எங்கோ போய் விட்டேன் இல்லை.சரி சரி இப்போது நிகழ் காலத்திற்கு வருகிறேன்.
ஈஷாவில் பக்தர்கள் எல்லோரும் இசையின் நுணுக்கங்கள் புரிந்ததோ இல்லையோ மகுடிக்கு ஆடும் பாம்பைப் போல் தன்னை மறந்து ஈடுபட்டார்கள்.என்னால் தான் அந்த மயக்கத்தை ஜீரணிக்க முடியவில்லை.ஒரு வேளை ,நான் வளர்ந்த விதம் அப்படியோ என்னவோ தெரியவில்லை.
ஆனால் கச்சேரி முடிந்த பிறகு ஏன் மனதிலும் ஒரு அதிர்வலை வீசிக்கொண்டு இருந்தது.நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஆழ்ந்த உறக்கம்.நல்ல அனுபவம் தான்.

Wednesday, January 27, 2010
இதுவும் என்னை பாதித்த கவிதை தான்
அவன் பெயர் வெளிச்சம்
அவன் பெயர் அன்பு
அவன் பெயர் சக்தி
அவன் என் சொல்லின்
துணைவன்.......
அவன் யார்........
அவன் ஆணையிட்டால்..
இரவும் பகலாகும்.
பகலும் இரவாகும்.
அவன் இச்சைப்படித்தான்
நட்சத்திரங்கள் கண் சிமிட்டுகின்றன.
அவன் ஏற்பாடு....
பருவ மற்றம்.
அவன் தான் ....
காற்றின் திசை மாற்றி.
அவன் நினைத்தால் போதும்
பூமிப்பெண் பச்சை பட்டு உடுப்பாள்.
அவன் தலையிட்டால்
கடல் நீர் மேகமாகும்.
மேகமும் மழை நீராகும்.
உனக்குத் தெரியுமா
அவன் தீர்மானிக்கும் வரை தான்
மூச்சுக்காற்றும்
உள்ளே போய் வெளியே வரும்.
அப்போது....
நம் நாமாக இருப்போம்.
அவன் முடிவு செய்தால்
நாம் அதுவகிவிடுவோம்.
மரணம் என்பது
பின் மண்டையில் உட்கார்ந்து
எட்டிப் பார்த்தாலும்
அவன் நினைத்தால்
எதுவும் நடக்கும்
எதுவும் நம் கையில் இல்லை......
நீ செய்யும் செயல்கள்
நற்செயலாயின்.....
நீ ஆசீர்வதிக்கப் படுவாய்.
நீ மனிதனாகப்
பிறந்துவிட்டாய்.
இது நீ எப்படிப்பட்டவன்
என்பதற்கான தேர்வு.
மனிதா.......
நீ ஜெயிக்கப் போகிறாயா...?
தோற்கப் போகிறாயா...?
மனிதனே.....
கடவுள் உன்னை உனக்கு உணர்த்துவான்.
மூத்தோர்,முன்னோர், கடவுள்
இவர்களிடம் உனக்கு
அன்பு,மரியாதை பக்தி வேண்டும்.
"நான்" இதை விட்டுவிடு.
கடவுள் என்ற மதம்
சொல்லும் வழி
அதுவே
நீ செல்லும் வழி
खुदा என்ற உருதுக் கவிதை என்னை மிகவும் பாதித்ததுகவிஞரின் கற்பனையும் என் மன சிதறல்களும் இணைந்துள்ளன.

Monday, January 18, 2010
என்னை பாதித்த கவிதை
पुकार
அழைப்பு
திருப்தி என்பதை அறியாத
தாகம்,கவலை,குழப்பம்
நிறைவற்ற மனதுடன்
எப்போதுமே ஒரு
விலக்கப்பட்ட பார்வையுடன்
கம்மிய குரலுடன்
என் மனதில் எழும்
வேதனைக் குரல்.....
ஓங்கி ஒலிக்கிறது
என்னை யாரும் நேசிக்க வில்லை............
கடலுடன் அலைகளின்
த்வந்த யுத்தம்...
கரம் நீட்டி வான் காதலனைத்
தழுவத் துடிக்கும்
அலைக் காதலி,
நீண்டு பரந்துவிரிந்த
தெறித்து விளையாடும்
ஒவ்வொருத் துளித் தண்ணீரும்
வேதனைக் குரல் எழுப்புகிறது......
என்னை யாரும் நேசிக்க வில்லை............
பூமி அன்னையின் கருணைக் கண்கள்
ஏன் என்னைப் பார்க்க வில்லை ?
நிலமகளின் ஒரு கீற்றுப் புன்னகை
என் வாழ்வின் செயல்பாடுகளை
மென்மையாக ,பிரகாசமாக,
வெளிச்சப்புள்ளிகளாய் மாற்றிவிடும்....
ஆனால்....
அவளும் தான் ஓலமிடுகிறாள்
யாரும் என்னை நேசிக்க வில்லை.........
காலைபனியின் புதியராகம்.
இசைபடும் இனியவேளை.
ஆனால்.....கூடவே
ஒலிக்கும் அத்ருப்தியின்
அபஸ்வரம்........
எங்கும் வஞ்சனை,வேதனை....
துன்பம்,பேராசை....
இருளரக்கன் மெல்ல பூமிப்பெண்ணை
விழுங்கத் தொடங்குகிறான்.
அப்போதும் மெல்லிய விசும்பலுடன்
ஓர் ஓலம்......கேட்கிறது.
யாரும் என்னை நேசிக்க வில்லை........
இருள் அழகியின் நெற்றியில்
பொட்டிடும் நிலா மகள்.
அவளிடம் இருந்து விழாதா?
சுவாதி நட்சத்திரத் துளி.....
என் இதயம் என்னும் முத்துசிப்பியில்
முளைத்திடுமே
வெண் முத்துக் குட்டி.....
ஆனால் அதோ கேட்கிறதே ஓலம்
யாரும் என்னை நேசிக்கவில்லை.......
அங்கே பார் மொட்டுக்களின்
சுமைதாங்கி ..இளம் தளிர்க் கரங்கள்
மெல்லிய கிளை பரப்பி
மலர்க் கூட்டம் சுமக்கும் மரக் கூட்டம்.
இனிய சுவாசத்தால் மணம்
நிறைக்கும் மலர்மொட்டுக்கள்.
ஆனால்.....
அங்கேயும் விஷ முட்கள் ......
பட்டு மலர் இதழ்கள்
காயப் படுத்தப் படுகின்றன.
என் காதில் ஒலிக்கிறதே...
அதே ஓலம்...அதே குரல்..
என்னை யாரும் நேசிக்கவில்லை..........
இறைவன் சிரிக்கிறான்....
அடே...முட்டாளே.....
நேசம் ,பாசம். இரண்டும்
கடைச் சரக்கல்ல...
எங்கும் கிடைக்காது.....
அதை நாம் தான் தரவேண்டும்....
கண்ணீர் துளிகள் அடகு வைக்கப்பட்டால்தான்
உலகம் கடனாகத் தரும்.
வட்டியுடன் நீ தான் அதை திருப்பித்
தர வேண்டும்....
இதை நீ உணர்ந்தால்....
எங்கும் எப்போதும் உன் ஓலம் ஒலிக்காது.
யாரும் என்னை நேசிக்க வில்லை.......
पुकार
அழைப்பு
திருப்தி என்பதை அறியாத
தாகம்,கவலை,குழப்பம்
நிறைவற்ற மனதுடன்
எப்போதுமே ஒரு
விலக்கப்பட்ட பார்வையுடன்
கம்மிய குரலுடன்
என் மனதில் எழும்
வேதனைக் குரல்.....
ஓங்கி ஒலிக்கிறது
என்னை யாரும் நேசிக்க வில்லை............
கடலுடன் அலைகளின்
த்வந்த யுத்தம்...
கரம் நீட்டி வான் காதலனைத்
தழுவத் துடிக்கும்
அலைக் காதலி,
நீண்டு பரந்துவிரிந்த
தெறித்து விளையாடும்
ஒவ்வொருத் துளித் தண்ணீரும்
வேதனைக் குரல் எழுப்புகிறது......
என்னை யாரும் நேசிக்க வில்லை............
பூமி அன்னையின் கருணைக் கண்கள்
ஏன் என்னைப் பார்க்க வில்லை ?
நிலமகளின் ஒரு கீற்றுப் புன்னகை
என் வாழ்வின் செயல்பாடுகளை
மென்மையாக ,பிரகாசமாக,
வெளிச்சப்புள்ளிகளாய் மாற்றிவிடும்....
ஆனால்....
அவளும் தான் ஓலமிடுகிறாள்
யாரும் என்னை நேசிக்க வில்லை.........
காலைபனியின் புதியராகம்.
இசைபடும் இனியவேளை.
ஆனால்.....கூடவே
ஒலிக்கும் அத்ருப்தியின்
அபஸ்வரம்........
எங்கும் வஞ்சனை,வேதனை....
துன்பம்,பேராசை....
இருளரக்கன் மெல்ல பூமிப்பெண்ணை
விழுங்கத் தொடங்குகிறான்.
அப்போதும் மெல்லிய விசும்பலுடன்
ஓர் ஓலம்......கேட்கிறது.
யாரும் என்னை நேசிக்க வில்லை........
இருள் அழகியின் நெற்றியில்
பொட்டிடும் நிலா மகள்.
அவளிடம் இருந்து விழாதா?
சுவாதி நட்சத்திரத் துளி.....
என் இதயம் என்னும் முத்துசிப்பியில்
முளைத்திடுமே
வெண் முத்துக் குட்டி.....
ஆனால் அதோ கேட்கிறதே ஓலம்
யாரும் என்னை நேசிக்கவில்லை.......
அங்கே பார் மொட்டுக்களின்
சுமைதாங்கி ..இளம் தளிர்க் கரங்கள்
மெல்லிய கிளை பரப்பி
மலர்க் கூட்டம் சுமக்கும் மரக் கூட்டம்.
இனிய சுவாசத்தால் மணம்
நிறைக்கும் மலர்மொட்டுக்கள்.
ஆனால்.....
அங்கேயும் விஷ முட்கள் ......
பட்டு மலர் இதழ்கள்
காயப் படுத்தப் படுகின்றன.
என் காதில் ஒலிக்கிறதே...
அதே ஓலம்...அதே குரல்..
என்னை யாரும் நேசிக்கவில்லை..........
இறைவன் சிரிக்கிறான்....
அடே...முட்டாளே.....
நேசம் ,பாசம். இரண்டும்
கடைச் சரக்கல்ல...
எங்கும் கிடைக்காது.....
அதை நாம் தான் தரவேண்டும்....
கண்ணீர் துளிகள் அடகு வைக்கப்பட்டால்தான்
உலகம் கடனாகத் தரும்.
வட்டியுடன் நீ தான் அதை திருப்பித்
தர வேண்டும்....
இதை நீ உணர்ந்தால்....
எங்கும் எப்போதும் உன் ஓலம் ஒலிக்காது.
யாரும் என்னை நேசிக்க வில்லை.......
Sunday, January 17, 2010
மதுரை சித்தப்பா
அம்மாவின் தங்கையின் கணவர் என்ற உறவு தான் என்றாலும் அப்பா இளவல் என்று சொல்லி பேசியதாலும் ஏதோ ஒரு இனம் புரியாத பாசம் .மதுரையின் திருவிழா அறிமுகமானது அவரால் தான்.மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளியில் பாரதியார் பயன் படுத்திய நாற்காலி,அவர் திருத்திய கட்டுரை நோட்டுக்களை காண்பித்த சித்தப்பா என் மனதில் ஹீரோ ஆனார்.தமிழை " இருந்தமிழே .....அருந்தமிழே..செந்தமிழே..விதம் விதமாக அடைமொழியின் வாயிலாக அறிமுகப்படுத்தி தமிழ் மேல் ஒரு தணியாத தாகத்தை ஏற்படுத்தியவர்.
நா பா வின் நண்பர் என்ற செய்தி இன்னும் அவரை என் மனதில் உயரத் தூக்கி வைத்தது.அவர் எம்.ஏ. தேர்வுக்கு தயார் செய்த சிலப்பதிகார உரை என்னை மதுரைக் காண்டத்தைப் படிக்கத் தூண்டியது.
சித்தப்பா என்னை தினமணி பிரஸ் இல் என் 11th தேர்வு முடிவுகளை அச்சாகும் போதே பார்த்து மலைக்க வைத்தார்.அதன் பலனாக அப்பாவிடம் எனக்கு transister பரிசு கிடைத்தது.
அவனியாபுரம் வீட்டில் இருந்து மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு நடத்தியே கூடி வந்து என்னை மதுரையின் காதலி ஆகினார்..கோவிலின் உள்ளே தமிழ் சங்கம் நடக்கும் இடத்தைக் காட்டினார்.அப்போது என் கனவுகள் பாண்டியனின் சங்கம் கண்ணுக்குத் தெரிந்தது.
சித்தப்பாவிடம் நான் மலைத்த இன்னொரு விஷயம் அவர் ஒரு அரசியல் வாதி. தி.மு.க.பேச்சாளர்.நாத்திகம் பேசுவார்.தோளில் துண்டுடன் அவர் பேசும் தமிழ் என்னைக் கட்டி போடும்.
அப்படி நான் பார்த்து வியந்த சித்தப்பா இப்போது வயோதிகம் ,நோய்.ஆகிய காரணங்களால் தளர்ந்து நேற்று என் கைகளை அழுந்த பிடித்த போது மனம் கலங்கி விட்டேன்.காலம் எவ்வளவு கொடூரமானது.மனிதர்களை எப்படி மாற்றிப் போடுகிறது?இது புரியாமல் நாம் இன்னும் குழம்பிக்கொண்டு இருக்கிறோம்.

Monday, January 11, 2010
இன்னொரு இழப்பு
சென்ற வியாழன் .ஒரு கருப்பு நாள் சென்ற தலைமுறையின் இன்னொரு கிளை காணாமல் போய் விட்டது.என் தாயின் சகோதரி....... என் சித்தி..... இவ்வுலக வாழ்க்கை விட்டு சகோதரியுடன் இணைந்தார்.சித்தி....எல்லோருக்கும் போல என் நினைவில் நல்ல நிகழ்வுகள் ஒன்றும் பதிவாகவில்லை.அப்படி ....ஒரு ...நெருக்கமான தொடர்பும் இல்லை..இருந்தும்.....இழப்பு மனதில் ஒரு பாரமாக தங்கிக் கொண்டு விட்டது.இனி தாத்தா வீட்டுத் தொடர்பு என்பது மாமா மட்டும் தான்.இளமையில் மாமாவுடன் கழித்த நாட்கள் அசை போட்டுப் பார்க்கும் அளவுக்கு ....சுவாரஸ்யமான ..நாட்கள் தான்.

Wednesday, January 6, 2010
இன்னொரு பொங்கலின் வருகை
இதோ ....வந்து கொண்டே இருக்கிறது இன்னொரு தை மாதம்.....ஆனால் என்ன கோலம் போடப்போகிறாய் என்று விசாரிக்க அம்மா இல்லை .கலர் கோலப்பொடி வாங்கி விட்டாயா?என்று கேட்கவும் யாரும் இல்லை.ஒரு சோம்பலான சோகமான பொங்கல் வந்து கொண்டே இருக்கிறது.ஆனாலும் நான் மனதளவில் என்னை தயார் படுத்திக் கொண்டு விட்டேன்.ஏதோ இனிப்பில்லாத பொங்கலை வரவேற்கத் தான் போகிறேன்.
தெருவெங்கும் கோலம் போடும் ஆர்வம் இல்லை.இந்த தடவை தினமலர் கோலப்போட்டிக்குயாரும் வரவும் இல்லை.
எனக்கும் புதிய கற்பனைகள் வறண்டு போன மாதிரி இருக்கிறது.உடம்பு வேறு சரியில்லை..மார்கழிக் கோலமே மிஸ்ஸிங்.
ரமா அன்று சொன்னது போல இத்தனை வயதுக்குப் பிறகும் பெற்றோரின் பிரிவு இப்படி வாட்டும் போது சிறு வயதில் இழப்பவர்கள் எவ்வளவு துரதிருஷ்டசாலிகள்.
அதனால் தான் "தந்தை தாய் இருந்தால் " என்ற பாட்டைக்கேட்கும் போதெல்லாம் துக்கம் அடைக்கிறது.
சரி வரும் பொங்கலை ஏன் வரவேற்காமல் இருக்க வேண்டும்.
தைமகளே வா.....
நன்மைகள் ,மகிழ்ச்சி
நிறைக்க வா.......
எல்லோரும் மகிழ்ந்து
கொண்டாட வா மகளே வா.....
சந்தோஷங்கள்,வாழ்க்கையின்
அத்தியாயங்கள்.மாற்றங்கள்
மகிழ்ச்சியின் ஊற்றுக்களை
பொங்கச் செய்யத்
தை மகளே வா..........
உன் வரவு நல வரவாகட்டும்.

Friday, January 1, 2010
எது விடுதலை
வழக்கம் போல ஒரு மார்கழி மாதத்து பகல்.வேலை முடிந்தது.புதிதாக வந்த வார இதழின் புது மணம் நாசியின் உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி விட்டன.வெது வெதுப்பான இளம் வெயில் வா... வா... என்று அழைத்தது.செண்பக மரத்தின் தண்டில் ஏதோ அசைவு தெரிந்ததும் அங்கே கவனம் சென்றது.என்ன இது புதியதாக இருக்கிறதே! சின்ன ஆச்சரியத்துடன் பார்வை படர்ந்தது.ரகசியமான சந்தோஷம்.ஒரு சின்ன லோலாக்குப் போலே செண்பக மரத் தண்டில் ஏதோ ஊஞ்சலாடிக்கொண்டு இருந்தது.பக்கத்தில் போய் கண்கள் சுருக்கிப் பார்த்தேன்.அடடா ஒரு கூட்டுப்புழுவின் பரிணாம வளர்ச்சி.உள்ளுக்குள் ஏதோ அசைவது தெரிந்தது.புது புத்தகத்தின் ஈர்ப்பு கொஞ்சம் குறைய....உள்ளே போய் சேர் கொண்டு வந்தேன்.பார்வை அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தேன்.அந்த ஊசலாடும்
வடிவம் அறிமுகமான வடிவம்.நெற்றியைச் சுருக்கி யோசித்தேன்.ஓ.....அம்மாவின் கல்யாண போட்டோவில் காதுக்கு அருகில் ரகசியம் பேசிய லோலாக்கு டிசைன் தான்.பெரிய கண்டுபிடிப்பு .என்னை நானே தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.அந்த கூடு இன்னும் வேகமாக அசைந்தது.நுனியில் இப்போது ஒரு விரிசல்.பார்வை விலக்காமல்கவனித்தேன்.ஒரு அழகான வண்ணத்துப் பூச்சி முட்டி மோதி வெளியே வந்தது.அடடா...என்னிடம் கேமரா இல்லையே!
நல்லகருப்பு சிறகுகள்.வெளிர் மஞ்சளும் பச்சையும் கலந்த புள்ளிகள்.வெளியே வந்த அந்த சின்ன உயிருக்கும் இந்த புற உலகம் ஆச்சரியமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.கொழுக் மொழுக் என்று உள்ளே போன நாமா இப்படி ? என்று நினைத்தது போலும்.ஒரு நிமிடம் சும்மாவே இருந்தது,பிறகு மெல்ல சிறகை ஆட்டிப் பார்த்தது.அப்படியே மெல்ல மேலே எழும்பியது.பூச்சிக்கும்கொஞ்சம் பயம் போலே ,சிறகை ஆட்டுவதை நிறுத்திக் கொண்டது,இப்போது கீழே வந்தது.மீண்டும் ஒரு முயற்சி.இப்போது இன்னும் கொஞ்சம் மேலே .....அப்பாடி .....ஒரு வழியாக பறக்க ஆரம்பித்து விட்டது.பக்கத்தில் வாடாமல்லி மொட்டுக்கள் பச்சையும் வாடாமல்லி கலருமாக பட்டுப்பூச்சியை அழைத்தன.பூவின் மீது பட்டும் படாமல் அமர்ந்தது.வாய்ப்பகுதியில் இருந்து ஒரு சுருள் நீண்டது.தேன்சுவை உணர்ந்த அந்த பூச்சி மலருக்கு மலர் தாவி பிறவியை ரசித்தது.சுற்றிலும் மலர்ச் செடிகள் .பூச்சி பறந்தது.என் கவனமும் சிதறியது.அப்போது ஒரு தேன் சிட்டு தான் கூட்டை விட்டு எட்டிப் பார்த்து ட்விக் ட்விக் என்று கொஞ்சியது.ஒரு நிமிஷம் தான் பூவின் தேனை ரசித்துப் பறந்த அந்த பட்டுப்பூச்சி தேன் சிட்டின் வயிற்றுக்குள்..ஐயோ....மனம் பதறியது.என்ன உலகமடா இது.கூட்டுப்புழு பட்டுப் பூச்சி ஆனது விடுதலையா...இல்லை என் பிறந்தோம் என்று உணரும் முன்னே உலகை விட்டுப் போனது விடுதலையா....யோசித்தேன்....விடை கிடைக்கவில்லை.

Subscribe to:
Posts (Atom)